வேற வழி இல்லாம அந்த முடிவை எடுக்கும் மக்கள்... பஸ்களை அரசு நிப்பாட்டியதால் யாருக்கு லாபம் தெரியுமா?

பேருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், வேறு ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

வேற வழி இல்லாம அந்த முடிவை எடுக்கும் மக்கள்... பஸ்களை அரசு நிப்பாட்டியதால் யாருக்கு லாபம் தெரியுமா?

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை போல் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புதிய வாகன பதிவு போன்ற பணிகள் நடைபெறாததால், ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் கிடைக்க வேண்டிய வருவாயை அரசாங்கம் இழந்து வந்தது. ஆனால் தற்போது மற்ற அரசு அலுவலகங்களை போல் ஆர்டிஓ அலுவலகங்களும் இயங்க தொடங்கியுள்ளன.

வேற வழி இல்லாம அந்த முடிவை எடுக்கும் மக்கள்... பஸ்களை அரசு நிப்பாட்டியதால் யாருக்கு லாபம் தெரியுமா?

அத்துடன் வாகன பதிவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் அதற்கு அருகே உள்ள பிம்ப்ரி சின்ச்வாத் ஆர்டிஓ அலுவலகங்களில் கடந்த 2 மாதங்களில், இரு சக்கர வாகனங்களின் பதிவு உயர்ந்துள்ளது. பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு நிலவும் பற்றாக்குறை இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.

வேற வழி இல்லாம அந்த முடிவை எடுக்கும் மக்கள்... பஸ்களை அரசு நிப்பாட்டியதால் யாருக்கு லாபம் தெரியுமா?

மேலும் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற அச்சமும் இதற்கு ஒரு காரணம். இது தொடர்பாக புனே ஆர்டிஓ அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ''கடந்த மார்ச் மாத கடைசியில் இருந்து மே 17ம் தேதி வரையில் ஆர்டிஓ அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.

வேற வழி இல்லாம அந்த முடிவை எடுக்கும் மக்கள்... பஸ்களை அரசு நிப்பாட்டியதால் யாருக்கு லாபம் தெரியுமா?

இதன்பின் கடந்த மே 18ம் தேதி முதல் வாகன பதிவு பணிகள் மீண்டும் தொடங்கின. ஆனால் அப்போது பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவை ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக வாங்கப்பட்டவை. எனினும் கடந்த ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரண்டு மாதங்களிலும், இரு சக்கர வாகனங்களின் பதிவு உயர்ந்துள்ளது. இது ஊக்கம் அளிப்பதாக உள்ளது'' என்றனர்.

வேற வழி இல்லாம அந்த முடிவை எடுக்கும் மக்கள்... பஸ்களை அரசு நிப்பாட்டியதால் யாருக்கு லாபம் தெரியுமா?

ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரண்டு மாதங்களுக்கு இடையே புனே ஆர்டிஓ அலுவலகத்தில் புதிய இரு சக்கர வாகனங்களின் பதிவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''கடந்த மே 18ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சுமார் 4,000 இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

வேற வழி இல்லாம அந்த முடிவை எடுக்கும் மக்கள்... பஸ்களை அரசு நிப்பாட்டியதால் யாருக்கு லாபம் தெரியுமா?

ஆனால் ஜூலை 30ம் தேதி வரை கணக்கிட்டால் பதிவு செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் மேலாக உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் இரு சக்கர வாகனங்களை வாங்குவதை இந்த உயர்வு தெளிவாக குறிக்கிறது'' என்றனர். இதேபோல் பிம்ப்ரி சின்ச்வாத் ஆர்டிஓ அலுவலகத்திலும் பதிவு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வேற வழி இல்லாம அந்த முடிவை எடுக்கும் மக்கள்... பஸ்களை அரசு நிப்பாட்டியதால் யாருக்கு லாபம் தெரியுமா?

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ''இரு சக்கர வாகனங்களின் பதிவு உயர்ந்துள்ளதுதான். ஆனால் வாகனங்கள் பதிவு செய்யப்படாமலேயே வைக்கப்பட்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம். எனினும் கடந்த ஜூலை மாதத்தில் பதிவு செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வு இருப்பதை காட்டுகிறது'' என்றனர்.

வேற வழி இல்லாம அந்த முடிவை எடுக்கும் மக்கள்... பஸ்களை அரசு நிப்பாட்டியதால் யாருக்கு லாபம் தெரியுமா?

அதே சமயத்தில் கடந்த ஒன்றரை மாத அளவில், புதிய இரு சக்கர வாகனங்களை வாங்குவது தொடர்பான விசாரணைகளும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக டீலர்ஷிப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஒரு இரு சக்கர வாகன டீலர்ஷிப்பின் விற்பனை பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ''அதிக அளவிலான விசாரணைகள் வருகின்றன.

வேற வழி இல்லாம அந்த முடிவை எடுக்கும் மக்கள்... பஸ்களை அரசு நிப்பாட்டியதால் யாருக்கு லாபம் தெரியுமா?

எங்கள் டீலர்ஷிப்பிற்கு வரும் வாடிக்கையாளர்களில் பலர், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை காட்டிலும் சொந்த இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதுதான் மிகவும் பாதுகாப்பானது என்று தெரிவிக்கின்றனர். இன்னும் சிலரோ பேருந்து போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு பற்றாக்குறை இருப்பதால் இரு சக்கர வாகனங்களை வாங்குவதாக கூறுகின்றனர்'' என்றார்.

வேற வழி இல்லாம அந்த முடிவை எடுக்கும் மக்கள்... பஸ்களை அரசு நிப்பாட்டியதால் யாருக்கு லாபம் தெரியுமா?

இதுபோன்ற காரணங்களால், வரும் மாதங்களில் புதிய வாகனங்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அத்துடன் தீபாவளி பண்டிகை காலமும் நெருங்கி வருகிறது. இதன் காரணமாகவும் புதிய வாகனங்களின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Friday, August 7, 2020, 6:30 [IST]
English summary
Two-wheeler Registrations Increased In Pune. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+