ரைடை கேன்சல் செய்தாலே ரூ23 லட்சம் சம்பாதிக்க முடியுமா? 70 வயது உபேர் டிரைவர் போட்ட மாஸ்டர் பிளான்!

உபேர் டிரைவர் ஒருவர் தனக்கு வரும் புக்கிங்களை கேன்சல் செய்து ரூபாய் 23 லட்சம் சம்பாதித்துள்ளார். காருக்குள் அமர்ந்து கொண்டே காரை ஓட்டாமல் இவர் எப்படி இவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா? இவர் என்ன டிரிக் செய்து சம்பாதித்தார்? என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

ஒருவர் ஆண்டுக்கு ரூபாய் 20 லட்சம் சம்பளம் வாங்குவது என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய இன்ஜினியரிங் பட்டதாரிகள் ஐஐடியில் படித்தவர் கூட இவ்வளவு அதிகமான சம்பளத்தில் வேலைக்கு செல்வது என்பது பலருக்கும் நடக்காத காரியமாக இருக்கிறது. ஆனால் உபேர் டிரைவர் ஒருவர் தனக்கு வரும் ரைடுகளை கேன்சல் செய்து ரூபாய் 23 லட்சம் சம்பாதித்துள்ளார்.

uber driver earns by cancelling rides

அமெரிக்காவில் உபேர் டிரைவராக பணியாற்றி வருபவர் பில். இவர் குறித்த பேட்டி ஒன்று சமீபத்தில் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியிருந்தது. சாமானிய மனிதர்களை பேட்டி எடுக்கும் பதிவில் இவரது இந்த பேட்டியும் பதிவாகி இருந்தது. இதில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு திடுக்கிடும் உண்மை சம்பவம் ஒன்றை பில் வெளியிட்டு இருந்தார். இதை கேட்டதும் இப்படி எல்லாம் கூட நடக்குமா? என நாம் அனைவரும் யோசிக்க துவங்கி விடுவோம்.

இந்த பேட்டியில் அவர் தான் உபேர் கார் டிரைவராக பணியாற்றி வரும் நிலையில் தனக்கு வரும் ரைடுகளை கேன்சல் செய்து 28 ஆயிரம் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 23 லட்சம் சம்பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அது எப்படி ரைடுகளை கேன்சல் செய்து இவர் சம்பாதித்தார்? என நேர்காணலை நடத்தியவர் கேட்ட கேள்விக்கு இவர் அளித்த விளக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

uber driver earns by cancelling rides

அவர் அளித்த விளக்கம்: "நான் உபேர் டிரைவராக பணியாற்றியபோது பெரும்பாலான நேரங்களில் ரைடுகளை எடுப்பதில்லை. எனக்கு 70 வயதாகிறது அதனால் நான் அதிக விலைக்கு ரைடு வரும் போது மட்டுமே அதை அக்செப்ட் செய்கிறேன். பெரும்பாலான நேரங்களில் ரைடுகளை அக்செப்ட் செய்வதில்லை.

அப்படியே அக்செப்ட் செய்தாலும் அதை நான் செக் செய்துவிட்டு கேன்சல் செய்து விடுகிறேன். எனக்கு மொத்தம் வரும் 100 அழைப்புகளில் வெறும் 10 சதவீதமான அழைப்புகளை மட்டும் தான் அக்செப்ட் செய்கிறேன். 30 சதவீதமான அழைப்புகளை கேன்சல் செய்கிறேன். மற்ற அழைப்புகளை ஏற்பதே இல்லை.

uber driver earns by cancelling rides

இதுவரை சுமார் 1500 அழைப்புகளை கேன்சல் செய்துள்ளேன். ஆனால் நான் உபேர் டிரைவராக இருந்து ரூபாய் 23 லட்சம் சம்பாதித்துள்ளேன். குறிப்பிட்ட கால நேரங்களில் (Peak Hour Riding) ரைடுக்கான விலை அதிகமாகும். அந்த நேரத்தில் நான் ஒரே ரைடரை எடுத்து அதிகம் சம்பாதித்து விடுவேன்.

உதாரணமாக 20 நிமிட ரைடு என்றால் 10 டாலர் வரை சாதாரணமாக இருக்கும். ஆனால் பீக் நேரங்களில் அது 20,40 ஏன் சில நேரம் 50 டாலராக கூட உயரும் 50 டாலருக்கு ரைடு எடுத்தால் அதில் 50 சதவீத கமிஷன் டிரைவருக்கு கிடைக்கும்.

இதே போல 35 நிமிடம் ரைடு எடுத்தால் 30 முதல் 60 டாலர் வரை சம்பாதிக்க முடியும். என்னை பொறுத்தவரை இரவு 10 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை தான் பீக் நேரமாக இருக்கிறது. நான் பெரும்பாலும் விமான நிலையங்கள் மற்றும் பார்கள் பகுதியில் அடிக்கடி சுற்றிக் கொண்டிருப்பேன்.

இந்த நேரங்களில் குறிப்பிட்ட இந்த இடங்களில் எல்லாம் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் அதிகம் ரைடுகளை புக் செய்வார்கள். இதன் மூலம் என்னால் அதிகம் சம்பாதிக்க முடிகிறது. இந்த நேரத்தில் குறுகிய தூரம் பயணம் செய்தாலே அதிக பணம் கிடைக்கும். அதனால் அதை மட்டுமே தேர்வு செய்வேன்.

நான் ஒரு முறை 27 டாலருக்கு 2மணி நேரம் பயணம் செய்யும் ரைடை எடுத்தேன் அது எனக்கு பெரும் நஷ்டமாக அமைந்தது. அதன் பிறகு ஒன்வே ரைடுகளை பெரும்பாலும் தவிர்க்க துவங்கி விட்டேன். இதனால் வெகு சில நேரம் மட்டும் வேலை பார்த்தால் போதும் மற்ற நேரம் ரைடுகளை கேன்சல் செய்து தேவையான ரைடுகளை மட்டும் அக்செப்ட் செய்தாலே நல்ல சம்பாத்தியம் கிடைக்கும்" என்று கூறினார்.

உபேர் கேப் டிரைவர் ஒருவர் ரைடுகளை கேன்சல் செய்து ரூபாய் 23 லட்சம் சம்பாதித்துள்ள செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இதுபோன்று இந்தியாவில் சம்பாதிக்க முடியுமா? என்றால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான். இந்தியாவில் உள்ள ரைடு வழங்கும் முறையும் அமெரிக்காவில் உள்ள ரைடு வழங்கும் முறையும் வேறு வேறாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது ஓலா உபேர் போன்ற கேப்களில் ரைடு செய்யும் டிரைவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் இல்லை என்ற பெரும் குற்றச்சாட்டு நம்மளால் அடிக்கடி கேட்க முடிகிறது. இதை சரி செய்ய ஓலா உபேர் போன்ற நிறுவனங்கள் தங்கள் சேவை தரத்தையும், அதே நேரம் டிரைவர்களுக்கான கமிஷனையும் அதிகப்படுத்த யோசனைகளை செய்ய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 9, 2023, 10:20 [IST]
English summary
Uber driver earns 23 lakh canceling rides tips know how
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X