ஹெல்மெட்ல நிறைய டைப் இருக்கு... இதுல உங்களுக்கு எந்த டைப் பொருந்தும்? வாங்க பாத்திடலாம்!

முழு முக ஹெல்மெட், அரை முக ஹெல்மெட், மாடுலர் ஹெல்மெட், ஓபன் ஃபேஸ் (3/4) ஹெல்மெட், ஆஃப் ரோடு ஹெல்மெட், டூயல் ஸ்போர்ட் ஹெல்மெட் ஆகிய ரகங்களிலேயே தலைக் கவசங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதில், எது உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதை இந்த பதிவின் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம், வாங்க.

இந்தியாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர், பின் பக்க இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர் என அனைவரும் தலைக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஏன், சிறுவர்கள் டூ-வீலரில் பயணிக்கின்றார்கள் என்றால் அவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருத்தல் வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பளிப்பதில் அவை முக்கிய பங்களிப்பை வழங்குவதால், இந்திய அரசு ஹெல்மெட்டை கட்டாயம் ஆக்கியிருக்கின்றன.

ஹெல்மெட்

மேலும், இது அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுகின்றது. தமிழகத்தில் இந்த போக்குவரத்து விதிமீறலுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகின்றது. முன்னதாக ரூ. 100 மட்டுமே அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது. விபத்துகளின் எண்ணிக்கையையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் குறைக்கும் பொருட்டு அதிகபட்ச அபராதத்தை தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அந்தவகையில், ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தையும் அரசு உயர்த்தியது.

அந்தளவிற்கு மிக முக்கியமானதாக இந்த தலைக் கவசங்கள் இருக்கின்றன. இத்தகைய ஹெல்மெட் ஒட்டுமொத்தமாக ஆறு ரகங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. முழு முக ஹெல்மெட், அரை முக ஹெல்மெட், மாடுலர் ஹெல்மெட், ஓபன் ஃபேஸ் (3/4) ஹெல்மெட், ஆஃப் ரோடு ஹெல்மெட், டூயல் ஸ்போர்ட் ஹெல்மெட் ஆகிய ரகங்களிலேயே தலைக் கவசங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதில், எது உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதை இந்த பதிவின் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம், வாங்க.

முழு முக ஹெல்மெட்:

மிக சிறந்த பாதுகாப்பு வழங்குவதில் முழு முக ஹெல்மெட்டுகள் மிக சிறப்பானதாக இருக்கின்றன. எனவேதான், வாகனத் துறை வல்லுநர்கள் இந்த ஹெல்மெட்டையே பெரும்பாலும் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர். ஒட்டுமொத்த ஹெல்மெட் பிரிவில் மிக சிறந்ததாகக் இது கருதப்படுகின்றது. இது தலை, முகம் என அனைத்தையும் பாதுகாக்கும். விபத்து ஏற்பட்டால் மிக முக்கியமாக தலையும், முகமுமே அதிக பாதுகாப்பைச் சந்திக்கின்றன. குறிப்பாக, முகம் 50 சதவீத கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கின்றது. இந்த மாதிரியான பாதிப்புகளில் இருந்து உங்களது முகங்களை முழுமையாக பாதுகாக்க விரும்பினால் முழு முக ஹெல்மெட்டை பயன்படுத்துவது மிக சிறந்தது.

அரை முக ஹெல்மெட்:

அரை முக ஹெல்மெட் தலைப் பகுதியையும் மட்டுமே பாதுகாக்கின்றது. முகப் பகுதியை இது பாதுகாக்காது. ஆகையால், விபத்தின்போது கண், மூக்கு மற்றும் தாடை உள்ளிட்ட பகுதிகள் கடுமையான பாதிப்பைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான் இந்த ஹெல்மெட்டை சிலர் பரிந்துரைப்பதில்லை. இருப்பினும், பெண்கள் மற்றும் கண்ணாடி அணியும் நபர்கள் இந்த ஹெல்மெட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர். முழு முக ஹெல்மெட் அசௌகரியமான உணர்வை வழங்கும் என்பதால் இதை பலர் தவிர்க்கின்றனர்.

ஹெல்மெட்

குறிப்பாக, பெண்கள் தங்களுடைய நீளமான கூந்தலுக்கு சிக்கல் விளைவிப்பதாக கூறி அரை முக ஹெல்மெட்டைப் பயன்படுத்துகின்றனர். முழு முக ஹெல்மெட்டைக் காட்டிலும் இதில் காற்றோட்டம் மிக சிறப்பாக இருக்கும். ஆகையால், மூச்சுத் திணறல் போன்ற அசௌகரியம் துளியளவும் ஏற்படாது. ஆனால், பாதுகாப்பு மிகக் குறைவு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேவேலையில் தலைப் பகுதியை மட்டும் சிறந்த முறையில் பாதுகாக்கும். ஆகையால், தலையை மட்டும் பாதுகாத்தால் போதும் என நினைப்பவர்கள் இந்த ஹெல்மெட்டை வாங்கிக் கொள்ளலாம்.

மாடுலர் ஹெல்மெட்:

மாடுலர் ஹெல்மெட், இது பார்ப்பதற்கு முழு முக ஹெல்மெட்டைப் போலவே காட்சியளிக்கும். ஆனால், தேவைப்படும் சமயங்களில் இதனை அரை முக ஹெல்மெட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, இந்த ஹெல்மெட்டின் முகப்பகுதியை மாஸ்க் போன்று தூக்கி நிறுத்திக் கொள்ள முடியும். ஆகையால், இதனை விசராகவும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். உச்சி வெயிலின்போது சூரிய ஒளியால் ஏற்படும் பார்வை சிக்கலை இதன்வாயிலாக தவிர்க்க முடியும். சாகச ரைடை மேற்கொள்வோர், க்ரூஸிங் மற்றும் டூரிங் ரைடு ஆகியவற்றை மேற்கொள்வோர் இந்த ஹெல்மெட்டை மிக தாராளமாக பயன்படுத்தலாம். அவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதே மாடுலர் ஹெல்மெட். நம்முடைய பயணங்களின்போது பயணத்தை முழுமையாக ரசிக்க இந்த ஹெல்மெட் உதவும்.

ஓபன் ஃபேஸ் (3/4) ஹெல்மெட்:

பார்பதற்கு அரை முக ஹெல்மெட்டை போல் இது இருக்கும். ஆனால், இதன் வாயிலாக தலை மற்றும் கன்னம் பகுதியை பாதுகாக்க முடியும். ஆனால், தாடை பாதிப்பை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இதேபோல், காற்று மாசால் ஏற்படும் பாதிப்புகளையும் இந்த ஹெல்மெட்டில் தடுக்க முடியாது. முகம் முழுமையாக தெரிந்தவாறு இருக்கும் என்பதால் இந்த ஹெல்மெட்டை ஒரு சிலர் பயன்படுத்துவதில்லை. அதேநேரத்தில், பெண்களும், கண்ணாடி அணியும் நபர்களும் இந்த ஹெல்மெட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதேபோல், ஸ்கூட்டர் பயனர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பிரியமான ஹெல்மெட்டாக இந்த ஓபன் ஃபேஸ் (3/4) தலைக்கவசம் இருக்கின்றது.

ஆஃப் ரோடு ஹெல்மெட்:

சாலை பயன்பாட்டிற்கு உகந்த ஹெல்மெட் இது அல்ல. இந்த ஹெல்மெட் அதன் பெயருக்கேற்ப ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏதுவானதாக இருக்கின்றது. இது, ஏர் வெண்டுகளையும், முழு முகத்தையும் மறைக்கின்ற வடிவமைப்பைப் பெற்றிருந்தாலும் சற்றே ஆபத்தானதாக இருக்கின்றது. ஆமாங்க, கண்களைப் பாதுகாக்கின்ற வகையில் ஸ்கிரீன் கொடுக்கப்படவில்லை. ஆகையால், கண்ணாடியை தனியாக வாங்கி பயன்படுத்த வேண்டும். அப்போதே புழுதிகளில் இருந்து கண்களைப் பாதுகாக்க முடியும். இது எடைக் குறைவானதாக இருக்கும். இருப்பினும், அதிக உறுதியானது. ஆகையால், பாதுகாப்பும் அதிகம்.

டூயல் ஸ்போர்ட் ஹெல்மெட்:

முழு முக ஹெல்மெட் மற்றும் ஆஃப்-ரோடு ஹெல்மெட்டின் கலவையே டூயல் ஸ்போர்ட் ஹெல்மெட். இதனை சாலை பயன்பாடு மற்றும் ஆஃப்-ரோடு பயணம் என இரண்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், விசர் வழங்கப்பட்டிருக்கும். ஆகையால், கண்களின் பாதுகாப்பிற்கு இந்த உகந்ததாகக் காட்சியளிக்கின்றது. கண்களுக்கு மட்டுமல்ல தலை, முகம் என அனைத்திற்கும் நல்ல பாதுகாப்பை வழங்கக் கூடியதாக டூயல் ஸ்போர்ட் ஹெல்மெட் இருக்கின்றது. அதேநேரத்தில், வேகமாக செல்லும்போது காற்றினால் தள்ளப்படும் உணர்வு இதில் கிடைக்காது. இதற்காகவே இதன் முகப்பு பகுதி கூர்மையாக வடிவமைப்பில் உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Types of helmet
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X