மதுரை நிறுவனத்திற்கு சொந்தமாகிய இத்தாலி நிறுவனம்.. இந்த நிறுவனத்தால ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெருமிதம்!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் டிவிஎஸ் மொபிலிட்டி (TVS). இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது எஸ்ஐ ஏர் ஸ்பிரிங்ஸ் (SI Air Springs). இந்த நிறுவனமே இத்தாலியை தளமாகக் கொண்டு வாகனங்களுக்கான முக்கிய பாகங்களை தயார் செய்து வரும் நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராபர்டோ நட்டி குழுமம் (Roberto Nuti Group) எனும் நிறுவனத்தையே அது வாங்கியிருப்பதாக நேற்றைய (ஜூலை 1) அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலினால் ராபர்டோ நுட்டி குழுமத்தின் 100 சதவீத கொள்முதலை டிவிஎஸ் மொபிலிட்டி மறைமுகமாக தன் வசம் உள்ளடக்கியுள்ளது.

எனவே இதன் வாயிலாக டிவிஎஸ் மொபிலிட்டி அதன் தயாரிப்புகளின் வரம்பை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, உலக சந்தையில் அதன் நிலைப்பாட்டை வலுப்படுத்தவும் இந்த கையகப்படுத்திக் கொள்ள அது பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கையகப்படுத்தலைத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் இணைந்துச் செயல்பட தொடங்கியுள்ளன.

Tvs mobility groups acquisition roberto nuti group

தமிழகத்தை தாயகமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம் சமீபத்திலேயே இத்தாலி நாட்டில் அதன் கால்தடத்தைப் பதித்தது. தன்னுடைய வருகையைப் பதிவு செய்யும் விதமாக அது இந்தியர்களின் பிரியமான பைக் மாடல்களான அப்பாச்சி ஆர்ஆர்310, அப்பாச்சி ஆர்டிஆர் 310, ரைடர் ஆகிய பைக் மாடல்களையே இத்தாலியில் களமிறக்கி இருக்கின்றது.

இதுதவிர என்டார்க் மற்றும் ஜுபிடர் 125 போன்ற இன்னும் சில தன்னுடைய புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன மாடல்களையும் டிவிஎஸ் அங்கு விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது. இதுமட்டுமின்றி, தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் சிலவற்றையும் இத்தாலி நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது டிவிஎஸ்.

இந்த நிலையிலேயே யாரும் எதிர்பார்த்திராத ஓர் வேலையாக இத்தாலி நாட்டிற்கு சொந்தமான நிறுவனத்தை டிவிஎஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் மொத்தமாக கையகப்படுத்தி இருக்கின்றது. இதன் வாயிலாக இத்தாலி கொடி பறந்துக் கொண்டிருந்த அந்த நிறுவனத்தில் தற்போது இந்தியாவின் கொடியும் பறக்க தொடங்கி இருக்கின்றது.

ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகப் பெரிய அளவில் விரிவுப்படுத்தி இருக்கின்றது, டிவிஎஸ் மொபிலிட்டி. டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் மற்றும் டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் ஆகியவை ஐரோப்பாவில் நன்கு நிறுவப்பட்ட இருப்பைக் கொண்டுள்ளது. இந்த நிலையிலேயே இத்தாலியிலும் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தும் பணியில் டிவிஎஸ் மொபிலிட்டி களமிறங்கி இருக்கின்றது.

இந்த கையகப்படுத்தல் குறித்து எஸ்ஐ ஏர் ஸ்பிரிங்ஸின் இயக்குனர் பி.ஸ்ரீநிவாஸ்வரதன் கூறியதாவது, "இந்த கையகப்படுத்தல் எங்களின் உலகளாவிய விரிவாக்க உத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். எங்களின் தனித்துவமான திறன்களை நட்டி குழுமத்தின் சஸ்பென்ஷன் சிஸ்டம் நிபுணத்துவத்துடன் இணைக்கவும் இந்த கையகப்படுத்த உதவு இருக்கின்றது" என்றார்.

எஸ்ஐ ஏர் ஸ்பிரிங்ஸ், தமிழ்நாட்டின் மதுரையில் இருந்து இயங்குகிறது. பெரிய வணிக வாகனங்கள், பேருந்துகள், டிரெய்லர் போன்றவற்றின் உற்பத்தியாளர்களுக்கும், இந்தியன் இரயில்வேஸுக்கும் தேவையான முக்கிய பாகங்களையே இந்த நிறுவனம் தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதேபோல், ராபர்டோ நட்டி குழுமம், தொழில்துறை மற்றும் வணிக வாகனங்களுக்கான அதிர்வு உறிஞ்சிகள் (shock absorbers) மற்றும் ஏர் ஸ்பிரிங்குகளை உற்பத்தி செய்து வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கையகப்படுத்தத்தலைத் தொடர்ந்து ராபர்ட்டோ நட்டி இனி அனைத்து பணிகளையும் எஸ்ஐ ஏர் ஸ்பிரிங் வாயிலாகவே செய்ய இருக்கின்றது. அதேவேளையில், இந்த நிறுவனம் வழக்கம் போல் செயல்படும் என கூறப்பட்டு உள்ளது. அதேவேளையில், இந்த வெளிநாட்டு நிறுவனத்தின் வாயிலாக தன்னுடைய வாகனங்களுக்கான பாகங்கள் தயாரிப்பு பணிகளை டிவிஎஸ்-இன் எஸ்ஐ ஏர் ஸ்பிரிங்ஸ் அடுத்த லெவலுக்கு விரைவிலேயே எடுத்துச் செல்லும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 2, 2024, 14:45 [IST]
English summary
Tvs mobilitys si air springs acquires italy based roberto nuti group
மேலும்... #tvs motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+