இந்த சர்க்கஸ் பயணம் தேவையா...? பெங்களூர் டிராஃபிக்கை பற்றி தெரியாது போல!! இணையத்தில் வைரலாகும் வீடியோ
இந்தியா சாலை விபத்துகளில் முன்னிலையில் இருக்கும் நாடுகளுள் ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், சாலை விதிமுறைகள் முறையாக பின்பற்றாதவர்கள் நம் நாட்டில் அதிகப்பேர் இருப்பதே. அத்துடன் சாலையில் ஆபத்தான பயணங்கள் குறித்த வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி நம்மை பயமுறுத்துகின்றன.
அப்படிதான், தற்போது ஒரு வீடியோ பெங்களூரில் இருந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரில் பரபரப்பாக இயங்கும் சாலை ஒன்றில் இருந்து வெளியாகி இருக்கும் இந்த வீடியோ பைக் ஓட்டி ஒருவர் தனது வளர்ப்பு பூனைகள் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிக்காட்டும் விதமாக அவற்றை தனது பஜாஜ் டோமினார் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். இவ்வாறான வீட்டு வளர்ப்பு பிராணிகளை வாகனங்களில் அழைத்து செல்வது வாடிக்கையான ஒன்றுதான் இதில் என்ன ஸ்பெஷல் உள்ளது என நீங்கள் கேட்பது புரிகிறது...
இந்த குறிப்பிட்ட டோமினார் பைக் ஓட்டி எந்தவொரு முறையான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தனது பூனைகளை பின்பக்கத்தில் பையின் மீது அமர வைத்தும், முன்பக்க பெட்ரோல் டேங்கின் மீது அமர வைத்தும் அழைத்து சென்றுள்ளார். அந்த பூனைகளும் கேஷூவலாகவும், ஜாலியாகவும் பைக் ரைடினங்கை அனுபவிக்கின்றன. இந்த சம்பவத்தை அதே சாலையில் சென்ற மற்றொரு வாகன ஓட்டி படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவினை இதுவரையில் மட்டுமே 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இந்த வீடியோ வீட்டு வளர்ப்பு பிராணி பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றாலும், மறுப்பக்கம் கண்டனங்களையும் பெற்றுள்ளது. ஏனெனில் செல்லப்பிராணிகளை வாகனத்தில் அழைத்து செல்லும்போது முறையான உபக்கரணங்களை பயன்படுத்துதல் அவசியமாகும். ஆனால் இவர் எந்தவொரு விழிப்புணர்வும் இன்றி இவ்வாறான ரைடிங்கில் ஈடுப்பட்டுள்ளார். குறுகிய தூர பயணமாக இருந்தாலும், இவ்வாறான மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களை தவிர்த்தல் வேண்டும்.

பூனைகள் பொதுவாகவே கேஷூவலாகவே எல்லா வேலைகளையும் செய்யும், அதுவே பூனைகளின் இயல்பு. அதற்காக அவை எந்தவொரு பிரச்சனையிலும் சிக்கிவிடாது என கூறிவிட முடியாது. ஏனெனில் அந்த 'அசால்ட்' தனமே சில நேரங்களில் அவற்றிற்கு பிரச்சனைகளை உண்டாகிவிடுகின்றன. இந்த வீடியோவிலும் பின்பக்கத்தில் ரைடர் அணிந்திருக்கும் பையின் மீது அமர்ந்திருக்கும் பூனை சவுகரியமாக அமர்ந்திருப்பது போன்றுதான் தெரிகிறது. இருப்பினும் ரைடர் பூனையை மறந்து இடது பக்கத்தில் வேகமாக திரும்பினால் பூனை கீழே விழுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இது பூனையின் உயிருக்கு ஆபத்தாக சென்று முடியும் என்பது மட்டுமின்றி, மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். இவ்வளவு ஏன், கீழே விழும் பதற்றத்தில் ரைடரின் கழுத்தை வேகமாக கீறினால் அழைத்து செல்லும் ரைடரும் விபத்தில் சிக்க நேரலாம். ஏனெனில் அவற்றிற்கு மனிதர்களை போன்ற உணர்வுகள் கிடையாது. சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றால் செயல்பட முடியாது. தனது உயிரை காப்பாற்றி கொள்ளவே அவை முயலும். பின்பக்கத்தில் அமர்ந்திருக்கும் பூனையின் நிலை இவ்வாறு என்றால், முன்னால் அமர்ந்திருக்கும் பூனையின் நிலைமை அதைவிட மோசம்.

ஏனெனில் இந்த பூனையாவது ரைடர் உடன் தொடர்பில் இருக்கிறது. ஆனால் பெட்ரோல் டேங்கில் அமர்ந்திருக்கும் பூனை ரைடர் உடன் எந்தவொரு தொடர்பும் இன்றி, ஏதோ தான் தான் பைக்கை ஓட்டுவது போல், ரைடரில் இருந்து விலகி நன்கு முன்பாக ஹேண்டில்பாரை பிடித்தப்படி பயணிக்கிறது. வீடியோவில் இந்த பூனை, பைக் செல்லும் வேகத்திற்கு அங்கும் இங்கும் அலையுறுவதை பார்க்கலாம். கைகளுக்கு அருகே இருப்பதால், பூனை விழ நேர்ந்தாலும் உடனடியாக பிடித்து கொள்ளலாம் என்கிற திட்டத்தில் ரைடர் அதனை அங்கு அமர வைத்திருக்கிறார் போலும்.
இதில் பிரச்சனை என்னவென்றால், அத்தகைய சூழல் எப்போதுவரும் என்று ரைடருக்கே தெரியாது. அத்தகைய நேரத்தில் விழும் பூனையின் மீதும் கவனம் செலுத்த வேண்டும், மறுப்பக்கம் போக்குவரத்தையும் கவனிக்க வேண்டும், அதிலிலும் பெங்களூர் போக்குவரத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. அத்துடன் அந்த சமயத்தில் பைக்கை ஒரு கையால் ஓட்ட வேண்டியிருக்கும். இவை எல்லாவற்றையும் விட, பின்னால் அமர்ந்திருக்கும் பூனையையும் நியாபகத்தில் வைத்திருக்க வேண்டும். இத்தகைய சர்க்கஸ் ரைடிங் பொது சாலையில் தேவையா? விழிப்புணர்வுடன் வாகனங்களை ஓட்டுவோம்.


Click it and Unblock the Notifications








