இனி ஸ்டைலா கைவிட்டு ஓட்ட முடியாது! டூவீலர்களில் இனி இந்த விஷயமெல்லாம் கட்டாயம்!
இந்தியாவில் சாலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க இனி டூவீலர்களில் குறிப்பிட்ட அம்சங்கள் கட்டாயமாக்க மத்திய அரச பரிசீலனை செய்து வருகிறது. இந்த அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டால் இனி டூவீலர்களின் விலை சற்று உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி என்னென் அம்சங்கள் கட்டாயாக்கப்படுகிறது? இதனால் விலை உயர்வு ஏன் ஏற்படுகிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சாலை விபத்துகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த சாலை விபத்துகளை குறைக்க அரசு பல்வேற விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக புதிய பாதுகாப்பு அம்சங்களை வாகனங்களில் புகுத்துவதன் மூலம் விபத்துக்களை குறைக்க முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இனி டூவீலர்களில் குறிப்பிட்டஅம்சங்களை கட்டயமாக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக லைவ் மின்ட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி டூவீலர்களில் வேகமாக செல்லும் போது ரைடர்களுக்கு இனி எச்சரிக்கை வழங்கும் கருவியை கட்டாயமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பொருத்த வேண்டும் என்ற விதி அமலுக்கு வருகிறது. அதே போல டூவீலர்களில் செல்பவர்கள் கையை ஹேண்டில் பாரில் இருந்து எடுத்தால் அதற்கான எச்சரிக்கையையும் வழங்கும் கருவியையும் பொருத்த திட்டமிட்டுள்ளது.
பொதுவாக சாலைகளில் டூவீலர்கள் விபத்தில் சிக்குவதற்கு இந்த இரண்டு காரணங்கள் தான் முக்கியமானதாக இருக்கிறது. இந்தியாவில் அதிக அளவிலான டூவீலர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் டூவீலர்கள் விபத்தில் சிக்குவது அதிகமாக உள்ளது. இந்தியாவில் நடக்கும் 100 விபத்துகளில் 44 விபத்துகளில் ஏதோ ஒரு வகையிலாவது டூவீலர்கள் ஈடுபட்டுள்ளது.

இந்த விபத்துகளுக்கான காரணங்களை ஆய்வு செய்யும் போது அதிக வேகம் மற்றும் கண்ட்ரோலை இழப்பது தான் முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்நிலையில் மேல சொன்ன இரண்டு விதமான வார்னிங் சிஸ்டத்தை டூவீலர்களில் பொருத்தும் போது விபத்து நடப்பதற்கான அபாயம் இருக்கும்போதே எச்சரிக்கையை எழுப்பி விபத்தை தடுக்க வழி வகிக்கும்.
இந்த சிஸ்டத்தை பொருத்த டூவீலர்களி்ல சில சென்சார்கள் பொருத்தப்படுகிறது. இது வாகனத்தின் செயல்பாட்டை ரியல்டைமில் மானிட்டரிங் செய்யும். குறிப்பாக டூவீலர் ஹேண்டில் பாரிலிருந்து ஒருவர் வாகனம் ஓடும்போது கையை எடுத்தால் அதற்கான எச்சரிக்கையை வாகனத்தின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் எச்சரிக்கையாக வழங்குவது மட்டுமல்லாமல் சத்தத்தையும் எழுப்பும்.

இந்த சிஸ்டம் வாகனத்தின் சீட்பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம் எப்படி வேலை செய்கிறதோ அதே போல இதுவும் வேலை செய்யும். இந்த சிஸ்டத்தை பொருத்துவது டூவீலர் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்க சவாலான விஷயமாக தான் இருக்கப்போகிறது. இருந்தாலும் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு தயாராகும் அத்தனை டூவீலர்களிலும் இந்த கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலர்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்த வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. அதன்படி மேலே சொன்ன அம்சங்களுடன் ஏபிஎஸ், ஹெல்மெட் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களையும் பொருத்தினால் இந்தியாவில் விபத்துக்கள் நடக்கும் எண்ணிக்கை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









