துபாயையே மிரள விட்ட டிவிஎஸ்.. அந்நாட்டு ஷேக் தொடங்கி நம்ம ஊரு ஆளுங்க வரை வாயடைச்சு நிக்கிறாங்க!
தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் (TVS) நிறுவனம், நேற்றிரவு இந்திய நேரப்படி சுமார் 10 மணி அளவில் மிக தரமான புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 'டிவிஎஸ் எக்ஸ்' (TVS X) எனும் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
இதற்கு அறிமுக விலையாக ரூ. 2.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுேம ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக நிகழ்ச்சியை டிவிஎஸ் நிறுவனம் துபாயில் வைத்து அரங்கேற்றியது. டிவிஎஸ்-இன் இந்த செயல் ஒட்டுமொத்த உலகத்தின் வாயையும் பிளக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த புதுமுக இருசக்கர வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வருவதை மிகப் பெரிய ஆர்பாட்டமாகவே டிவிஎஸ் செய்திருக்கின்றது.

நிறுவனத்தின் இந்த செயல் அனைவரையும் வாயடைத்து நிற்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதைவிட ஒட்டுமொத்த இருசக்கர வாகன காதலர்களையும் மெய்மறந்து நிற்கச் செய்யும் வகையில் நிறுவனம் புதிய எக்ஸ் இ-ஸ்கூட்டர் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபற்றி அறிய வேண்டிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.
பேட்டரி பேக், ரேஞ்ஜ் திறன் மற்றும் மின் மோட்டார் விபரம்: டிவிஎஸ் நிறுவனம் புதுமுக எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.4 kWh பேட்டரி பேக்கையே பொருத்தி இருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ வரை பயணிக்க முடியும்.

இந்த பேட்டரி பேக்கை நிறுவனத்தின் ஸ்மார்ட் எக்ஸ் ஹோம் ரேபிட் சார்ஜர் வாயிலாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் வெறும் 50 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீத சார்ஜை ஏற்றிவிட முடியும். அதேவேளையில், 950W போர்டபிள் சார்ஜர் வாயிலாகவும் சார்ஜ் செய்துக்கொள்ள முடியும்.
இதனைப் பயன்படுத்தும் பட்சத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும். இந்த போர்டபிள் சார்ஜரின் விலை ரூ. 16,275 ஆகும். இந்த விலை ஜிஎஸ்டி உடன் சேர்த்து என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 11kW மற்றும் 40 என்எம் டார்க்கை வெளியேற்றும் பிஎம்எஸ்எம் (Permanent Magnet Synchronous Motor) மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரின் உச்சபட்ச வேக திறன் மணிக்கு 105 கிமீ ஆகும். இதேபோல், இதனால் வெறும் 2.6 செகண்டுகளிலேயே மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என டிவிஎஸ் தெரிவித்து இருக்கின்றது.
சிறப்பம்சங்கள் மற்றும் ரைடு மோடு விபரங்கள்: 10.25 அங்குல டிஎஃப்டி திரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதை எந்த கோணத்திற்கு வேண்டுமானாலும் அட்ஜஸ்ட்செய்து கொள்ள முடியும். இது ஓர் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட திரை ஆகும். இத்துடன் மியூசிக்கை கேட்கும் வசதியும் இந்த திரையில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், மினி ஸ்மார்ட்ஃபோன் போல இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், நேவிகேஷன் சிஸ்டம், வீடியோவை பார்க்க மற்றும் கேம் விளையாடவும் இந்த திரையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்துடனேயே மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. எக்ஸ்டீல்த், எஸ்டிரைட், எக்ஸோனிக் ஆகியவையே அவை ஆகும். மேலும், ரிவர்ஸ் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு ஃபங்க்சன் ஆகிய அம்சங்கள் டிவிஎஸ் எக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
பிரேக்கிங் சிஸ்டம்: மிக சிறந்த பிரேக்கிங் செட்-அப்பையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிவிஎஸ் வழங்கி இருக்கின்றது. முன் பக்க வீலில் 220 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 195 மிமீ டிஸ்க்கும் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஏபிஎஸ் (albeit a single-channel system) தொழில்நுட்பமும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அம்சத்தை பெறும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவே ஆகும்.
விலை மற்றும் விற்பனை விபரம்: டிவிஎஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏற்கனவே கூறியதைபோல் ரூ. 2.50 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த ஸ்கூட்டருக்கு ஃபேம்2 மானியம் கிடைக்காது என்பதால் இந்த அளவு அதிக விலை அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
புக்கிங் பணிகள் ஏற்கனவே இந்த புதிய வாகனத்திற்குத் தொடங்கிவிட்டது. இதன் டெலிவரி பணிகள் நவம்பர் மாதமே தொடங்கப்பட இருக்கின்றது. மேலும், முதல் 2 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் மற்றும் சிறப்பு தொகுப்புகள் அடங்கிய பேக்கேஜை இலவசமாக வழங்க இருக்கின்றது. இதன் மதிப்பு ரூ.18 ஆயிரம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் அதன் புதிய 'எக்ஸ்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது மின்சார இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இதற்கு தற்போது பெங்களூருவில் மட்டுமே புக்கிங் பணிகள் தொடங்கி உள்ளன. விரைவில் நாட்டின் மற்ற மாநிலங்களிலும் புக்கிங் பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









