பிஎஸ்எல்வி ராக்கெட்டை கண்டு அலறும் அமெரிக்க ராக்கெட் நிறுவனங்கள்!

Written By:

அமெரிக்க நிறுவனங்கள் இஸ்ரோ ராக்கெட்டுகளை பயன்படுத்தி செயற்கைகோள்களை ஏவுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க ராக்கெட் தயாரிப்பு நிறுவனங்கள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன.

அமெரிக்க நிறுவனங்கள் இஸ்ரோ ராக்கெட்டுகளை பயன்படுத்துவதால், எதிர்காலத்தில் தங்களது வர்த்தகம் கேள்விக்குறியாகும் நிலை இருப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, அமெரிக்க அரசுக்கு அந்நாட்டு ராக்கெட் தயாரிப்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

அமெரிக்க செயற்கைகோள்கள்

அமெரிக்க செயற்கைகோள்கள்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 அமெரிக்க செயற்கைகோள்களை இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி வரலாற்றில் இது முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. மேலும், பல புதிய அமெரிக்க செயற்கைகோள்களும் இந்திய ராக்கெட்டுகளில் வைத்து விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

ரஷ்யாதான் போட்டி

ரஷ்யாதான் போட்டி

விண்வெளித் துறையில் அமெரிக்காவுக்கு ரஷ்யாதான் முக்கிய போட்டியாளராக இருந்தது. இந்தநிலையில், இந்தியாவும் விண்வெளித் துறையில் அமெரிக்காவுக்கு நிகராக வளர்ந்துள்ளதுடன், அமெரிக்க செயற்கைகோள்களை ஏவியதும் அந்நாட்டு ராக்கெட் நிறுவனங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தடை கோரும் நிறுவனங்கள்

தடை கோரும் நிறுவனங்கள்

அமெரிக்காவின் வர்த்தக செயற்கைகோள்களை இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டை பயன்படுத்தி ஏவுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசிடம், காம்ஸ்டாக் அமைப்பின் ஆலோசனை குழு பரிந்துரை செய்தது.

பரிந்துரை ஏற்பு

பரிந்துரை ஏற்பு

இந்த பரிந்துரையை அமெரிக்க விண்வெளி ஆணையமும் பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், வர்த்தக விண்வெளி போக்குவரத்து ஆலோசனை கமிட்டியின் கருத்தின்படி, அமெரிக்க நிறுவனங்களுக்கு இஸ்ரோ ராக்கெட்டுகளால் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதாக கூறியிருக்கும் கருத்தை ஆமோதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கொள்கை

அமெரிக்க கொள்கை

வர்த்தக ரீதியில் செயற்கைகோள்களை வெளிநாட்டு ராக்கெட்டில் வைத்து ஏவுவதற்கு அமெரிக்க சட்டப்படி, பல கெடுபிடிகள் உள்ளன. ஆனால், சில காரணங்களை காட்டி, அந்நாட்டு நிறுவனங்கள் இந்திய ராக்கெட்டுகளை பயன்படுத்த அனுமதி பெற்று விண்ணில் செலுத்தி வருகின்றன.

என்ன காரணம்?

என்ன காரணம்?

செயற்கைகோள்களை ஏவுவதற்கு அமரிக்க நிறுவனங்களைவிட இஸ்ரோவிடம் கட்டணம் குறைவாக இருக்கிறது. அத்துடன், அமெரிக்க நிறுவனங்களின் ராக்கெட் ஏவும் கால அளவும் குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலை இருக்கிறது. இதனாலேயே, இந்திய ராக்கெட்டுகளை அமெரிக்க நிறுவனங்கள் நாடத் தொடங்கியிருக்கின்றன.

 அடிப்படை கட்டணம்

அடிப்படை கட்டணம்

அமெரிக்க நிறுவனங்கள் தடை விதிக்க ஒருபுறம் கூறியிருந்தாலும், அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், செயற்கைகோள்களை ஏவுவதற்கான அடிப்படை கட்டணம் ஒன்றை நிர்ணயம் செய்யவும், அதன்படி, இஸ்ரோ ராக்கெட்டின் கட்டணத்தை நிர்ணயிக்கவும் அமெரிக்க ராக்கெட் நிறுவனங்கள் வற்புறுத்தியிருக்கின்றன. அதாவது, அந்த கட்டணத்தையே இஸ்ரோ பின்பற்ற வேண்டியிருக்கும்.

சிறிய ராக்கெட்டுகள்

சிறிய ராக்கெட்டுகள்

தற்போது அமெரிக்காவை சேர்ந்த பல தனியார் நிறுவனங்கள் சிறிய ரக ராக்கெட்டுகளை தயாரித்து வருகின்றன. இவை அனைத்தும் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு முதல் விண்வெளியில் ஏவப்பட உள்ளன. இந்த ராக்கெட்டுகளின் வர்த்தகம் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டால் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் அந்நாட்டு நிறுவனங்களிடையே எழுந்துள்ளது.

ஆர்டர் கிடைக்காது

ஆர்டர் கிடைக்காது

இஸ்ரோ ராக்கெட்டை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்த தொடங்கினால், அந்நாட்டு சிறிய ராக்கெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு ஆர்டர் கூட கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் அந்நாட்டு நிறுவனங்கள் அஞ்சுகின்றன. இந்தநிலையில், இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டை பார்த்து அமெரிக்க ராக்கெட் தயாரிப்பு நிறுவனங்கள் அஞ்சுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

 பிஎஸ்எல்வி சிறப்பம்சங்கள்

பிஎஸ்எல்வி சிறப்பம்சங்கள்

கடந்த 1990ம் ஆண்டு கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில், பிஎஸ்எல்வி ராக்கெட்டை உருவாக்கும் பணிகள் துவங்கின. இந்த ராக்கெட்டின் இரண்டாம் மற்றும் நான்காம் நிலைக்கான திரவ எரிபொருள் உந்து தொழில்நுட்பத்தை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மஹேந்திரகிரியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டது. திட எரிபொருள் உந்து தொழில்நுட்பம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.

எடை சுமக்கும் திறன்

எடை சுமக்கும் திறன்

பிஎஸ்எல்வி.,யை பார்த்து அனைத்து நாடுகளும் வியப்பும், பொறாமையும் கொள்வதற்கு காரணம் அதிக எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும், ஒரே நேரத்தில் பல செயற்கைகோள்களை இந்த ராக்கெட்டில் வைத்து ஏவ முடியும்.

துல்லியம்

துல்லியம்

சுற்று வட்டப்பாதையில் செயற்கைகோள்களை மிக துல்லியமாக நிலைநிறுத்துவதிலும் இஸ்ரோ ராக்கெட்டுகள் நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கின்றன. இதுவரை பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலமாக பல செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன.

சாதனை மேல் சாதனை

சாதனை மேல் சாதனை

இதுவரை இல்லாத அளவுக்கு வரும் மே மாதம் ஒரே நேரத்தில் 22 செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட்டில் வைத்து இஸ்ரோ ஏவி சாதனை படைக்க உள்ளது. இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு, விண்வெளி வரலாற்றில் முக்கிய சாதனை நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

வடிவம்

வடிவம்

44 மீட்டர் நீளமும், 2.8 மீட்டர் விட்டமும் கொண்டது பிஎஸ்எல்வி ராக்கெட். பயண தூரத்தை பொறுத்த 1,425 கிலோ முதல் 3,250 கிலோ வரை எடை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதுவரை 34 பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் ஏவப்பட்டிருக்கின்றன. அதில், 32 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு இருக்கின்றன. ஒன்று முழு தோல்வியும், மற்றொன்று பாதி தோல்வியும் கண்டது.

எஞ்சின்கள்

எஞ்சின்கள்

முதல் நிலையில் திட எரிபொருளில் இயங்கும் எஸ்139 எஞ்சின் உள்ளது. இதற்காக 138 டன் திட எரிபொருள் முதல் நிலையில் இருக்கும். உலகிலேயே மிகப்பெரிய ராக்கெட் எஞ்சின் இதுவாகும். இரண்டாம் நிலையில், 1 விகாஸ், மூன்றாம் நிலையில் எச்பிஎஸ்3, நான்காம் நிலையில் இரண்டு எல்-2-5 எஞ்சின்களும் உள்ளன. முதல் நிலையின் எரிபொருள் 105 வினாடிகளிலும், இரண்டாம் நிலை எரிபொருள் 158 வினாடிகளிலும், மூன்றாம் நிலை எரிபொருள் 83 வினாடிகளிலும் நான்காம் நிலை எரிபொருள் 425 வினாடிகளிலும் எரிந்துவிடும்.

ஏவும் செலவு

ஏவும் செலவு

ஒரு பிஎஸ்எல்வி ராக்கெட்டை செலுத்துவதற்கு ரூ.90 கோடி செலவாகிறது. இதுவே பிற நாடுகளில் மிக அதிகம். எனவேதான் பிஎஸ்எல்வி ராக்கெட் வர்த்தக ரீதியில் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

வெளிநாட்டு செயற்கைகோள்கள்

வெளிநாட்டு செயற்கைகோள்கள்

அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்ளிட்ட 19 வெளிநாடுகள் இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டை பயன்படுத்தி தங்களது செயற்கைகோள்களை ஏவி வருகின்றன. குறைந்த கட்டணம், துல்லியம், கால அளவு ஆகியவை அந்நாட்டு நிறுவனங்களை இஸ்ரோ பக்கம் ஈர்த்து வருகிறது.

வருவாய்

வருவாய்

இதுவரை 19 அயல் நாடுகளின் 45 செயற்கைகோள்களை செலுத்தியதன் மூலமாக இஸ்ரோ ரூ.637.35 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர பிரசாத் லோக் சபாவில் கடந்த ஆண்டு தெரிவித்தார். அடுத்த ஆண்டிற்குள் மேலும் 28 வெளிநாட்டு செயற்கைகோள்களை ஏவுவதற்கும் இஸ்ரோ திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி ஏவுகணை சிறப்புகள்

அமெரிக்காவின் சதியையும் மீறி சிறகு முளைத்த அக்னி ஏவுகணை!

புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் கேலரி!

இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ள வரும் புத்தம் புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
U.S. launch companies lobby to maintain ban on use of Indian rockets.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark