68,000 கி.மீ., பைக்கில் பயணம் செய்து அசத்திய இந்தியர்கள்!

இந்தியாவை சேர்ந்த இருவர் தங்கள் பைக்கிலேயே 68,000 கி.மீ. பயணம் செய்து 5 கண்டங்களில் உள்ள 34 நாடுகளை கடந்துள்ளனர்.

By Balasubramanian

இந்தியாவை சேர்ந்த இருவர் தங்கள் பைக்கிலேயே 68,000 கி.மீ. பயணம் செய்து 5 கண்டங்களில் உள்ள 34 நாடுகளை கடந்துள்ளனர்.

Brothers forever @debasshish @dj.djain PC @herumbkhot

A post shared by Debasshish Ghosh (@oneworldoneride) on

மும்பையை சேர்ந்த திபாஷிஷ் கோஷ் இவர் தானே, மற்றம் குர்கான் பகுதியில் உணவு விடுதி மற்றும் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனமும் நடத்தி வருகிறார். வாகன பிரியரான இவரும் இவரது நண்பர் தாமேந்திர ஜெயின் ஆகியோர் பைக்கில் அதிக தூரம் பயணம் செய்வதை பொழுதுபோக்காக செய்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் பயணம் செய்கையில் அவ்வப்போது வீடியோ எடுத்து யூடியூப்பிலும் போட்டு வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் பைக்கிலேயே நேப்பாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்திருந்தனர்.

Beautiful ride up the mountains @debasshish

A post shared by Debasshish Ghosh (@oneworldoneride) on

மோட்டார் வாகன பிரியராக இவர்கள் பி.எம்.டபிள்யூ, ஹார்லிடேவிட்சன் என பல பைக்குகளை சொந்தமாக வாங்கியுள்ளனர். இவர்கள் தங்களது ஹார்லிடேவிட்சன் பைக்கில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பைக்கிலேயே சென்றுள்ளனர். இவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டினார்.

கடந்த 9 மாதங்களில் 5 கண்டங்களில் உள்ள 34 நாடுகளை இவர்கள் கடந்துள்ளனர். இதற்காக இவர்கள் சுமார் 68,000 கிமீ., தூரம் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அவ்வப்போது பயணம் குறித்த விபரங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்க்தில் பதிவிட்டு வந்துள்ளனர். இவர்கள் மீண்டும் மும்பை திரும்ப தற்போது முடிவு செய்துள்ளனர்.

68,000 கி.மீ., பைக்கில் பயணம் செய்து அசத்திய இந்தியர்கள்!

இது குறித்து திபாஷிஷ் கோஷிடம் கேட்ட போது : "பைக்கில் பல நாடுகள் கடந்து பயணம் செய்வது சந்தோஷமாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த தூரத்தை கடக்க வேண்டும் என்ற இலக்கு தான் எங்களுக்கு கடினமாக இருந்தது. நாடுவிட்டு நாடு போகும் போது விசா பெறுவதிலும் சிக்கல்கள் உள்ளது. ஆனால் திட்டமிட்ட நேரத்தில் முடிந்தளவு தூரத்தை கடக்க முயற்சித்து வருகிறோம். " இவ்வாறு கூறினார்.

68,000 கி.மீ., பைக்கில் பயணம் செய்து அசத்திய இந்தியர்கள்!

இவர்களின் இந்த பயணம் பைக் பயண பிரியர்கள் மத்தியில் புதிய உத்வேத்தை அளித்துள்ளது..

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Article Published On: Wednesday, March 28, 2018, 13:50 [IST]
English summary
Two Friends Went On 68,000 Km Long World Tour On Their Dream Bikes.Read in tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+