குழந்தையின் உயிரை காப்பாற்ற இளைஞர் செய்த காரியம்! வீடியோவை பார்த்து விட்டு புகழ்ந்து தள்ளும் மக்கள்
குழந்தையின் உயிரை காப்பாற்றும் இளைஞரின் காணொளி, சமூக வலை தளங்களில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.

இந்திய சாலைகள் மிகவும் அபாயகரமானவை. இங்கு எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். நீங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது கால்நடைகளோ அல்லது பாதசாரிகளோ திடீரென குறுக்கே வந்து விபத்திற்கு காரணமாக அமையலாம். எனவே வாகனங்களில் மிதமான வேகத்தில் பயணிப்பது அவசியம்.

இதுதவிர பெற்றோர்களின் அலட்சியம் காரணமாக சில சமயங்களில் குழந்தைகளும் கூட விபத்தில் சிக்கி கொள்ளும் சூழ்நிலை காணப்படுகிறது. ஒரு சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை சாலைகளில் அலட்சியமாக விட்டு விடுகின்றனர். அப்படி பெற்றோர்களின் கண்காணிப்பு இல்லாமல் விடப்படும் குழந்தைகள் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இப்படிப்பட்ட அசம்பாவித சம்பவம் ஒன்று சமீபத்தில் நடைபெறவிருந்தது. ஆனால் பைக்கில் வந்த இளைஞர் ஒருவரின் சமயோசிதமான சிந்தனையாலும், துணிச்சலான செயல்பாடுகள் காரணமாகவும் அந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த காணொளி சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக அனைவரையும் சென்றடைந்து வருகிறது.

திரைப்பட தயாரிப்பாளரான நிலா மாதாப் பாண்டா டிவிட்டரில் நேற்று (செப்டம்பர் 21ம் தேதி) காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். அத்துடன் ''உண்மையான கதாநாயகர்கள் இப்படிதான் இருப்பார்கள்'' எனவும் கூறியிருந்தார். இந்த காணொளியில், குழந்தையை சுமந்து கொண்டிருந்த ஒரு ஸ்ட்ரோலர் (Stroller), கட்டுப்பாட்டை இழந்து சாலையில் மைய பகுதிக்கு வந்ததை காண முடிகிறது.

பின்னர் சாலையோரமாக சென்ற அந்த ஸ்ட்ரோலர், திடீரென அங்கிருந்த பள்ளத்தில் கீழிறங்க தொடங்கியது. அப்போது இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்தார். நடந்த சம்பவங்களை கவனித்த அவர் சற்றும் யோசிக்காமல், பைக்கை அப்படியே கீழே போட்டு விட்டு, அந்த குழந்தையை காப்பாற்றுவதற்கு ஓடினார்.

அதிர்ஷ்டவசமாக ஸ்ட்ரோலரை நிறுத்தி அவர் குழந்தையை காப்பாற்றி விட்டார். இந்த சம்பவங்கள் நடந்த பின் பெண் ஒருவர் அங்கு வருவதை காண முடிகிறது. அனேகமாக அவர் அந்த குழந்தையின் அம்மாவாக இருக்கலாம் என கருதப்படுகிறது. பின்னர் அந்த இளைஞர் குழந்தையை அந்த பெண்ணிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.

தற்போது சமூக வலை தளங்களில் அந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிகழ்வில் நாம் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன. முதலில் குழந்தைகளை இப்படி கவனிப்பாரின்றி விட கூடாது. குழந்தையுடன் ஸ்ட்ரோலர் சாலையின் மைய பகுதிக்கு வந்தபோது, அதிர்ஷ்டவசமாக அங்கு வாகனங்கள் எதுவும் வரவில்லை.

பொதுவாக இந்திய சாலைகளில் வாகனங்கள் அதிவேகத்தில் வரும். அப்படி ஏதேனும் ஒரு வாகனம் வேகமாக வந்திருந்தால், இந்த சம்பவத்தின் முடிவுகள் வேறு விதமாக இருந்திருக்க கூடும். நல்ல வேளையாக அப்படி எதுவும் நிகழவில்லை. இந்த சம்பவம் எங்கு நடந்தது? எப்போது நடந்தது? என்பது சரியாக தெரியவில்லை. எனினும் இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதியில் நடந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

இரண்டாவதாக வேகமாக பயணித்து கொண்டிருக்கும் வாகனங்களை கட்டுப்படுத்தி நிறுத்துவது சிரமம். இந்த சம்பவத்தில் குழந்தையை காப்பாற்றிய இளைஞர் ஓரளவு வேகத்தில்தான் வந்து கொண்டிருந்தார். எனினும் உடனடியாக பிரேக் பிடித்த காரணத்தால் பைக் தடுமாறியதை பார்க்க முடிகிறது. ஆனால் எப்படியோ அவர் பைக்கை கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார்.
இப்படி பைக்கை நிறுத்தும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து விடுவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகம். ஆனால் அப்படிப்பட்ட அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. அவர் இன்னும் சற்று வேகமாக வந்திருந்தால், பைக்கை சரியாக கட்டுப்படுத்தி நிறுத்தியிருக்க முடியுமா? என்பது சந்தேகமே. இந்திய சாலைகளில் இப்படிப்பட்ட சம்பவங்கள் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

சாலைகளில் திரிந்து கொண்டிருக்கும் ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகளோ அல்லது சாலையை கடக்க முயலும் பாதசாரிகளோ திடீரென உங்கள் வாகனத்தின் குறுக்கே வரலாம். அப்போது நீங்கள் மிக வேகமாக பயணித்து கொண்டிருந்தால், வாகனத்தை கட்டுப்படுத்துவது சிரமமாகி விடும். எனவே வாகனங்களை எப்போதும் மிதமான வேகத்தில் இயக்குவது நல்லது.


Click it and Unblock the Notifications








