Just In
- 2 hrs ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆண்களுக்கு இங்கு இடமில்லை... முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே இயங்கும் ஷோரூம்... பிரபல நிறுவனம் அதிரடி!
முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே இயங்கக் கூடியோ ஷோருமை பிரபல நிறுவனம் ஒன்று பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்து வரும் பிரபல நிறுவனங்களில் சியாட் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பெண்களால் மட்டுமே இயங்கக்கூடிய டயர் ஷோ ரூமை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்த ஷோரூமில் ஒரு ஆண் பணியாளரைக் கூட காண முடியாது என்கின்றது சியாட். விற்பனை மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை என அனைத்தையும் பெண்கள் மட்டுமே மேற்கொள்ள இருக்கின்றனர். இவ்வாறு பெண்களால் மட்டுமே இயங்கக்கூடிய ஷோரூமை இந்தியாவில் நிறுவனம் திறப்பது இதுவே முதல் முறையாகும்.

பஞ்சாப் மாநிலத்தின் பட்டிண்டா எனும் பகுதியிலேயே இந்த சிறப்பு ஷோ-ரூமை நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. பொதுவாக வாகனம் சார்ந்து இயங்கும் அனைத்து துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கமே அதிகளவில் தென்படுகின்றது. இந்த நிலையை உடைக்கும் நோக்கிலேயே சியால் நிறுவனம் முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே இயங்கக் கூடிய டயர் ஷோரூமை திறந்திருக்கின்றது.

இந்த நிலையத்தில் டயர்களை மாற்றுதல், வீல் பேலன்ஸிங் மற்றும் அலாய்மெண்டை ஒழுங்குப்படுத்துதல் பல்வேறு சிறப்பு சர்வீஸ்களையும் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இந்த சர்வீஸ்களையும் பெண்களே மேற்கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சியாட் நிறுவனத்தின்கீழ் நாடு முழுவதும் 300க்கும் அதிகமான டயர் விற்பனை நிலையங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் ஒன்றாக தற்போது பெண்களால் இயங்கக் கூடிய ஷோரூமை நிறுவனம் திறந்திருக்கின்றது. விரைவில் நாட்டின் பிற பகுதிகளிலும் இம்மாதிரியான நிலையங்களைப் பயன்பாட்டிற்கு நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

அடுத்த மாதத்திற்குள் இன்னும் சில இம்மாதிரியான ஷோரூம்களை நிறுவனம் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சியாட் நிறுவனம் அதன் பஞ்சரே ஆகாத டயர் விற்பனை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக அண்மையில் ஓர் புதிய விளம்பர வீடியோவை நிறுவனம் வெளியிட்டிருந்தது. அவ்வீடியோவில் பிரபல திரைப்பட நடிகர் ராணா டகுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆணியின்மீது ஏறினாலும் டயர் பஞ்சராகாது என்பதை விளக்கும் வகையில் அவ்வீடியோ அமைந்திருந்தது.

அதாவது, தானாக பஞ்சரை சரி செய்யும் திறன் இந்த டயரில் இடம்பெற்றிருப்பதை வீடியோ எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருந்ததது. இந்த நிலையிலேயே பெண்களால் மட்டுமே இயங்கும் ஷோரூமை இந்தியாவில் நிறுவனம் தொடங்கியிருக்கின்றது.