ஸ்கூட்டியில் முதலிரவு கொண்டாடிய இளசுகள்! இந்த வீடியோக்கு முன்னாடி இங்கிலீஷ் படம்லாம் ஓரமாதான் நிக்கணும்!
டூவீலர்கள் (Two-Wheelers) என்பது 2 பேர் மட்டுமே பயணிப்பதற்கானது. ஆனால் இந்தியாவில் பலரும் இதனை பொருட்படுத்துவது கிடையாது. சாலை விபத்து (Road Accident) அபாயங்களை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், 3 பேர், 4 பேர் என டூவீலர்களில் பயணம் செய்கின்றனர்.
அத்துடன் ஹெல்மெட்களையும் (Helmets) அணிவதில்லை. சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்தியாவில் மோசமான புதிய கலாச்சாரம் ஒன்று வேகமாக பரவி வருகிறது.

டூவீலர்களில் பயணம் செய்யும்போது முத்தம் (Kiss) இட்டு கொள்வதும், கட்டியணைத்து (Hug) கொள்வதும்தான் அந்த மோசமான கலாச்சாரம். சமீபத்தில் பைக் (Bike) ஒன்றில், இரண்டு இளம்பெண்கள் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டு கொண்டு பயணம் செய்ததை நம்மால் காண முடிந்தது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் (Tamil Nadu) நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அந்த வைரல் வீடியோ (Viral Video) ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது மேலும் ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆம், நட்ட நடு ரோட்டில் ஸ்கூட்டர் (Scooter)ஓடிக்கொண்டிருந்தபோதே, 2 இளசுகள் 'லிப் கிஸ்' (Lip Kiss) அடித்துள்ளனர். இதற்கே அதிர்ச்சியாகி விட வேண்டாம்.

இந்த சம்பவத்தில் இன்னொரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. லிப் கிஸ் அடித்த இருவரும் ஆண்கள் என்பதுதான் அந்த பேரதிர்ச்சி. சமூக வலை தளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் 3 இளைஞர்கள் ஒரு ஸ்கூட்டரில் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
அதில் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்ட, மற்ற 2 இளைஞர்களும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டு கொள்கின்றனர். பின்னால் ஒரு வாகனத்தில் வந்த நபர் இதனை வீடியோ எடுக்க, அது சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதில், முத்தமிட்டு கொண்ட 2 இளைஞர்களும் ஹெல்மெட் அணியவில்லை. ஸ்கூட்டரை ஓட்டிய நபர் ஹெல்மெட் அணிந்திருந்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. சமூக வலை தளங்களில் இந்த செயலுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட 3 பேரையும் காவல் துறை அதிகாரிகள் தீவிரமாக தேட தொடங்கியுள்ளனர். எனவே அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் வேண்டுமென்றே இந்த செயலை செய்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வைரல் வீடியோக்கள் மற்றும் சமூக வலை தளங்களில் கிடைக்கும் வெறும் லைக்குகளுக்காக வாகனங்களில் பலர் தற்போது அத்துமீறி நடந்து வருகின்றனர்.
இதுபோன்ற அநாகரீமான செயல்கள் மட்டுமல்லாது, ஆபத்தான பைக் மற்றும் கார் ஸ்டண்ட்களையும் (Car Stunts) பலர் பொது வெளியில் செய்து கொண்டுள்ளனர். இத்தகைய நபர்கள் மீது காவல் துறை அதிகாரிகள் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் என்ன நடந்து விட போகிறது? என்ற அசட்டு தைரியத்தில் பலர் விதிமுறைகளை மீறி கொண்டேதான் இருப்பார்கள்.


Click it and Unblock the Notifications








