மகனை குஷிப்படுத்த இதைவிட என்ன செய்ய முடியும்? துபாயில் பாதி விலையில் கிடைக்கும் ரோல்ஸ்-ராய்ஸ் கார்!!
ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) காரை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள்? பாமர மக்களில் இருந்து பெரும் செல்வந்தர்கள் வரையில் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் பிரியர்களாக உள்ளனர். இந்தியாவில் வாங்கினால் ரோல்ஸ்-ராயஸ் காரை மட்டும் தான் வாங்குவது என்கிற கொள்கை உடன் உள்ள பணக்காரர்களும் இருக்கின்றனர். குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் செய்யும் இந்திய பணக்காரர்களின் முதன்மையான சாய்ஸாக ரோல்ஸ்-ராய்ஸ் உள்ளது. அந்த வகையில், தற்போது யுஏஇ-இல் தொழில் செய்யும் இந்திய மல்டி-மில்லியனர் ஒருவர் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் (Cullinan) காரை துபாயில் வாங்கியுள்ளார்.
அவரது பெயர், சதீஷ் சன்பால் (Satish Sanpal) ஆகும். சுருக்கமாக யுஏஇ எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அனாக்ஸ் ஹோல்டிங் (ANAX Holding) என்கிற நிறுவனத்தை நடத்திவரும் இந்தியாவில் பிறந்தவரான சதீஷ் சன்பால் துபாயில் மிகவும் லக்சரியான வாழ்க்கை தரத்தை விலையுயர்ந்த கார்கள் உடன் அனுபவித்து வருகிறார்.

மிக பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சொந்தமாக விலையுயர்ந்த படகை வைத்திருக்கும் தொழிலதிபர் சதீஷ் சன்பால், விமானத்தில் பயணிப்பதாக இருந்தால் கூட மிகவும் ஆடம்பரமான வகுப்பில் பயணிக்க கூடியவர். நாம் ஒரு முறையாவது சாலையில் பார்த்துவிட மாட்டோமா என ஏங்கும் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை எல்லாம் சர்வ சாதாரணமாக வாங்கக்கூடியவர்.
தற்போது ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரை வாங்கியிருப்பது கூட அவருக்காக அல்ல. அவரது மகன் லக்ஷ்யா சன்பால் (Lakshya Sanpal)-க்காக ஆகும். தொழிலதிபர் சதீஷ் சன்பால் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் அவரது மகள் இசபெல்லாவின் முதல் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். அதனை தொடர்ந்து தற்போது மகனுக்காக பெரிய தொகையை செலவு செய்துள்ளார்.

மகன் லக்ஷ்யா சன்பாலுக்கு தொழிலதிபர் சதீஷ் சன்பால் வாங்கி கொடுத்திருப்பது பிராண்ட்-நியூ ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரின் சீரிஸ்-2 பிளாக் பேட்ஜ் (Series-2 Black Badge) வெர்சன் ஆகும். இதன் மூலமாக, ஐக்கிய அரபு அமீரகம் நாட்டிலேயே 2025 ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கிய மிகவும் இளம் வாடிக்கையாளராக லக்ஷ்யா சன்பால் விளங்குகிறார்.
முற்றிலும் வெள்ளை நிறத்திலான கல்லீனன் சீரிஸ்-2 காரை ஷோரூமுக்கு நேரில் சென்று தந்தை- மகன் டெலிவிரி பெறும் வீடியோ ஒன்றை சதீஷ் சன்பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், துபாயில் செயல்படும் ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார்ஸ் கார்ஸ் நிறுவனத்தின் உயர் தரத்திலான டீலர்ஷிப் ஷோரூமை மிக அழகாக காட்டி உள்ளனர்.

இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரின் வெளிப்புறம் முற்றிலும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும், உட்புறம் நேர் மாறாக பளிச்சிடும் நியான் பச்சை நிறத்தில் உள்ளது. இந்தியா உள்பட பல வெளிநாடுகளில் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார் ஆனது சீரிஸ்-2 மற்றும் சீரிஸ்-2 பிளாக் பேட்ஜ் வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், சீரிஸ்-2 பிளாக் பேட்ஜ் ஆனது கூடுதல் விலைமிக்கது ஆகும்.
இந்தியாவில் கல்லீனன் சீரிஸ்-2 பிளாக் பேட்ஜ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே சுமார் ரூ.12.5 கோடியாக உள்ளது. துபாயில் இந்த விலையுயர்ந்த காரின் விலை ஏறக்குறைய 25 இலட்சம் திர்ஹாமாக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.5.82 கோடி ஆகும். சீரிஸ்-2 வெர்சனுக்கும், சீரிஸ்-2 பிளாக் பேட்ஜ் வெர்சனுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், பிளாக் பேட்ஜ் வெர்சனில் காரை சுற்றிலும், நிறைய இடங்களில் தனித்துவமான கருப்பு க்ரோம் ட்ரிம்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இருப்பதை காட்டிலும் துபாயில் கிட்டத்தட்ட பாதி விலையில் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் சீரிஸ்-2 பிளாக் பேட்ஜ் கார் விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால், இந்த 25 இலட்சம் திர்ஹாம் எல்லாம் தொழிலதிபர் சதீஷ் சன்பாலுக்கு பெரிய விஷயமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இந்த காரை ஓட்டும் அளவிற்கு லக்ஷ்யா சன்பாலுக்கு 17 வயது நிரம்பிவிட்டதா என்பதுதான் கேள்வியே.


Click it and Unblock the Notifications









