இது நிறைய பேருக்கு தெரிவதில்லை!! கப்பல்களில் இத்தனை வகை இருக்கா?

நம்மை எப்போதும் ஆச்சிரியப்படுத்தக்கூடிய விஷயங்களில் கடலும் ஒன்றாகும். கடலில் நாம் எத்தனை பயணம் செய்திருந்தாலும், புது, புது வித்தியாசமான கடல் பயணங்கள் எப்போதும் நம்மை ஆச்சிரியப்படுத்தக்கூடியவை. இந்த செய்தியில் நாம் பயன்பாட்டில் இருக்கும் வித்தியாசமான கப்பல்களை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம்.

கண்டெயினர் கப்பல்: இந்த பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், இது கண்டெயினர் கப்பல் என்று. இந்த வகை கப்பல்களே அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. சில கண்டெயினர் கப்பல்கள் குளிர்சாதன வசதியை கொண்டவை. அதாவது, கப்பலின் ஒரு பகுதி முழுவதும் முற்றிலுமாக குளிர்சாதனத்தை கொண்டவை ஆக இருக்கும். உணவுகள், குறுகிய காலத்தில் கெட்டுப் போகக்கூடிய பொருட்கள் கண்டெயினர் கப்பலின் இந்த வகை அறையில்தான் எடுத்துச் செல்லப்படும்.

ships types in real world

பல்க் கேரியர் கப்பல்கள்: கெட்டுப் போகாத நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கக்கூடிய பொருட்கள் யாவும் பெரிய அளவில் பல்க் கேரியர் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த வகை கப்பல்களில் கரி போன்ற எரிபொருள்கள் எடுத்துச் செல்லப்படுவது மட்டுமின்றி, உணவுகளும் சில நேரங்களில் எடுத்துச் செல்லப்படும். இந்த வகை கப்பல்கள் ட்ராம்ப்கள், கார்கோ லைனர்ஸ் என 2 வகைப் படுகின்றன.

ships types in real world

டேங்கர் கப்பல்கள்: இந்த வகை கப்பல்கள் அதிக அளவில் திரவ பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுகிறது. அதேநேரம் சில நேரங்களில், டேங்கர் கப்பல்களில் தேவை ஏற்பட்டால் சரக்கு பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அதேபோல், டேங்கர் கப்பல்களில் வாயு பொருட்களும் எடுத்துச் செல்லப்படுவது உண்டு.

ships types in real world

பயணிகள் கப்பல்கள்: இந்த கப்பல்களின் பெயருக்கேற்ப இவற்றில் பயணிகள் வாகனங்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். குறுகிய தொலைவிற்கு பயணிகளை அழைத்துச் செல்லும் கப்பல்கள் படகுகள் என்றும், க்ரூஸ் கப்பல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. க்ரூஸ் கப்பல்கள் பொதுவாக அதிக பொருட் செலவில் ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் தயாரிப்புகளாக விளங்குகின்றன.

ஆஃப்ஷோர் படகுகள்: இவை பெரும்பாலும் எண்ணெய் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், எண்ணெய் கிணறுகளை கடலுக்கு நடுவில் உருவாக்குவதற்காகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை படகுகள் மொத்தம் 10 விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. சப்ளை கப்பல், பைப் லேயர்ஸ், ட்ரில் கப்பல் என்பன அவற்றில் சில ஆகும்.

ships types in real world

மீன்பிடி படகுகள்: நடுகடலில் அவ்வளவு அடி ஆழத்தில் மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் படகுகள் மீன்பிடி படகுகள் எனப்படுகின்றன. இந்த படகுகள் ட்ராவ்லர்ஸ் என அழைக்கப்படுகின்றன. இவை இல்லாமல் ஃபேக்ட்ரி கப்பல்களும் உள்ளன. இவை நீண்ட நாட்களுக்கு இயங்கக்கூடியவை ஆகும். இதனாலே, இவற்றில் பிடிக்கும் மீன்களை குளிர் வெப்பநிலையில் பதப்படுத்தும் செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன.

ships types in real world

ஸ்பெஷல் படகுகள்: குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் படகுகள் இவை ஆகும். இவற்றிலும் பல வகைகள் உண்டு. டக்ஸ், டெண்டர்ஸ், பைலட் கிராஃப்ட்ஸ், கேபிள் லேயர்ஸ், ரீசார்ஜ் படகுகள் உள்ளிட்டவை அவற்றில் சில ஆகும். இதில் ரீசார்ஜ் படகுகள் எனப்படும் அறிவியல் ஆய்வுகளுக்கான படகுகள் பெருங்கடல்களிலும், பனி துருவங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

ships types in real world

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோடு நெட்வொர்க்கை போலவே, கடல் போக்குவரத்தும் மிக பெரியது. மேற்கூறப்பட்டுள்ள கப்பல் வகைகள் கடல் போக்குவரத்தில் பயன்படுத்தக்கூடிய சில மட்டுமே. இவை இல்லாமல் ஸ்பெஷல் படகுகள், ஹை-ஸ்பீடு படகுகளும் உள்ளன. ஆனால், இவற்றில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தக்கூடியது க்ரூஸ் கப்பல்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 13, 2023, 19:38 [IST]
English summary
Types of ships in real world check all details here
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X