பிரேக் பிடிக்காமல் மோத வந்த லாரி... நூலிழையில் தப்பித்த இளைஞர்கள்! தமிழகத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ வைரல்

லாரி பிரேக் பிடிக்காமல் மோத வந்த நிலையில், 2 இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரேக் பிடிக்காமல் மோத வந்த லாரி... நூலிழையில் தப்பித்த இளைஞர்கள்! தமிழகத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ வைரல்

இந்திய சாலைகளில் தினமும் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பல விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அரசால் வகுக்கப்பட்டுள்ள போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்ற மறுப்பதே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு காரணம். ஆனால் சில சமயங்களில் மனித தவறுகளால் விபத்துக்கள் நேர்வதில்லை.

பிரேக் பிடிக்காமல் மோத வந்த லாரி... நூலிழையில் தப்பித்த இளைஞர்கள்! தமிழகத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ வைரல்

அதற்கு மாறாக வாகனங்களில் உள்ள இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளால் விபத்துக்கள் நேர்ந்து விடுகின்றன. இந்த வகையில் இயந்திர கோளாறால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய அதிர்ச்சிகரமான காணொளி ஒன்றை இடிவி ஆந்திர பிரதேஷ் தனது யூ-டியூப் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளது.

பிரேக் பிடிக்காமல் மோத வந்த லாரி... நூலிழையில் தப்பித்த இளைஞர்கள்! தமிழகத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ வைரல்

சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதையை நோக்கி லாரி ஒன்று வருவதை இந்த காணொளி நமக்கு காட்டுகிறது. பின்பு அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி, நடைபாதையின் மீதே லாரி ஏறி விடுகிறது. லாரி கட்டுப்பாட்டை இழந்து வரும்போது இரு சக்கர வாகனத்தின் அருகே 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

பிரேக் பிடிக்காமல் மோத வந்த லாரி... நூலிழையில் தப்பித்த இளைஞர்கள்! தமிழகத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ வைரல்

அதிர்ஷ்டவசமாக அவர்கள் மீது லாரி மோதவில்லை. லாரி தங்களை நெருங்கி விட்டதை பார்த்ததும் உடனே அவர்கள் நகர்ந்து விட்டனர். லாரியின் பிரேக் திடீரென செயல் இழந்த காரணத்தால், அது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. எனினும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேக் பிடிக்காமல் மோத வந்த லாரி... நூலிழையில் தப்பித்த இளைஞர்கள்! தமிழகத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ வைரல்

மேலும் தமிழகத்தின் வயலூர் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. வாகனங்களில் பிரேக்குகள்தான் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்று. பிரேக்குகள் இருக்கும் நம்பிக்கையில்தான் ஓட்டுனர்களால் வாகனங்களை வேகமாக செலுத்த முடிகிறது. பிரேக்குகள் இல்லாவிட்டால் அவசர சமயங்களில் வாகனங்களை நிறுத்த முடியாது.

பிரேக் பிடிக்காமல் மோத வந்த லாரி... நூலிழையில் தப்பித்த இளைஞர்கள்! தமிழகத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ வைரல்

எனவே பிரேக்குகளை முறையாக பராமரிப்பது அவசியமாகிறது. உங்கள் வாகனத்தின் பிரேக் மற்றும் பிரேக் பேடுகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சோதித்து பார்த்து கொள்வது அவசியம். அவை சரியாக வேலை செய்ய முடியாத நிலையில் இருந்தால், அவற்றை மாற்றி விடுவது நல்லது. அதேபோல் நல்ல, நம்பகமான பிரேக்குகளில் முதலீடு செய்வதும் அவசியம்.

பிரேக் பிடிக்காமல் மோத வந்த லாரி... நூலிழையில் தப்பித்த இளைஞர்கள்! தமிழகத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ வைரல்

அவற்றின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் திறன், பாதுகாப்பு மற்றும் நீடித்து உழைப்பது ஆகிய அம்சங்களில் நீங்கள் நல்ல வித்தியாசத்தை உணரலாம். அதே சமயம் பிரேக் பேடுகள் நீண்ட நாட்கள் நீடித்து உழைக்க சில விஷயங்களை பின்பற்றுவதும் நல்லது. இதன்படி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் குறைவான வேகத்தில் செல்வதும், திடீரென பிரேக் பிடிப்பதை தவிர்ப்பதும் அவசியம்.

மேலும் உங்கள் வாகனத்தில் தேவையில்லாத பொருட்களை அகற்றி விட்டு எடையை குறைத்து கொள்வதும் நல்லது. தேவையில்லாமல் பிரேக் பெடல்களை கனமாக அழுத்துவதையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். உங்கள் வாகனத்தில் பிரேக்குகள் சரியாக வேலை செய்ய தவறினால், உங்களுக்கும், உங்களுடன் பயணிப்பவர்களுக்கும், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம். இதனை மனதில் வைத்து கொண்டு பிரேக்குகளை பராமரிக்கும் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Two Youngsters Escaped From Accident - Viral Video. Read in Tamil
Story first published: Tuesday, December 29, 2020, 18:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X