சூப்பர் பைக்கில் பயணம் செய்து விபத்தில் உயிரழந்த இளைஞரின் கண்களை தானமாக வழங்கிய பெற்றோர்..!!

Written By:

அதிக செயல்திறன் கொண்ட பைக்குகளை ஓட்ட வேகத்தை விட விவேகம் முக்கியம் என்பதற்கு சான்றாக ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதிவேக பைக் பயணத்தால் உயிரழந்த கல்லூரி மாணவர்கள்..!!

ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் உள்ள ஜம்மிசெட்டு மையம் அருகே அதிக செயல்திறன் கொண்ட கேடிஎம் டியூக் 390சிசி மாடல் பைக்கில் இரு இளைஞர்கள் சென்று கொண்டு இருந்தனர்.

அதிவேக பைக் பயணத்தால் உயிரழந்த கல்லூரி மாணவர்கள்..!!

மணிக்கு 170 கி.மீ வேகத்தில் பயணம் செய்த அவர்கள், சாலை தடுப்பு எதிரே தோன்றிய போது பைக்கின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

அதிவேக பைக் பயணத்தால் உயிரழந்த கல்லூரி மாணவர்கள்..!!

தடுப்பை பார்த்து பைக்கை கட்டுபடுத்த முயன்றபோது, அது பலனிக்காமல் ஒரு மின் கம்பத்தில் மோதி, அங்கிருந்து 150 மீட்டர் தொலைவில் பைக் தூக்கி வீசப்பட்டது.

அதிவேக பைக் பயணத்தால் உயிரழந்த கல்லூரி மாணவர்கள்..!!

அதிகாலை அளவில் நடைபெற்ற இந்த விபத்தால் ஜம்மிசெட்டு மையம் சாலையே அலங்கோலமானது. பைக்கில் இருந்து விழுந்த இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Recommended Video - Watch Now!
Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
அதிவேக பைக் பயணத்தால் உயிரழந்த கல்லூரி மாணவர்கள்..!!

விபத்தில் உயிரழந்த இளைஞர்களில் ஒருவரான ஹிருத்திக் சாஷி சௌத்ரி ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 19 வயதான இவர் விஜயவாடாவில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார்.

அதிவேக பைக் பயணத்தால் உயிரழந்த கல்லூரி மாணவர்கள்..!!

அவருடன் பயணம் செய்த மற்றொரு இளைஞரின் பெயர் யஷ்வந்த் (21). ஹைதாராபாத்தை சேர்ந்த இவர் பி.டெக் மாணவராவார்.

அதிவேக பைக் பயணத்தால் உயிரழந்த கல்லூரி மாணவர்கள்..!!

மேலும் இளைஞர்கள் ஓட்டிசென்ற கேடிஎம் டியூக் 390சிசி திறன் பெற்ற அவர்களுடைய சொந்த பைக் இல்லை என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

அதிவேக பைக் பயணத்தால் உயிரழந்த கல்லூரி மாணவர்கள்..!!

உயிரழந்த இளைஞர்கள் இருவருக்கும் பொதுவான நண்பராக இருந்த அமன் என்பவர் தான் விபத்தில் சிக்கிய பைக்கின் உரிமையாளர் என விஜயவாடா போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக பைக் பயணத்தால் உயிரழந்த கல்லூரி மாணவர்கள்..!!

இந்த கொடூரமான விபத்தை குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், பைக்கின் ஸ்பீடோமீட்டர் 170 கி.மீ காட்டியதை அடுத்து, அதிவேகம் தான் இந்த விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

இதில் மிகவும் உருக்காமான செய்தி என்னவென்றால், விபத்தில் இறந்த உயிரழந்த இளைஞர்களில் ஒருவரான யஷ்வந்தின் கண்களை அவரது பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Two Students Were Killed After Speeding Their Bike to 170 kmph. Click for Details...
Story first published: Tuesday, September 26, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark