இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்... மைலேஜ், பாதுகாப்பு, டயரின் ஆயுள் என எல்லாமே அதிகமாகும்... என்னனு தெரியுமா?

உங்கள் காரில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஏன் இருக்க வேண்டும்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்... மைலேஜ், பாதுகாப்பு, டயரின் ஆயுள் என எல்லாமே அதிகமாகும்... என்னனு தெரியுமா?

கடந்த 10 ஆண்டு காலத்தில் கார்கள் அதிநவீனமாக மாறி விட்டன. கார்களில் தொடர்ந்து பல்வேறு வசதிகள் அறிமுகமாகி கொண்டே வருகின்றன. குறிப்பாக பாதுகாப்பிற்கு கார் உற்பத்தி நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றன. கார்களின் பாதுகாப்பு தொடர்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுதான் இதற்கு காரணம்.

இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்... மைலேஜ், பாதுகாப்பு, டயரின் ஆயுள் என எல்லாமே அதிகமாகும்... என்னனு தெரியுமா?

கார்களின் பாதுகாப்பு என எடுத்து கொண்டால், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System - TPMS) மிகவும் முக்கியமானது. அது என்ன டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்? இது எவ்வாறு செயல்படுகிறது? என்னென்ன வகைகள் உள்ளன? இது நமக்கு எப்படி பாதுகாப்பு வழங்கும்? என்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த செய்தியில் பதில் வழங்கியுள்ளோம்.

இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்... மைலேஜ், பாதுகாப்பு, டயரின் ஆயுள் என எல்லாமே அதிகமாகும்... என்னனு தெரியுமா?

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என்பது ஒரு எலெக்ட்ரானிக் சிஸ்டம் ஆகும். இது உங்கள் கார் டயர்களில் இருக்கும் ஏர் பிரஷரை கண்காணிக்கும். அத்துடன் மிகவும் அபாயகரமான வகையில் ஏர் பிரஷர் குறைந்தால், அது உங்களை எச்சரிக்கையும் செய்யும். எனவேதான் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மிகவும் முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்... மைலேஜ், பாதுகாப்பு, டயரின் ஆயுள் என எல்லாமே அதிகமாகும்... என்னனு தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் மொத்தம் இரண்டு வகையான டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்கள் உள்ளன. ஒன்று டைரக்ட் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Direct Tyre Pressure Monitoring System). மற்றொன்று இன்-டைரக்ட் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Indirect Tyre Pressure Monitoring System) ஆகும்.

இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்... மைலேஜ், பாதுகாப்பு, டயரின் ஆயுள் என எல்லாமே அதிகமாகும்... என்னனு தெரியுமா?

இதில், டைரக்ட் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் சென்சார்கள் மூலம் செயல்படுகிறது. காரின் ஒவ்வொரு டயரிலும் ஏர் பிரஷரை கணக்கிடுவதற்காக சென்சார்கள் வழங்கப்பட்டிருக்கும். கார் உற்பத்தி நிறுவனம் பரிந்துரை செய்த அளவில் இருந்து 25 சதவீதம் ஏர் பிரஷர் குறைந்தால், இதுகுறித்த தகவலை காரின் கம்ப்யூட்டர் சிஸ்டத்திற்கு சென்சார்கள் அனுப்பும்.

இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்... மைலேஜ், பாதுகாப்பு, டயரின் ஆயுள் என எல்லாமே அதிகமாகும்... என்னனு தெரியுமா?

இதன் காரணமாக காரின் டேஷ்போர்டில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்திற்கான எச்சரிக்கை விளக்கு ஒளிரும். காரின் ஒரு டயரில் ஏர் பிரஷர் குறைவாக இருந்தால் கூட, இது உங்களை எச்சரிக்கை செய்யும். இதன் மூலமாக நீங்கள் கார் டயர்களில் ஏர் பிரஷரை சரிபார்த்து கொண்டு பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும்.

இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்... மைலேஜ், பாதுகாப்பு, டயரின் ஆயுள் என எல்லாமே அதிகமாகும்... என்னனு தெரியுமா?

அதே நேரத்தில் இன்-டைரக்ட் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், உங்கள் கார் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டத்தின் (Antilock Braking System - ABS) வீல் ஸ்பீடு சென்சார்களுடன் (Wheel Speed Sensors) இணைந்து வேலை செய்கிறது. எந்த டயரில் ஏர் பிரஷர் குறைவாக உள்ளதோ, மற்ற டயர்களை காட்டிலும், அந்த டயர் வித்தியாசமான வீல் ஸ்பீடில் ரோல் ஆகும்.

இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்... மைலேஜ், பாதுகாப்பு, டயரின் ஆயுள் என எல்லாமே அதிகமாகும்... என்னனு தெரியுமா?

இதனை காரின் கம்ப்யூட்டர் சிஸ்டம் உடனடியாக கண்டறிந்து விடும். பின்னர் காரின் டேஷ்போர்டில் இருக்கும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்திற்கான எச்சரிக்கை விளக்கை ஒளிர செய்யும். உங்கள் காரில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் இருந்தால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இதில், பாதுகாப்புதான் மிகவும் முக்கியமானது.

இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்... மைலேஜ், பாதுகாப்பு, டயரின் ஆயுள் என எல்லாமே அதிகமாகும்... என்னனு தெரியுமா?

உங்கள் கார் டயர்களில் ஏர் பிரஷர் குறைவாக இருந்தால், அந்த தகவலை இது உங்களிடம் தெரிவிக்கும். கார் டயர்களில் நீங்கள் சரியான ஏர் பிரஷரை பராமரிக்க இது உதவி செய்கிறது. இதன் மூலம் சாலையில் உங்களுடைய பாதுகாப்பு மேம்படும். அத்துடன் காரின் கையாளுமை சிறப்பாக இருக்கவும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உதவி செய்கிறது.

இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்... மைலேஜ், பாதுகாப்பு, டயரின் ஆயுள் என எல்லாமே அதிகமாகும்... என்னனு தெரியுமா?

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மூலம் நீங்கள் டயர்களில் ஏர் பிரஷரை சரியாக பராமரிப்பீர்கள் என்பதால், டயர்களின் ஆயுட்காலம் உயர்வதுடன், காரின் மைலேஜூம் அதிகரிக்கும் என்பது கூடுதல் சிறப்பு. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் வசதி தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிறைய கார்களில் வழங்கப்படுகிறது.

இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்... மைலேஜ், பாதுகாப்பு, டயரின் ஆயுள் என எல்லாமே அதிகமாகும்... என்னனு தெரியுமா?

எனினும் அனைத்து கார்களிலும், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டால், கார் உரிமையாளர்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். ஆனால் அனைத்து கார்களிலும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் வழங்கப்படும்பட்சத்தில், கார்களின் விலை உயர்ந்து விடும். எனவே ஒரு சில கார்களில் இந்த வசதி வழங்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tyre pressure monitoring system all you need to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X