மொபைல்போனில் பேச வேண்டாம் என்று கூறியதால் வசைபாடிய உபேர் டிரைவர்!

Written By:

டிரைவ்ஸ்பார்க் தளத்தின் எடிட்டர் ஜோபோ குருவில்லா இன்று காலை பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்புவதற்காக உபேர் வாடகை கார் முன்பதிவு செய்துள்ளார்.

பெங்களூர் விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள உபேர் பிக்கப் பாயிண்ட்டில் இருந்து KA36 B 2120 என்ற பதிவு எண் கொண்ட டொயோட்டா எட்டியோஸ் காரில் ஏறி இருக்கிறார். திம்மண்ணா என்பவர் டிரைவராக வந்துள்ளார்.

அப்போது கார் டிரைவர் திம்மண்ணா தனது நண்பருடன் லவுட் ஸ்பீக்கரில் போட்டு போன் பேசிக்கொண்டே வந்துள்ளார். லவுட் ஸ்பீக்கரில் பேசுவது தொந்தரவாக இருப்பதாகவும், மொபைல்போனில் பேசியபடி கார் ஓட்ட வேண்டாம் என்று ஜோபோ குருவில்லா தெரிவித்துள்ளார். இதனை கார் ஓட்டி பொருட்படுத்தவில்லை.

பெங்களூர் விமான நிலைய சுங்கச் சாவடி அருகே வந்தபோது, மொபைல்போனில் பேசுவதை நிறுத்துமாறு ஜோபோ குருவில்லா மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், அவர் என்னால் நிறுத்தமுடியாது. எங்கு வேண்டுமானாலும் புகார் புகார் சொல்லுங்கள். கவலை இல்லை என்று திமிராக பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து, சுங்கச் சாவடியை கடந்த சில நிமிடங்களில் காரில் தொடர்ந்து பயணிப்பது அபாயகரமானதாக கருதி, காரை நிறுத்த சொல்லி இறங்கிவிட்டார் ஜோபோ. மேலும், சில கிலோமீட்டர் தூரம் பயணித்ததற்கு சுங்கக் கட்டணம் சேர்த்து ரூ.451 கட்டணமாக வாங்கி இருக்கின்றனர். வேறு நிறுவனத்தின் காரை முன்பதிவு வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பதிவு மூலமாக உபேர் நிறுவனத்திடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக அளித்த புகாருக்கு அந்த உபேர் நிறுவனத்தின் சேவை தரம் எந்தளவு இருக்கிறது என்பதை தொடர்ந்து பாருங்கள்.

பின்னர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய டிரைவரின் படத்திற்கும், திம்மண்ணா என்ற உபேர் நிறுவனத்திடம் பதிவு செய்யப்பட்டு இருக்கும் படத்தையும் ஒப்பிட்டு பார்த்ததில், இருவரும் வெவ்வேறு நபர்கள் என்று தெரிய வந்துள்ளது.

மொபைல்போனில் பேச வேண்டாம் என்று கூறியதால் வசைபாடிய உபேர் டிரைவர்!

சுங்கச் சாவடியை கடந்த சில நிமிடங்களில் காரில் தொடர்ந்து பயணிப்பது அபாயகரமானதாக கருதி, காரை நிறுத்த சொல்லி இறங்கிவிட்டார் ஜோபோ. மேலும், சில கிலோமீட்டர் தூரம் பயணித்ததற்கு சுங்கக் கட்டணம் சேர்த்து ரூ.451 கட்டணமாக வாங்கி இருக்கின்றனர். வேறு நிறுவனத்தின் காரை முன்பதிவு வீடு திரும்பியுள்ளார்.

Recommended Video - Watch Now!
[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
மொபைல்போனில் பேச வேண்டாம் என்று கூறியதால் வசைபாடிய உபேர் டிரைவர்!

இது மேலும் ஆபத்தான விஷயம். இவ்வாறு நடப்பதற்கு உபேர் நிறுவனம் எவ்வாறு அனுமதிக்கிறது என்பது தெரியவில்லை.

மொபைல்போனில் பேச வேண்டாம் என்று கூறியதால் வசைபாடிய உபேர் டிரைவர்!

இதுபற்றி டிவிட்டரில் சிலர் உபேர் நிறுவனத்தின் டிரைவர்களின் போக்கு குறித்து கருத்து தெரிவிக்க துவங்கியதும், பின்னர் உபேர் நிறுவனத்தின் சமூக வலைதள அட்மின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மொபைல்போனில் பேச வேண்டாம் என்று கூறியதால் வசைபாடிய உபேர் டிரைவர்!

மொபைல்போனில் பேசியபடி, கார் ஓட்டிய டிரைவர் மீதான புகாரை கண்டுகொள்ளாமல், புகார் கொடுத்த வாடிக்கையாளர் மீதே சரியான பதில் தராமல் திமிராக பேசியிருக்கிறார் உபேர் நிறுவனத்தின் ட்விட்டர் அட்மின்.

மொபைல்போனில் பேச வேண்டாம் என்று கூறியதால் வசைபாடிய உபேர் டிரைவர்!

பெண்கள், வயதானாவர்கள் இதுபோன்ற ஓட்டுனர்களை நம்பி பயணிக்கும்போது எந்தளவு அபாயகரமானதாக இருக்கும் சொல்ல வேண்டியதில்லை. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

மொபைல்போனில் பேச வேண்டாம் என்று கூறியதால் வசைபாடிய உபேர் டிரைவர்!

உபேர் டிரைவர் திம்மண்ணாவுக்கு வாடிக்கையாளர்களால் 4.59 தர மதிப்பீடு கொடுக்கப்பட்டு இருப்பதாக காட்டுகிறது. இதிலிருந்தே, இதுபோன்ற டிரைவர்களுக்கு இவர்களே தர மதிப்பீட்டில் கூடுதல் புள்ளிகளை வழங்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

உபேர் நிறுவனத்திடமிருந்து பதில்

உபேர் நிறுவனத்திடமிருந்து பதில்

ஒருவழியாக இந்த சம்பவம் தொடர்பாக, உபேர் டாக்சி நிறுவனத்திடமிருந்து வருத்தம் தெரிவித்து பதில் அனுப்பப்பட்டு இருக்கிறது.

மொபைல்போனில் பேச வேண்டாம் என்று கூறியதால் வசைபாடிய உபேர் டிரைவர்!

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட ஓட்டுனரை சேவையிலிருந்து விலக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், தொடர்ந்து சிறப்பான சேவையை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளது.

Trending On DriveSpark Tamil:

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் புதிய மாருதி கார்கள்!

நானோ கார் விற்பனையை நிறத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு?

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Uber driver refused to get off the phone.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark