டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ஸ்கூட்டரை குறி வைத்த திருடன்! எப்படின்னு நடிச்சு காட்டுன வீடியோ செம வைரல்!

சென்னை பகுதியில் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ஸ்கூட்டரை குறி வைத்து திருடிய திருடனை போலீசார் கைது செய்துள்ளார்கள். குறிப்பிட்ட அந்த மாடல் வண்டியை மட்டும் குறி வைத்து அந்த திருடன் திருடியது எப்படி ? அதில் தான் ஏன் கியர் பைக்குகளை திருடாமல் ஸ்கூட்டி பைக்கை திருடினான் என அவனே சொல்லிய விளக்கம் அளிக்கும் வீடியோ பலரை குபீரென சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னை தாம்பரம் பகுதியில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி பெப் ஸ்கூட்டர் சமீப நாட்களாக அதிக அளவில் திருடு போனதை போல கண்டுபிடித்தார்கள். இப்படியான ஸ்கூட்டர் திருட்டு போவதாக தாம்பரம் பகுதியில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து இது குறித்து தீவிரமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

tvs scooty pep thief

இதையடுத்து திருடு போனதாக சொல்லப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தார்கள். அதில் குறிப்பிட்ட நபர் திருடு போனதாக சொல்லப்பட்ட வாகனத்தை ஓட்டிச் சென்ற வீடியோ பதிவாகி இருந்தது. அந்த வீடியோவை வைத்து குறிப்பிட்ட நபர் யார் என விசாரணை செய்தார்கள். போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தான் இந்த வாகனத்தை ஓட்டி சென்றார் என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடும்போது இவர் திருடி சென்ற ஒரு ஸ்கூட்டியில் கூடுவாஞ்சேரி ஊரப்பாக்கம் பகுதியில் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பிடிக்க அதில் உள்ள போலீசாருக்கு உத்தரவு பறந்தது. இதையடுத்து அவர் போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர்தான் சென்னை பகுதியில் பல இடங்களில் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ஸ்கூட்டரை குறி வைத்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் திருடிய வாகனங்களை மீட்டார்கள். அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐந்து வாகனங்களையும் அவர் ஏற்கனவே விற்பனை செய்த ஒன்பது வாகனங்களையும் போலீசார் மீட்டனர்.

சென்னை பகுதியில் திருடிய இந்த ஸ்கூட்டி பெப் வாகனத்தை இவர் திருவண்ணாமலை, வந்தவாசி பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்குள்ள கிராம மக்களுக்கு வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி விற்பனை செய்துள்ளார். இதை விவரம் தெரியாமல் அங்குள்ள கிராம மக்கள் செகண்ட் ஹேண்டில் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்கள். இதையடுத்து போலீசார் யாரிடம் எல்லாம் வாகனத்தை விற்றார்களோ அவர்களிடம் சென்று அந்த வாகனத்தை மீட்டு வந்துள்ளார்கள்.

மேலும் நடந்த விசாரணையில் ஹரிஹரன் சுமார் பத்து ஆண்டுகளாக சூளைமேடு, சைதாப்பேட்டை, மாம்பலம், மயிலாப்பூர், சேலையூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் 50க்கும் மேற்பட்ட டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் வாகனத்தை திருடி இப்படி செகண்ட் ஆண்டில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இவர் வாகனத்திற்கு முன்பே ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்துள்ளார்.

இப்படியாக வாகன திருடர்கள் பலர் இருக்கும் போது இவர் வாகனங்களை திருடிய விதம் தான் ஹைலைட். இவர் வாகனங்களை எப்படி திருடினார் என போலீசார் நடித்து காண்பிக்க சொல்லி எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் இவர் எப்படி வாகனத்தை திருடுவார் என செய்து காண்பித்தார். இது பலரை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் இவர் வாகனத்தை திருடியது தெரியவந்துள்ளது.

இவர் ரோட்டில் நீண்ட நேரமாக கவனிப்பாரற்று சரியான பார்க்கின் இடத்தில் இல்லாமல் முறையற்ற பார்க்கிங் செய்திருக்கும் வாகனத்தை குறிவைத்து பார்க்கிறார். அந்த வாகனத்தின் உரிமையாளர் அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு முதலில் சைடு லாக் இருக்கிறதா என செக் செய்கிறார். சைடு லாக் இருந்தால் சைடு லாக்கையும் உடைத்து விடுகிறார்.

பின்னர் ஒரு துண்டு ஒயரை எடுத்து பைக்கின் முன்பக்க வீலுக்கு பின் பகுதியில் உள்ள வயரிங்கை எடுத்து ஏதோ மாற்றம் செய்கிறார். மாற்றம் செய்துவிட்டு வாகனத்தில் ஏறி அமர்ந்து வாகனத்தை ஸ்டார்ட் செய்கிறார். வாகனம் சாவி இல்லாமலேயே ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. இதை பார்த்ததும் பலருக்கும் அதிர்ச்சியாகிறது. வாகனத்தை சாதி இல்லாமலேயே அசால்டாக செல்ஃப் ஸ்டார்ட் செய்கிறாரே என பலர் வியந்து பார்க்கிறார்கள்.

இவர் இப்படித்தான் வாகனங்களை திருடி சென்றதாக போலீசாரிடம் கூறுகிறார். போலீசார் இவரிடம் ஏன் கியர் பைக்குகளை திருடுவதில்லை என கேட்டபோது அதற்கு அவர் சொல்லிய பதில் தான் பலரை குபீரென சிரிக்க வைத்தது. அவருக்கு கியர் பைக் ஓட்ட தெரியாது அதனால் அவரால் வியர்வைக்கு திருட முடியவில்லை என அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனால் நீங்கள் வெளியில் செல்லும்போது வாகனத்தை முறையான பார்க்கிங் இடத்தில் நிறுத்துங்கள். எப்பொழுதும் சிசிடிவி கேமரா இருக்கும் இடமாக பார்த்து வாகனத்தை நிறுத்தினால், உங்கள் வாகனம் திருடு போனாலும் அதை எளிமையாக கண்டுபிடித்து விடலாம். டிவிஎஸ் நிறுவனம் இந்த வாகனங்களில் உள்ள இந்த குறைபாட்டை என்ன என ஆய்வு செய்து அதை உடனடியாக சரி செய்தால் இந்த வாகனம் திருடப்படுவது தவிர்க்கப்படும்.

Source: Titanicmedia

More from DriveSpark

Article Published On: Thursday, August 29, 2024, 13:18 [IST]
English summary
Tvs scooty pep thief arrested chitlapakkam 14 two wheelers recovered
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+