4 பேரை காவு வாங்கிய சாலை! சென்னையில் வந்து தான் முடிய போகுது... 2-வீலரில் போறவங்க கவனத்துக்கு

சாலை விபத்துகள் நம் நாட்டில் சர்வ சாதாரணமாக தினந்தோறும் அரங்கேறி வருகின்றன. செய்தித்தாள்களை திறந்தாலே குறைந்தது ஒரு சாலை விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. சமீபத்தில், கடந்த மார்ச் 2ஆம் தேதியில் கூட புதிய சென்னை- பெங்களூர் விரைவுச்சாலை (Chennai- Bengaluru Expressway)-இல் தவறான திசையில் பைக்கை கொண்டு சென்றதால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலை துறை ஒரு அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மத்திய அரசு கடந்த சில வருடங்களாகவே விரைவுச்சாலை விஷயத்தில் முனைப்பு காட்டி வருகிறது. நாடு முழுவதும் புது புது விரைவுச்சாலைகள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவுச்சாலைகள் மூலமாக பயணம் வெகுவாக குறைவதால் இவ்வாறான நடவடிக்கையில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ஈடுப்பட்டு வருகிறது.

two-wheelers banned on chennai-bengaluru expressway

நெடுஞ்சாலைகள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வழித்தடங்களிலும் விரைவுச்சாலைகள் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில், தென்னிந்தியாவின் இரு முக்கியமான நகரங்களான சென்னை மற்றும் பெங்களூர் இடையே ஏற்கனவே 2 வழித்தடங்களில் நெடுஞ்சாலைகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், புதியதாக விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் வருடக் கணக்கில் நடைபெற்று வருகின்றன.

தற்போதைக்கு கர்நாடகா மாநிலத்திற்குள் மட்டுமே சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனையடுத்தே, கர்நாடகாவில் முழுவதும் நிறைவடைந்துவிட்ட சென்னை-பெங்களூர் விரைவுச்சாலையின் 71கிமீ தொலைவிலான பகுதி கடந்த பிப்ரவரி மாதத்தில் பொது பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இன்னும், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் இந்த புதிய விரைவுச்சாலையை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு ஒருபக்கம் இன்னமும் வேலைப்பாடுகள் நடந்து வருவதால், புதிய சென்னை- பெங்களூர் விரைவுச்சாலையில் ரோந்து போலீசாரை அவ்வளவாக பார்க்க முடிவதில்லை. இதனாலேயே, புதிய விரைவுச்சாலையை பயன்படுத்தும் ஆர்வத்தில் நிறைய 2-வீலர் மற்றும் 3-வீலர் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை கொண்டு வருகின்றனர்.

two-wheelers banned on chennai-bengaluru expressway

விரைவுச்சாலையில் 2-வீலர் மற்றும் 3-வீலர்களை கொண்டுவருவதே முதலில் ஆபத்தான ஒன்று எனும்போது, கடந்த மார்ச் 2ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 2-வீலர் ஓட்டி தவறான திசையில் விரைவுச்சாலையில் சென்றுள்ளார். இந்தியாவில் விரைவுச்சாலைகளில் ஏன் 2-வீலர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்றால், நம் நாட்டில் விரைவுச்சாலையில் அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்ல அனுமதி உண்டு.

இவ்வளவு வேகத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்போது, கிட்டத்தட்ட அதே வேகத்தில் 2-வீலர்களை ஓட்டி சென்றாலும் அது ஆபத்தானது என்பதால் 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்கள் விரைவுச்சாலைகளில் அனுமதிக்கப்படுவது இல்லை. அப்படியிருக்க, அத்தகைய விரைவுச்சாலையில் எதிர் திசையில் செல்வது எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதை யோசித்து பாருங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விரைவுச்சாலையில் 2-வீலர் மற்றும் 3-வீலர்களை ஓட்டுவது என்பது முற்றிலும் மாறுப்பட்டது ஆகும். இதனால்தான், இன்றைய கால விரைவுச்சாலைகளுக்கு இரு பக்கங்களிலும் குறைவான வேகத்தில் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு என்று தனியாக சாலைகள் அமைத்து கொடுக்கப்படுகின்றன. வழக்கத்தை காட்டிலும், இவ்வாறு பணிகள் நடைபெறும் விரைவுச்சாலைகளில் தான் ரோந்து போலீசார் அதிகமாக ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும்.

Note: Images are represtative purpose only.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 4, 2025, 15:59 [IST]
English summary
Two wheelers banned on new chennai bengaluru expressway
மேலும்... #indian roads
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+