டூவீலர் ஓட்டி கொண்டே குளித்த இளைஞர்கள்... எதற்காக தெரியுமா? காட்டு தீயாய் பரவும் வீடியோ!!

டூவீலர் ஓட்டி கொண்டே குளித்த இரண்டு இளைஞர்களின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

டூவீலர் ஓட்டி கொண்டே குளித்த இளைஞர்கள்... எதற்காக தெரியுமா? காட்டு தீயாய் பரவும் வீடியோ!!

இரு சக்கர வாகனங்களை இயக்கும்போது ஹெல்மெட் அணிவது அவசியம். இந்தியாவை பொறுத்தவரை இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தலைகவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டூவீலர் ஓட்டி கொண்டே குளித்த இளைஞர்கள்... எதற்காக தெரியுமா? காட்டு தீயாய் பரவும் வீடியோ!!

ஆனால் பெரும்பாலானோர் இதனை பின்பற்றுவது கிடையாது. இதன் காரணமாக சாலை விபத்துக்களால் பலர் உயிரிழக்கின்றனர். இந்த சூழலில் ஹெல்மெட் அணியாமல் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது உலகம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது அவர்கள் குளித்ததே இதற்கு காரணம்.

டூவீலர் ஓட்டி கொண்டே குளித்த இளைஞர்கள்... எதற்காக தெரியுமா? காட்டு தீயாய் பரவும் வீடியோ!!

இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது குளித்ததால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெற்கு வியட்நாம் பகுதியில் நடைபெற்றுள்ளது. 23 வயதான ஹுய்ன் தன் கான் என்பவரும், மற்றொருவரும் பொது சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது குளித்துள்ளனர். அவர்கள் சட்டை அணியவில்லை.

டூவீலர் ஓட்டி கொண்டே குளித்த இளைஞர்கள்... எதற்காக தெரியுமா? காட்டு தீயாய் பரவும் வீடியோ!!

அத்துடன் ஹெல்மெட்டும் அணியவில்லை. பரபரப்பான சாலையில் அவர்கள் செய்த இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதை நம்மால் காண முடிகிறது. அவர்களுக்கு இடையே ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி அவர்கள் சோப்பு போட்டு குளிக்கின்றனர்.

டூவீலர் ஓட்டி கொண்டே குளித்த இளைஞர்கள்... எதற்காக தெரியுமா? காட்டு தீயாய் பரவும் வீடியோ!!

இந்த வீடியோவில் பின்னால் அமர்ந்திருப்பவர் தன் மீது தண்ணீரை ஊற்றி கொள்கிறார். மேலும் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மீதும் அவர் தண்ணீரை ஊற்றுகிறார். அந்த நபர் ஒரு கையால் இரு சக்கர வாகனத்தை பேலன்ஸ் செய்து கொண்டே முடி மற்றும் முகத்தை கழுவி கொள்கிறார். வீடியோவை வைரல் ஆக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

டூவீலர் ஓட்டி கொண்டே குளித்த இளைஞர்கள்... எதற்காக தெரியுமா? காட்டு தீயாய் பரவும் வீடியோ!!

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆனால் இந்த செய்கையை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானது. வியட்நாமில் உள்ள பின் துவாங் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ போலீஸ் அதிகாரிகளையும் சென்றடைந்துள்ளது.

டூவீலர் ஓட்டி கொண்டே குளித்த இளைஞர்கள்... எதற்காக தெரியுமா? காட்டு தீயாய் பரவும் வீடியோ!!

இந்த வீடியோவில் இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட் தெளிவாக தெரிகிறது. எனவே அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி, இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது குளித்த 2 பேரையும் கண்டறிந்தனர். இதில், டூவீலரை ஓட்டியவர் ஹுய்ன் தன் கான் என்பது தெரியவந்தது. அவருக்கும், அவருடன் பயணித்தவருக்கும் இந்திய மதிப்பில் சுமார் 5,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டூவீலர் ஓட்டி கொண்டே குளித்த இளைஞர்கள்... எதற்காக தெரியுமா? காட்டு தீயாய் பரவும் வீடியோ!!

லைசென்ஸ் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தது, ரியர் வியூ மிரர்கள் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டியது, இன்சூரன்ஸ் இல்லாதது ஆகிய காரணங்களுக்காக அவர்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

உண்மையில் இதுபோன்ற செய்கைகள் மிகவும் ஆபத்தானது. வைரல் ஆக வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் இவ்வாறான செய்கைகளில் ஈடுபடுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் அதிகபட்ச பாதுகாப்பே ஹெல்மெட்தான். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் விபத்துக்களில் உயிரிழக்க தலையில் ஏற்படும் காயமே முக்கியமான காரணமாக உள்ளது.

டூவீலர் ஓட்டி கொண்டே குளித்த இளைஞர்கள்... எதற்காக தெரியுமா? காட்டு தீயாய் பரவும் வீடியோ!!

ஆனால் ஹெல்மெட் அணியும் பட்சத்தில், தலையில் காயம் ஏற்படுவதை தவிர்க்கலாம். எனவே டூவீலர்களில் பயணிக்கும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணியுங்கள். இது அபராதம் செலுத்துவதில் இருந்து உங்களை காப்பாற்றுவதோடு, உங்கள் உயிரையும் காப்பாற்றும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 27, 2020, 12:53 [IST]
English summary
Two Men Take A Bath During Bike Ride : Viral Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+