Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை... இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா?
இரு சக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு, ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில், 1.13 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் நிறைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, இந்த அதிரடி நடவடிக்கையை ஒடிசா போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஒடிசா மாநிலத்தில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராத தொகைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சர் மாவட்டத்தில் உள்ள அமர்புரா என்னும் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் பன்ஜாரா என்பவர் மீதுதான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராயகடா மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் கேன்களை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, போக்குவரத்து காவல் துறையினரிடம் பிரகாஷ் பன்ஜாரா சிக்கி கொண்டார். போக்குவரத்து காவல் துறையினர் வழங்கிய அபராத ரசீதின்படி, பிரகாஷ் பன்ஜாரா தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

அத்துடன் அவரது இரு சக்கர வாகனத்தில் பதிவு எண்ணும் இல்லை. பிரகாஷ் பன்ஜாரா மத்திய பிரதேச மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். ஆனால் தொழில் நிமித்தமாக, இரு சக்கர வாகனத்தின் பதிவு பணிகளை முடிக்காமலேயே அவர் ஒடிசா மாநிலம் ராயகடா பகுதிக்கு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவு எண் இல்லாமல் வாகனத்தை இயக்கிய காரணத்திற்காக அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாத காரணத்திற்காக தனியாக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர காப்பீடு இல்லாத காரணத்திற்காக 2,000 ரூபாயும், தலை கவசம் அணியாத காரணத்திற்காக 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதிவு எண் இல்லாமல் டீலர் இரு சக்கர வாகனத்தை விற்பனை செய்ததற்காக 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக காவல் துறையினர் தற்போது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்களில் சிக்கி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்ற மறுப்பதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.

எனவே வாகன ஓட்டிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டன. அபராத தொகைகள் மிகவும் கடுமையாக இருப்பதால், அதற்கு பயந்து கொண்டு பலர் தற்போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.