"ராங்" சைடில் வண்டி ஓட்டினால் டயர் கிழியும்

ராங் சைடில் வண்டி ஓட்டுபவர்களை தடுக்க போலீசார் சாலையின் நடுவில் ஆணிகளை பதித்துள்ளனர். இது சரியான பாதையில் செல்பவர்களைவிட்டுவிட்டு தவறான பாதையில் செல்லும் வாகனத்தின் டயரை குத்து கிழிக்கிறது.

By Balasubramanian

ராங் சைடில் வண்டி ஓட்டுபவர்களை தடுக்க போலீசார் சாலையின் நடுவில் ஆணிகளை பதித்துள்ளனர். இது சரியான பாதையில் செல்பவர்களைவிட்டுவிட்டு தவறான பாதையில் செல்லும் வாகனத்தின் டயரை குத்து கிழிக்கிறது.

ஆண்டிற்காண்டு இந்தியாவில் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து விதிகள் அதிக அளவில் மீறப்பட்டு வருகிறது. அதிக வேகமாக செல்லுதல், சீக்கரம் செல்ல வேண்டும் என்பதால் "நோ" என்ட்ரியில் செல்லுதல், பயண தூரத்தை மிச்சப்படுத்த தவறான பாதையில் செல்லுதல் என பல விதிகள் இங்கு சகஜமாக மீறப்படுகிறது.

இது குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை அளித்தும் மக்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை இதற்கு சமீபத்தில் இன்டர்நெட்டில் வைரலான விதிமீறல் காரணமாக நொடி பொழுதில் உயிரை காப்பாற்றிய பைக் ஓட்டுநரின் விடியோவே சாட்சி. அந்த வீடியோவை கீழே காணுங்கள்

இவ்வாறான விதிமீறல்களை தடுக்க அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புனேயில் "ராங்" சைடில் செல்லும் டிரைவர்களின் காரின் டயரை கிழிக்கும் வகையில் ரோட்டில் ஆணியை பதித்துள்ளது.

இந்த வகையான ஆணி ரோட்டில் சரியான வழியில் வருபவர்களின் வாகனங்களை எதுவும் செய்யாது, அதே நேரத்தில் ராங் சைடில் வருபவர்களின் வாகனத்தின் டயரை குத்திகிழித்து விடும் அதன் பின் அந்த வாகனம் 10 மீட்டருக்கு மேல் நகர முடியாது. இந்த வீடியோவை கீழே காணுங்கள்

இதன் மூலம் ராங் சைடில் வாகனம் வருவதால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முடியும் என புனே போலீசார் நம்புகின்றனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் விபத்து காரணமாக பலியாகி வருகின்றனர். இதில் பல விபத்துக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதால் தான் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன

இந்நிலையில் போலீசாரின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் ராங் சைடில் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கும் என எதிர்பாக்கலாம். இந்த திட்டம் வெற்றி பெற்றால் இதே போன்று நாடு முழுவதும் எங்கெல்லாம் அமைக்க வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Tyre killers installed in Pune to stop wrong side driving. Read in Tamil
Story first published: Wednesday, March 28, 2018, 18:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X