7 கோடி ரூபாக்கு ஊபர் டாக்சியில் பயணித்த இளைஞர்? இதுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரையே வாங்கியிருக்கலாமே! இது உண்மைதானா?
ஊபர் கால் டாக்சியில் ஓர் நபர் 7 கோடி ரூபாய் கட்டணம் வரும் அளவிற்கு பயணித்து இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் எங்கு அரங்கேறியது? இது உண்மை சம்பவம்தானா? என்பது பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கால் டாக்சி சேவைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அவசர தேவைகளுக்கு ஏற்ப பொதுப் போக்குவரத்து வாகனங்களை பன்படுத்துவது இயலாது. இதனாலும், விரும்பிய இடத்தின் வாசலுக்கே சென்று சேர முடியும் என்பதாலும் பலர் கால் டாக்சி சேவையை அதிகளவில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவின் கால் டாக்சி சேவை பிரிவில் ஓலா மற்றும் ஊபர் இந்த இரு நிறுவனங்களே முன்னணி நிறுவனங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. இரண்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே ஊபர் கால் டாக்சியில் ஒருவர் 7 கோடி ரூபாய் கட்டணம் வரும் அளவிற்கு பயணித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், உண்மையில் அந்த நபர் புக் செய்தது ரூ. 62 கட்டணத்திற்கான ரைடே ஆகும். ஆமாங்க, மிக அருகில் இருக்கும் இடத்திற்கு செல்ல ஆஷிஷ் மிஷ்ரா எனும் நபர் ஊபர் ஆட்டோவைப் புக் செய்திருக்கின்றார். அந்த ரைடுக்கு கட்டணமாக ரூ. 62 என்றே சவாரி புக் செய்யும்போது காண்பித்திருக்கின்றது.
ரைடை முடித்த பின்னர் கட்டணம் செலுத்தலாம் என அவர் செயலியை திறந்து பார்த்தபோது அவருக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. ஆஷிஷ் மிஷ்ராவிற்கு சவாரிக்கான கட்டணமாக பெரும் தொகைக் காண்பித்து இருக்கின்றது. 7,66,83,762 ரூபாயை செலுத்த வேண்டும் என்றே அவர் அந்த செயலி கூறி இருக்கின்றது.
இதனால் ஒரு நிமிஷம் ஆஷிஷ் மிஷ்ரா மிரண்டு போயிருக்கின்றார். சவாரிக்கான கட்டணம் மற்றும் காத்திருப்பிற்கான கட்டணம் என்று கூறியே அந்த மாபெரும் தொகை கட்டணமாக அவருக்கு காண்பித்திருக்கின்றது. இந்த கட்டணத்தில் ரெண்டு, மூன்று ஆடி, பென்ஸ் காரையே வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஏன் இந்த கட்டணத்தில் விமானத்தில் உலகையே சுற்றி வந்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மாபரெும் கட்டணத்தையே ஊபேர் நிறுவனம் லோக்கல் சவாரிக்கு கட்டணமாக கேட்டிருக்கின்றது. ஆனால், இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வந்த பில் தொகை ஆகும். எனவே அவர் அவருக்கான ரூ. 62 கட்டணத்தையே ஆட்டோ ஓட்டநருக்கு வழங்கியதாகக் கூறப்படுகின்றது.
இதுபோன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மிகப் பெரிய தொகைக் கட்டணமாக காண்பிப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் கோடி கணக்கான ரூபாயில் பில் வந்திருக்கின்றது. இதுமாதிரியான சர்ச்சைகளைத் தொடர்ந்து கால் டாக்சி நிறுவனங்கள் அந்த விஷயத்தில் தலையிட்டு நல்ல தீர்வை எட்டி இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

சில நேரங்களில் சில பயணிகள் சில ஆயிரங்களை அதிகக் கட்டணமாக சம்பவமும் அரங்கேறி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், சில நூறு ரூபாய்களை அதிகக் கட்டணமாகப் பெற்றவர்களும் உண்டு. இதுமாதிரியான நேரங்களில் பெரும்பாலும் பயணி - ஊபர் பார்ட்னர்கள் இடையே மோதலே பெரும்பாலும் நிகழும். ஆனால், இந்த சம்பவத்தில் அதுமாதிரியான முரண்பாடு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் போலவே கால் டாக்சிகளுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த துறையை நம்பி பல குடும்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக, வேலை வாய்ப்பு இல்லாத பட்டதாரி இளைஞர்கள்கூட இந்த துறையை நம்பியே தங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றனர். அந்த அளவிற்கு பலருக்கு கஞ்சியூற்றும் துறையாக கால் டாக்சி துறை இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









