வயசோ வெறும் 29தான்.. ஆனா சொகுசு கார் வச்சிருப்பதுல சரவணா ஸ்டோர் ஓனருக்கே டஃப் கொடுக்குறாரு!
இப்போது பெரும் செல்வந்தர்களாக இருக்கும் அம்பானி மற்றும் சரவணா ஸ்டோர் சாம்ராஜ்யத்திற்கு பின்னால் மிகப் பெரிய வரலாறு உண்டு. அதாவது இவர்கள் அனைவரும் ஏழ்மையான வாழ்க்கையில் இருந்தே கோடீஸ்வர வாழ்க்கையை எட்டி இருக்கின்றனர். இவர்களைப் போல இன்னும் பலர் இந்த உலகில் இருக்கின்றனர்.
அத்தகைய ஓர் இளம் தொழில்முனைவோர் பற்றிய சுவாரஷ்யமான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இந்த இளம் தொழிலதிபர் ஒரு காலத்தில் ஊபர் கால் டாக்சியை ஓட்டிக் கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இப்போது அவரிடத்தில் இல்லாத சொகுச இருக்காது என்று கூறிவிடலாம்.

அந்த அளவிற்கு அதிக அளவில் லக்சூரி கார்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். அவருடைய கார் சேகரிப்பில் பென்ட்லீ, ஆஸ்டன் மார்ட்டின், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் என ஏகப்பட்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. சாகித் அன்வர் எல்எல்சி (வயது 29), இவரே அந்த இளம் தொழில்முனைவர் ஆவார்.
இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே சவுதி அரேபியாவில் இருந்து அமெரிக்கா வந்திருக்கின்றார். அப்போது அவரிடத்தில் வெறும் ஐந்தாயிரம் டாலர்கள் மட்டுமே இருந்திருக்கின்றது. முதலில் அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலேயே குடிபெயர்ந்திருக்கின்றார். இந்த நகரம் அவருக்கு பிடித்ததாக இல்லை என கூறி அங்கிருந்து அவர் அமெரிக்காவின் மற்றுமொரு அழகிய நகரமான கலிஃபோர்னியாவிற்கு இடம் பெயர்ந்திருக்கின்றார்.

ஆனால், இந்த நகரமும் அவருக்கு பிடிக்கவில்லை. ஆகையால், அங்கிருந்து நியூ ஜெர்சி நகரத்திற்கு மாறி இருக்கின்றார். இந்த நகரும் பிடிக்காமல் போக அவர் அடுத்ததாக விர்ஜினியாவிற்கு மாறினார். இங்கு ஆரம்பத்தில் பிழைப்பை நடத்த உபேர் கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி இருக்கின்றார்.
மேலும், தன்னுடைய வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள அவர் சீனாவில் இருந்து பர்சஸ் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்து விற்பனைச் செய்திருக்கின்றார். இதில் நல்ல லாபம் கிடைத்திருக்கின்றது. இருப்பினும், அது போதுமானதாக இல்லாத காரணத்தினால் அவர் வறுத்த கோழி இறைச்சிக் கடையை அங்கு திறந்திருக்கின்றார்.
வியாபாரம் நல்லபடியாக ஆகிக் கொண்டிருக்கின்ற, கொரோனா வைரஸ் பரவல் அவரின் தொழிலைப் பதம் பார்க்கத் தொடங்கிவிட்டது. இதில், அவரின் தொழில் முழுமையாக பாதித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும், விடாப்பிடியாக இருந்த சாகித் அன்வர், தன்னுடைய தொழிலை ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் வாயிலாக மீண்டும் தொடங்கினார்.
இந்த நிலையிலேயே அவர் வாழ்க்கை வெற்றி பயணத்தை நோக்கி நகரத் தொடங்கி இருக்கின்றது. மிகப் பெரிய அளவில் அவருக்கு வருமானம் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த நிலையிலேயே அரண்மனைக்கு இணையான வீடு மற்றும் சொகுசு கார்கள் பலவற்றை அவர் அமெரிக்காவில் வாங்கிக் குவிக்கத் தொடங்கி இருக்கின்றார்.
இவர் வைத்திருக்கும் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி சொகுசு கார் மாடலின் விலை மட்டுமே ரூ. 3 கோடி ஆகும். இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 542 பிஎச்பி பவரையும், 770 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இந்த காரை போலவே மற்றுமொரு அதிக பவர்ஃபுல்லான காரையும் சாகித் வைத்திருக்கின்றார். அஸ்டன் மார்டின் வேன்டேஜ் ரோட்ஸ்டரே அது ஆகும். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 1.9 கோடிக்கும் அதிகம் ஆகும். இதில், 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 502 பிஎச்பி பவரையும், 675 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
சாகித் இடத்தில் இருக்கும் மற்றுமொரு சிறப்பான கார் மாடலே மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி ஆகும். இந்தியர்கள் பலரின் பிரியமான கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. குறிப்பாக பாலிவுட் திரை உலகைச் சேர்ந்தவர்கள் பலருக்கு பிடித்தமான கார் மாடலாக ஜி60 ஏஎம்ஜி இருக்கின்றது.
இதன் விலை ரூ. 3 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்த கார்களைத் தொடர்ந்து இன்னும் சில கார்களையும் வாங்க சாகித் ஆர்டர் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. அவர் மெக்லாரன் மற்றும் ஃபெர்ராரி கார்களுக்கே ஆர்டர் கொடுத்திருக்கின்றார். இவற்றின் விலையும் கோடிகளைக் கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளம் வயதுடையவராக இருந்தாலும் இவரிடத்தில் ஏகப்பட்ட சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இந்தியாவிலும் இதுபோன்ற இளம் வயதுடைய பெருந்த செல்வந்தர்கள் மற்றும் தொழில்முனைவோர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. உதாரணமாக ஜெப்டோ உரிமையாளரை கூறலாம்.


Click it and Unblock the Notifications








