காசில்லாததால் பேருந்தின் அடியில் கம்பியை பிடித்துக்கொண்டு 80 கி.மீ பயணம் செய்த சிறுவர்கள்..!!

Written By:

பேருந்திற்கு அடியில் கம்பியை பிடித்துக்கொண்டு 2 சிறுவர்கள் 80 கி.மீ தூரம் பயணம் மேற்கொண்ட செய்தி இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

பேருந்து அடியில் ஒளிந்துக்கொண்டு பயணம் செய்த 2 சிறுவர்கள்..!

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்ஸியில் பல ஏழ்மையான கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பலர் தங்கள் குடும்பத்தினருக்காக குவாங்டங் என்ற மற்றொரு மாகாணத்திற்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர்.

பேருந்து அடியில் ஒளிந்துக்கொண்டு பயணம் செய்த 2 சிறுவர்கள்..!

அதேபோன்ற ஒரு ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள், குவாங்டங்கில் பணியாற்றும் தங்களது பெற்றோரை காண பள்ளியில் இருந்து வெளியேறினர்.

பேருந்து அடியில் ஒளிந்துக்கொண்டு பயணம் செய்த 2 சிறுவர்கள்..!

சிறுவர்களது பெற்றோர் குவாங்டங் மாகாணத்தில் பணிபுரிவதால், அங்கு செல்வதற்காக அவர்கள் இருவரும்குவாங்ஸி பேருந்து நிலையத்திற்கு சென்றனர்.

அப்போது சிறுவர்கள் இருவரிடமும் காசில்லை. அதனால் எந்த பேருந்து ஊழியர்களும் அவர்களை பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை.

பேருந்து அடியில் ஒளிந்துக்கொண்டு பயணம் செய்த 2 சிறுவர்கள்..!

இதனால் நெருக்கடி நிலைக்கு சென்ற சிறுவர்கள் வேறு வழியில்லாமல், குவாங்கடங் செல்ல புதிய யோசனையை தேர்ந்தெடுத்தனர்.

Trending On Drivespark:

சாவி இல்லாமல் 50 நொடிகளில் ஹை-டெக் முறையில் நடைபெற்ற மெர்சிடிஸ் கார் திருட்டு..!! (வீடியோ)

விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

விமானங்கள் தரை இறங்குவது குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

பேருந்து அடியில் ஒளிந்துக்கொண்டு பயணம் செய்த 2 சிறுவர்கள்..!

சகோதரர்கள் இருவரும் ஒரு பேருந்தின் அடியில் சென்று டயர்களுக்கு பக்காவாட்டில் பெட்டி போன்ற இடத்தில் கம்பி உதவியுடன் உந்தி ஏறி, தரையை நோக்கியவாறு பிடித்துக்கொண்டனர்.

பேருந்திற்கு அடியில் கம்பியை பிடித்தநிலையில் சிறுவர்கள் பயணித்த வீடியோ:

கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், இரண்டு சிறுவர்களும், குவாங்டங் பகுதிக்கு செல்லும் அந்த பேருந்தில் சுமார் 80கி.மீ தூரம் வரை கம்பியை பிடித்துக்கொண்டே பயணம் செய்தனர்.

பேருந்து அடியில் ஒளிந்துக்கொண்டு பயணம் செய்த 2 சிறுவர்கள்..!

ஒரு நிறுத்தத்தில், பேருந்தின் அடியில் பார்த்த சில ஊழியர்கள், சிறுவர்கள் கம்பியை பிடித்தவாறு அமர்ந்திருப்பத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பேருந்து ஊழியர்களுடன் சில பயணிகளும் கவனித்த போது, அதில் சிலர் சிறுவர்களை தங்களது கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்தனர்.

Recommended Video - Watch Now!
[Tamil] 2017 Skoda Octavia RS Launched In India - DriveSpark
பேருந்து அடியில் ஒளிந்துக்கொண்டு பயணம் செய்த 2 சிறுவர்கள்..!

பின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இருவரும் சிறுவர்களை மீட்டனர். வாகன புகைப் படிந்து, சேரும் சக்தியும், மண் புழுதியும் உடம்பெங்கும் அப்பிய நிலையில் சிறுவர்கள் இருந்தனர்.

பேருந்து அடியில் ஒளிந்துக்கொண்டு பயணம் செய்த 2 சிறுவர்கள்..!

8 முதல் 9 வயது இருக்கும் அந்த சிறுவர்களை மீட்டு, உணவு மட்டும் தண்ணீர் வழங்கி பேருந்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Two Boys Traveled 80 km in bus under Carriage. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark