பென்ஸ் வேண்டாம்... அம்பாசடரில் விரும்பி பயணித்த வெளிநாட்டு அமைச்சர்!

Written By:

கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் பென்ஸ் காரை தவிர்த்து, அம்பாசடர் காரை கேட்டு பயணித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும், உண்மையான இந்திய கார் என்றும் அவர் அம்பாசடரை புகழ்ந்து தள்ளினார். இந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 கொச்சிக்கு விசிட்

கொச்சிக்கு விசிட்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரவை விவகாரத் துறை அமைச்சரான முகம்மது அலி கெர்காவி கொச்சிக்கு அரசு முறை பயணமாக வந்திருந்தார். கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருந்தார்.

விருந்து...

விருந்து...

கொச்சி வந்திருந்த அவருக்கு கேரளாவை பூர்விமாக கொண்ட அரபு நாட்டு தொழிலதிபரான யூசுப் அலி தனது இல்லத்தில் விருந்து கொடுத்தார்.

 பென்ஸ் வேண்டாம்

பென்ஸ் வேண்டாம்

இந்த நிலையில், யூசுப் அலி வீட்டிற்கு செல்வதற்காக, அமீரக அமைச்சர் முகம்மது அலிக்கு கேரள அரசு சார்பில், பென்ஸ் கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அலி வைத்த கோரிக்கை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 அம்பிதான் வேணும்

அம்பிதான் வேணும்

யூசுப் அலி வீட்டிற்கு செல்ல எனக்கு அம்பாசடர் கார் ஏற்பாடு செய்யுங்கள் என்று கேரள அரசிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அவருக்கு பென்ஸ் காருக்கு பதிலாக அம்பாசடர் கார் ஏற்பாடு செய்யப்பட்டது.

மறவாத மனம்

மறவாத மனம்

பல ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாக அமைச்சர் முகம்மது அலி இந்தியா வந்திருந்தபோது, அம்பாசடர் காரில் முதல்முறையாக பயணித்துள்ளார். அப்போது அம்பாசடர் கார் அவரை வெகுவாக கவர்ந்துவிட்டது. இதையடுத்து, தற்போதும் அவர் அம்பாசடர் காரை கேட்டு பயணித்துள்ளார். இந்தியர்கள் அம்பியை மறந்தாலும், அமீரக அமைச்சர் முகம்மது அலி, அம்பாசடர் காரை மறக்காமல் கேட்டு பயணித்துள்ளார்.

புகழாராம்

புகழாராம்

அம்பாசடரை கேட்டுப் பெற்றதோடு, காரில் ஏறி அமர்ந்தவுடன், உண்மையான இந்திய கார் அம்பாசடர்தான் என்றும் முகம்மது அலி புகழாராம் சூட்டினார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

 உற்பத்தி நிறுத்தம்

உற்பத்தி நிறுத்தம்

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சாலைகளில் நீக்கமற நிறைந்திருந்த அம்பாசடர் கார் நவீன வடிவமைப்பு கொண்ட கார்களால் வழக்கொழிந்தது. வரவேற்பு குறைந்ததையடுத்து, இரு ஆண்டுகளுக்கு முன் அம்பாசடர் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

அம்பாசடர் பற்றி 9 சுவாரஸ்யங்கள்

அம்பாசடர் பற்றி 9 சுவாரஸ்யங்கள்

அம்பாசடர் பற்றி 9 சுவாரஸ்யமான விஷயங்கள்!

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
"This is original Indian car," the UAE Cabinet Affairs Minister Mohammad Al Gergawi said sitting in the Ambassador car arranged for him at his request at a luxury Hotel in Kochi recently.
Story first published: Monday, February 22, 2016, 17:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more