பார்க்கிங் சார்ஜ் என்கிற பெயரில் எப்படியெல்லாம் கொள்ளை அடிக்குறாங்க பாருங்க!! 1 மணிநேரத்துக்கு 1000 ரூபாயா!
ஓட்டல்களிலும், திரையரங்குகளிலும் பார்க்கிங் கட்டணம் செலுத்துவதே பெரிய தலைவலியாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், பெங்களூருவில் 2015ஆம் காலக்கட்டத்திலேயே வணிக வளாகம் ஒன்றில் வெறும் 1 மணிநேரத்திற்கு சுமார் ரூ.1,000 பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்பட்ட செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ஆதாரமாக, அந்த வணிக வளாகத்தில் எடுக்கப்பட்ட சில படங்களை பலர் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
திரையரங்குகளில் படம் பார்ப்பதற்கு ரூ.150 என்றால் கிட்டத்தட்ட அதே அளவிலான கட்டணம் பார்க்கிங்கிற்கு வசூலிக்கப்படுகிறது. சென்னை போன்ற முக்கிய மாநகரங்களில் இன்னும் அதிகமாக பார்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்களும், மனகுமுறல்களும் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. திரையங்குகளில் மட்டுமின்றி, முக்கியமான நகரங்களில் ஓட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களிலும் இந்த நிலை உள்ளது.

இருப்பினும், 1 மணிநேரத்திற்கு ரூ.1000 பார்க்கிங் கட்டணம் எல்லாம் உண்மையில் டூ மச். இதில் மற்றொரு அதிர்ச்சிக்கரமான விஷயம் என்னவென்றால், இந்த அதிகப்படியான பார்க்கிங் கட்டணம் கிட்டத்தட்ட கடந்த 10 வருடங்களாக வசூலிக்கப்பட்டு வருகிறதாம். பெங்களூரில் உள்ள இந்த வணிக வளாகத்தின் பெயர், யுபி சிட்டி ஷாப்பிங் மால் ஆகும். இங்குதான், 1 மணிநேர பார்க்கிங் கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படுகிறது.
பிரீமியம் பார்க்கிங் என்கிற பெயரில் இந்த அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்திற்கு செல்பவர்களில் சிலர், இந்த அதிக பார்க்கிங் கட்டணத்தால் அதிர்ச்சிக்கு உள்ளாகி, அங்கே இருக்கும் கட்டண பலகையை ஆச்சிரியத்துடன் படம் பிடித்து தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வகையில், 2015ஆம் ஆண்டில், கவி சவுரசியா என்பவர் அந்த பார்க்கிங் கட்டண பலகையை படம்பிடித்து டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அதேபோன்று, இந்த 2024 மார்ச் 5ஆம் தேதி யுபி சிட்டி ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்த இஷான் வாய்ஷ் அங்கிருந்த அந்த பார்க்கிங் கட்டண பலகையை படம்பிடித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளார். டுவிட்டர் எக்ஸ் தளமாக மாறிவிட்டது மற்றும் அந்த பார்க்கிங் கட்டண பலகையின் டிசைன் மற்றும் பெயிண்ட் கூட மாறிவிட்டது. ஆனால், ஒரு மணிநேரத்திற்கு ரூ.1,000 என்கிற கட்டணம் மட்டும் கடந்த 10 வருடங்களாக மாறவில்லை.
இதை இப்படிக்கூட சொல்லலாம், அதாவது, 10 வருடங்களுக்கு முன்பே இந்த வணிக வளாகம் 1 மணிநேர பார்க்கிங்கிற்கு ரூ.1,000ஐ கட்டணமாக வசூலிக்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் சிலர், 2012ஆம் ஆண்டிலேயே இந்த குறிப்பிட்ட வணிக வளாகத்தில் இந்த கட்டண பலகையை பார்த்துள்ளதாக கூறுகின்றனர். இப்போதைய காலக்கட்டத்திலேயே இது அதிகமான கட்டணம் எனும்போது, 2015 சமயத்தில் இது மிக மிக அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, யுபி சிட்டி ஷாப்பிங் மாலில் குறிபிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு ரெகுலர் பார்க்கிங் ஸ்பாட் வழங்கப்படுகிறது. அதற்கான கட்டணம் சாதாரணமானதாகவே இருக்கிறது. ஆனால், பிரீமியம் பார்க்கிங் ஸ்பாட்டிற்கு மட்டும் ரூ.1,000 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பனையாகக்கூடிய நகரங்களுள் ஒன்று பெங்களூர் ஆகும்.
இன்னும் சொல்லப்போனால், தலைநகர் டெல்லிக்கு அடுத்து பெங்களூரில்தான் அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பனையாகுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பெங்களூர் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பெங்களூரில் வாகன ஓட்டிகள் நிறைய பேர் காசு செலவாகினாலும் பரவாயில்லை, ஆனால் வாகனம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற வாகனங்களில் இருந்து பாதுகாப்பாக ஒரு வளாகத்திற்குள் தங்களது காரை நிறுத்த பெங்களூரில் நிறைய வாகன ஓட்டிகள் விரும்புவதாக கூறினாலும், ஒரு மணிநேரத்திற்கு ரூ.1,000 பார்க்கிங் கட்டணம் என்பது உண்மையில் மிக மிக அதிகமாகும். தேசிய தலைநகர் டெல்லியில் மட்டுமின்றி, அமெரிக்காவில் கூட இந்த அளவிற்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.


Click it and Unblock the Notifications








