மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க 5 மில்லியன் டாலர் கேட்கும் பைலட்டுகள்!

By Saravana

கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங் சென்ற MH370 என்ற அடையாள எண் கொண்ட போயிங் 777 பயணிகள் விமானம் 239 பேருடன் மாயமானது. விமானம் மாயமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பல லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சல்லடை போட்டு தேடும் அளவுக்கு முயற்சிகள் செய்யப்பட்டும் உருப்படியான தகவல் இல்லை.

சாட்டிலைட் யுகத்தில் வாழ்ந்தாலும், இந்த விமானம் காணாமல் போனது இதுவரை மர்மமாகவே உள்ளது. பல பில்லியன் டாலர் பொருட்செலவில் மாயமான விமானத்தை கண்டறிந்தே தீருவோம் என மலேசிய அரசும், சீன அரசும் காட்டி வரும் தீவிரத்திற்கு ஒரு துரும்பு கூட கிடைக்கவில்லை. இந்த நிலையில், மாயமான அந்த விமானத்தை கண்டறிவது சாத்தியமே என்று பைலட்டுகள் இருவர் கூறியிருக்கின்றனர்.

தேடுதல் நடவடிக்கை

தேடுதல் நடவடிக்கை

கடைசியாக விமானத்திலிருந்து தகவல் கிடைத்த இடம், எரிபொருள் அளவு உள்ளிட்டவற்றை மையமாக வைத்து, இந்திய பெருங்கடலிலிருந்து 74,000 கிலோமீட்டரும், ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலிருந்து 1,931 கிமீ.,க்கு அப்பால் உள்ள இடத்தை சுற்றி 1.20 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடலில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

பெரும் பொருட்செலவு

பெரும் பொருட்செலவு

மாயமான விமானத்தை கண்டறிவதற்கு இதுவரை 100 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டிருக்கின்றன. ஆனால், உருப்படியான தகவல் இல்லை. மேலும், கடந்த 2 ஆண்டுகளில் தேடுதல் நடவடிக்கை குறிக்கப்பட்ட இடத்தில் 70 சதவீதம் வரை முழுமையாக தேடுதல் நடவடிக்கை முடிந்துவிட்டது. இன்னும் 30 சதவீதமே எஞ்சியிருக்கிறது.

 நம்பிக்கை

நம்பிக்கை

"இந்த ஆண்டு இறுதிக்குள் தேடுதல் நடவடிக்கை முற்றிலுமாக நிறைவடையும். மாயமான விமானத்தை எப்படியும் கண்டறிந்துவிடுவோம்", என மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோன்று, மாயமான விமானத்தில் பயணித்தவர்களில் பல குடும்பத்தினர் தங்களது உறவினர் உயிருடன் இருப்பதாக நம்பிக்கையில் உள்ளனர்.

பரபரப்பு

பரபரப்பு

கடந்த வாரம் மொசாம்பிக் நாட்டு கடற்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உதிரிபாகம் ஒன்று மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனை ஆய்வு செய்வதற்காக மலேசிய ஆய்வு குழுவினர் மொசாம்பிக் நாட்டிற்கு விரைந்துள்ளனர். அது உறுதி செய்யப்பட்டால், அதை வைத்து விமானம் மாயமான இடத்தை வைத்து தேடுதல் நடவடிக்கையை துரிதப்படுத்த முடியும்.

மர்மம்

மர்மம்

மலேசியாவும், சீனாவும் இந்த விமானத்தை கண்டறிவதற்கு இவ்வளவு தீவிரம் காட்டுவதற்கு, மாயமான விமானம் உண்மையிலேயே விபத்தில் சிக்கியதா அல்லது கடத்தப்பட்டதா என்று குழப்பமே காரணமாக அமைந்துள்ளது. எனவே, அந்த விமானத்தை கண்டுபிடித்து விடுவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

சாத்தியமே...

சாத்தியமே...

தேடுதல் நடவடிக்கைக்காக இதுவரை 100 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ள நிலையில், க்றிஸ் குட்ஃபெல்லோ மற்றும் சைமன் கன்சன் என்ற இரு பைலட்டுகள், மாயமான விமானத்தை கண்டறிவது சாத்தியமே என்று கூறியிருக்கின்றனர்.

நிதி திரட்டும் முயற்சி

நிதி திரட்டும் முயற்சி

தங்களது தேடுதல் நடவடிக்கைக்கு 5 மில்லியன் டாலர் நிதி தேவை என்று தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது தேடுதல் நடவடிக்கை குறித்த கூற்றையும் வெளியிட்டு, அதற்கு நிதி அளிக்க விரும்புபவர்களை ஒன்றிணைக்கும் விதத்தில், ஒரு ஃபேஸ்புக் பக்கத்தையும் நடத்தி வருகின்றனர்.

 ஃபேஸ்புக் பக்கம்

ஃபேஸ்புக் பக்கம்

VeritasMH370 என்ற பெயரில் இந்த ஃபேஸ்புக் பக்கம் இயங்குகிறது. இந்த பக்கத்திற்கு க்றிஸ் குட்பெல்லோ தலைமையேற்று நடத்தி வருகிறது. பெரும் பணக்காரர்கள் மற்றும் ஆர்வமுடையவர்கள், இந்த தேடுதல் நடவடிக்கைக்கு நிதி அளித்து உதவ வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குட்ஃபெல்லோ கூற்று

குட்ஃபெல்லோ கூற்று

குட்ஃபெல்லோவின் கூற்றுப்படி, விமானம் பறந்து கொண்டிருக்கும்போது பைலட்டுகள் எதிர்பாராத ஏதோ ஒரு விபத்தை சந்தித்திருக்க வாய்ப்புண்டு. லேண்டிங் கியரிலிருந்து தீப்பிடித்து, அது காக்பிட்டில் பற்றியிருக்க வேண்டும். அப்போது எழுந்த புகை காரணமாக பைலட்டுகள் மூர்ச்சையாகி, கம்ப்யூட்டர்கள் செயலிழந்திருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில், தற்போது தேடப்படும் இடத்தில் விமானம் கிடைக்காது. அடுத்து ஒரு கூற்றையும் முன் வைக்கிறார் குட்ஃபெல்லோ.

மற்றொரு தவறு

மற்றொரு தவறு

போயிங் 777 விமானம் முழு எடையுடன் 45,000 அடி உயரத்தில் பறந்ததாக சொல்லப்படுவதும் தவறு. எனவே, அதிகாரப்பூர்வ தேடுதல் குழுவினரின் அடிப்படையில் தவறு இருக்கிறது. மேலும், இவ்வளவு பெரிய இடத்தை வளைத்து கட்டி தேடுவதும் அபத்தமானது. ஒரு பெரிய இடத்தில் சிறிய புள்ளியை தேடுவது போன்று கடினமானது.

ஆனால்...

ஆனால்...

விமானம் கட்டுப்பாட்டு நிலைய தொடர்பை இழந்திருந்தால் கூட, கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, அது இருந்த எரிபொருளில் கிட்டத்தட்ட 6 மணிநேரம் பறந்திருக்கவும் வாய்ப்புள்ளதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. மேலும், மாயமான தினத்திலிருந்து செயற்கை கோள் எடுத்த படங்களின் உதவியுடன், பார்க்கும்போது, அதிகாரப்பூர்வ தேடுதல் குழுவினர் குறித்துள்ள இடத்திலிருந்து 500 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு இடத்தில்தான் விமானம் விழுந்திருக்க வாய்ப்புண்டு என்று அனுமானித்து கூறுகிறார் குட்ஃபெல்லோ.

திக்,திக்,திக்...

திக்,திக்,திக்...

விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழுந்தாலும், கிட்டத்தட்ட அந்த விமானம் 6 மணி நேரம் பறந்திருக்கவும் வாய்ப்புள்ளது. அதாவது, இருந்த எரிபொருளில் அந்த விமானம் பறந்து பின்னர், கடலில் விழுந்திருக்கலாம்," என்று தெரிவிக்கிறார். குட்ஃபெல்லோவின் கூற்றை பலரும் ஆதரித்துள்ளனர்.

திடமான திட்டம்

திடமான திட்டம்

குட்ஃபெல்லோ மற்றும் கன்சன்னிடம் தேடுதல் நடவடிக்கை குறித்த திடமான திட்ட வரைவு இல்லை. இருந்தாலும், இவர்களது கூற்றை ஒதுக்கித் தள்ள முடியாது என்று விமான விபத்து ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டிருக்கும் பலரும் தெரிவித்துள்ளனர்.

வேடிக்கை

வேடிக்கை

குட்ஃபெல்லோ மற்றும் கன்சன் இருவரும் விமான பைலட்டுகளாக இருந்தாலும், போயிங் 777 விமானத்தை இவர்கள் இயக்கியது இல்லையாம். மேலும், விமான விபத்து ஆய்வுத் துறையிலும் இவர்கள் பாண்டித்தியம் பெற்றவர்கள் இல்லை. ஆனாலும், இவர்களது கூற்று சிறப்பான ஒன்றாகவே கருதப்படுகிறது.

நோக்கம்

நோக்கம்

இந்த தேடுதல் நடவடிக்கையால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால், உலகையே உலுக்கிய அந்த விமானம் மாயமான காரணத்தை உலகுக்கு தெரியப்படுத்துவதே எங்களது நோக்கமாக இருக்கிறது.

சவால்கள்

சவால்கள்

மலேசிய விமானம் மாயமானதாக கருதப்படும் கடல் பகுதி 13,000 அடி வரை ஆழம் கொண்டது. செயற்கைகோள் மூலம், கடலின் தரைப்பகுதியை துல்லியமாக படம்பிடிக்க முடியாத நிலை இருக்கிறது. மேலும், 6 மாதங்களுக்கு அங்கு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள முடியாத அளவுக்கு மிகவும் மோசமான சீதோஷ்ண நிலை கொண்ட பகுதியாகவும் உள்ளது. ரோபோவை வைத்தே தேடுதல் நடவடிக்கை மேற்கொள்வது சிறந்ததாக குட்ஃபெல்லோ கூறியிருக்கிறார்.

நம்பிக்கை

நம்பிக்கை

தங்களது கூற்றுப்படி, விமானத்தின் தேடுதல் நடவடிக்கை 85 சதவீதம் வெற்றி பெறும் என்று குட்ஃபெல்லோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Two Pilots Say They Can Find Missing Malaysian Plane.
Story first published: Monday, March 28, 2016, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X