பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக மத்திய அரசு தொடுத்துள்ள போர் எதிரொலியாக அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தற்போது மிக இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி கொண்டுள்ளது. கார், டூவீலர் என அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் மிக கடுமையாக சரிவடைந்து வருகின்றன. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, ஹோண்டா என அனைத்து முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையும் சமீப காலமாக மிகவும் மந்தமாக இருந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

இப்படி ஒரு சரிவை இதற்கு முன் கண்டதில்லை என ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறி வருகின்றனர். எனவே மத்திய அரசு உடனடியாக சிறப்பு கவனம் செலுத்தி ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இல்லாவிட்டால் சுமார் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாயின.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

ஆனால் ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்க தற்போது வரை மத்திய அரசு பெரிதாக எந்த நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே பிரச்னை நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே செல்கிறது. வாகனங்களின் விற்பனை சரிவால் ஏராளமான டீலர்ஷிப்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

இதனால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பலர் வேலையிழந்துள்ளனர். நாட்டில் உள்ள ஆட்டோமொபைல் டீலர்ஷிப்களில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 2 லட்சர் பேர் வேலையிழந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA- Federation of Automobile Dealers Associations) இதனை தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

அதே சமயம் ஆட்டோமொபைல் துறை மீண்டு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாததால், வரும் காலங்களில் இன்னும் ஏராளமான டீலர்ஷிப்கள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், இதன் காரணமாக வேலையிழப்பு பிரச்னை மேலும் அதிகரிக்கலாம் எனவும் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

இதுதவிர விற்பனை சரிவு காரணமாக முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் தற்காலிக ஊழியர்களில் சுமார் 6 சதவீதம் பேரை தற்போது வீட்டுக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

இந்த சூழலில் ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் தற்போது மிக கடுமையாக சரிவடைந்து வருகிறது. வாகன விற்பனையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாகவே இது பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டின் ஜனவரி-ஜூலை கால கட்டத்தில் மொத்தம் 97.22 லட்சம் இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

ஆனால் நடப்பு ஆண்டின் ஜனவரி-ஜூலை கால கட்டத்தில் இந்தியாவில் மொத்தம் 92.9 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது இந்திய அளவில் இரு சக்கர வாகனங்களின் பதிவு 4.44 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுவே குஜராத் மாநிலம் என்ற அளவில் பார்த்தால், கடந்த 2018ம் ஆண்டின் ஜனவரி-ஜூலை காலகட்டத்தில் மொத்தம் 7.7 லட்சம் டூவீலர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

இந்த எண்ணிக்கை நடப்பு ஆண்டின் ஜனவரி-ஜூலை கால கட்டத்தில் 6.1 லட்சம் டூவீலர்களாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது 20.78 சதவீத சரிவாகும். இதுவே கார்கள் என பார்த்தால் குஜராத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில், கடந்த 2018ம் ஆண்டின் ஜனவரி-ஜூலை மாத கால கட்டத்தில் மொத்தம் 1.93 லட்சம் கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

இந்த எண்ணிக்கை தற்போது 1.6 லட்சம் கார்களாக குறைந்துள்ளது. இது 17.10 சதவீத வீழ்ச்சியாகும். அதே சமயம் குஜராத் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக பார்த்தால், வாகன பதிவு 18.5 சதவீதம் குறைந்துள்ளதாக ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இதுவே மிக மோசமான சரிவு எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

இந்தியாவில் வாகனங்களின் விற்பனை சரிவடைந்து கொண்டே வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வாகனங்களின் விலை உயர்வும் இதற்கு ஒரு முக்கியமான காரணம். உதாரணமாக புதிய டூவீலர்களுக்கு 5 ஆண்டுகள் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களின் விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

அதேபோல் 125 சிசிக்கும் மேற்பட்ட டூவீலர்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதலே இந்த உத்தரவு அமலுக்கு வந்து விட்டது. இதுதவிர கார்களில், டிரைவர் சைடு ஏர் பேக், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் கட்டாயமாக இடம்பெற வேண்டும் எனவும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாகனங்களில் இதுபோன்ற பாதுகாப்பு வசதிகளை மத்திய அரசு படிப்படியாக கட்டாயமாக்கி வருகிறது. இதன் காரணமாகவும் வாகனங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வாகனங்களின் விற்பனை சரிவடைந்து வருவதற்கு இந்த விலை உயர்வும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

இதனிடையே சரிவில் இருந்து மீண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசிடம் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதில், 28 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கை. ஆனால் இந்த கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

ஜிஎஸ்டி குறைக்கப்பட்டால், வாகன விற்பனை உயரும் என ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர். ஆனால் மத்திய அரசு தற்போது வரை ஜிஎஸ்டியை குறைக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

அதாவது புதிய வாகனங்களின் பதிவு கட்டணம் மற்றும் பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவதற்காக வரைவு அறிக்கை ஒன்றை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் மத்திய அரசின் முயற்சிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

மத்திய அரசின் இந்த திட்டம் அமலுக்கு வந்தால் வாகனங்களுக்கான பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து விடும். எனவே ஆட்டோமொபைல் துறையின் நிலைமை இன்னும் மோசமான நிலைக்கு சென்று விடும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதில்தான் தற்போது தீவிரமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது அதற்கு ஓர் உதாரணம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மத்திய அரசு சலுகைகளை வழங்க மறுக்கிறது. அதற்கு மாறாக பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான மத்திய அரசின் பிடி இறுகி கொண்டே செல்கிறது. பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணங்களை பல மடங்கு உயர்த்த திட்டமிட்டு வருவதை இதற்கு ஓர் உதாரணமாக சொல்லலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

போதாக்குறைக்கு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி வேறு லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பதில் பொதுமக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திருப்பும் முயற்சிகளாகவே இவை அனைத்தும் தெரிகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் என்றும் கூட வர்ணிக்கலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து விட்டு அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பான செய்திகள் அவ்வப்போது தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. எனவே இது குறித்து பொதுமக்களும் அதிகம் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான போர் உச்சகட்டம்... அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி

சமூக வலை தளங்களில் இத்தகைய விவாதங்களை சமீப காலமாக அதிகம் காண முடிகிறது. இந்தியாவில் மார்க்கெட் மந்த நிலையில் இருப்பதற்கு, பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள இந்த போர் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். இது தொடர்பான உங்களின் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Two-wheeler Registrations Skid 4.44 Per cent In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X