உபரில் கார் ஓட்டும் அதேநேரம் இந்த விஷயத்தையும் தெரிந்து வைத்திருக்காரு! தோள்பட்டை வலியில் இருந்து தப்பிக்கலாம்

பெடில் ஷிஃப்டர்ஸ் (Paddle Shifters), செயல்திறன்மிக்க ஸ்போர்டியான கார்களில் மட்டுமே பெரும்பாலும் வழங்கப்படும் நிலையில், பெங்களூரில் உபேர் கார் டிரைவர் ஒருவர் தனது காரில் பெடில் ஷிஃப்டரை சொந்தமாக பொருத்தி உள்ளார். இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பெடில் ஷிஃப்டரை இந்த உபேர் கார் டிரைவர் தான் சொந்த ஐடியாவில் உருவாக்கி உள்ளார்.

பெங்களூர், இந்தியாவின் மென்பொருள் தலைநகரம். இதனாலேயே, தேசிய தலைநகர் டெல்லியை தவிர்த்து மற்ற இந்திய நகரங்களை காட்டிலும் பெங்களூர் டெக்னாலஜி விஷயங்களில் கொஞ்சம் அட்வான்ஸாக உள்ளது. குறிப்பாக, மாடர்ன் டெக்னாலஜியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் நகரங்களுள் முதன்மையானதாக பெங்களூர் உள்ளது.

car driver designed paddle shifters

பெங்களூரில் வசிக்கும் மக்களிடத்தில் தொழிற்நுட்பங்களை பயன்படுத்தும் திறன் அதிகமாக இருப்பதை இதற்கு முன்னர் பல்வேறு சம்பவங்களின் போது பார்த்துள்ளோம். இந்த வரிசையில் மற்றொரு சம்பவத்தை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். பார்த் பர்மர் என்பவர் பெங்களூரில் மராதாஹல்லியில் இருந்து எச்.எஸ்.ஆர் லேஅவுட்டிற்கு செல்ல உபேர் காரை புக் செய்துள்ளார்.

இதன்படி, பார்த் பர்மர் இருந்த இடத்திற்கு உபேர் கார் ஒன்று வந்தது. காருக்குள் ஏறிய பார்த் பர்மருக்கு காரின் டேஸ்போர்டில் ஏதோ வித்தியாசமான பொருள் ஒன்று இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், கார் டிரைவரிடம் அதுகுறித்து கேட்டுள்ளார். துரை என பெயர் கொண்ட அந்த கார் டிரைவர் இது பெடில் ஷிஃப்டர்ஸ் என கூற பார்த் பர்மருக்கு கொஞ்சம் ஆச்சிரியமாக இருந்துள்ளது.

car driver designed paddle shifters

அதனை காட்டிலும் ஆச்சிரியம் என்னவென்றால், இந்த பெடில் ஷிஃப்டரை டிரைவர் துரை தனது சொந்த ஐடியாவில் உருவாக்கி, காரின் டேஸ்போர்டில் பொருத்திக் கொண்டுள்ளார். தனக்கு தோள்பட்டை வலி இருப்பதாகவும், இதனால் செண்டர் கன்சோலில் உள்ள கியர் லிவரில் அடிக்கடி கியரை மாற்ற முடியாததால் இவ்வாறு செய்துக் கொண்டுள்ளதாகவும் டிரைவர் துரை தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் பார்த் பர்மருக்கு பிடித்துப்போக உடனடியாக அதனை படம் பிடித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பார்த் பர்மரின் டுவிட்டரில் பதிவில், "இதற்கு மொத்தமாக ரூ.9,000 இவருக்கு செலவாகி உள்ளது. இது பெரிய விஷயமாக இருக்கலாம். இதனை மேலும் பெரிதாக்க அவருக்கு (துரை) சரியான ஆதரவும், வழிக்காட்டலும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை" என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், கியரை மாற்றி மோட்டாரை இயங்க வைக்க சிப் ஒன்று இந்த பெடில் ஷிஃப்டர் சிஸ்டத்தில் உள்ளதாகவும் கூறியுள்ள பார்த் பர்மர், இந்த உபேர் கார் டிரைவருக்கு இந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு என 4 மொழிகள் தெரிந்திருப்பதாகவும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். பார்த் பர்மரை போல் இணையத்தில் பலரை இந்த தனித்துவமான பெடில் ஷிஃப்டர் கவனம் ஈர்த்துள்ளது.

பொதுவாக, பெடில் ஷிஃப்டர்ஸ் அனைத்து விதமான கார்களிலும் வழங்கப்படுவதில்லை. அதிவேகமாக செல்லக்கூடிய கார்களில் மட்டுமே, வேகமாக பயணிக்கும்போது டிரைவர் ஸ்டேரிங் சக்கரத்தில் இருந்து கையை எடுக்காமல் கியரை மாற்ற உதவியாக, ஸ்டேரிங்கிற்கு பின்னால் வழங்கப்படுகிறது. அதனை இந்த உபேர் கார் டிரைவர் தனது சவுகரியத்துக்கு ஏற்ப டேஸ்போர்டில் பொருத்திக் கொண்டுள்ளார்.

car driver designed paddle shifters

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு சொந்தமாக யோசித்து, தனது சவுகரியத்துக்கு ஏற்ப காரில் மாற்றங்களை செய்துக் கொள்வது பாராட்டுக்குரியது. இருப்பினும், அதேநேரம் இவ்வாறான மாடிஃபிகேஷன்கள் எதிர்காலத்தில் காரில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் அல்லது காரின் மைலேஜை குறைக்கலாம். சோதனை செய்யும் போலீஸாருக்கு விசித்திரமானதாக தோன்றினால், கார் பறிமுதல் செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளதை மறந்துவிட வேண்டாம்.

More from DriveSpark

Article Published On: Friday, January 19, 2024, 12:08 [IST]
English summary
Uber car driver designed paddle shifters himself check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X