உபர் டாக்ஸியில் மூழ்கி கிடக்கும் இந்தியர்கள்!! பக்கத்து கடைக்கு கூட காரில்தான் போறாங்க... டேடா சொல்லுது!

உபர் (Uber) டாக்ஸிகளில் நம் இந்திய மக்கள் இந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 6.8 பில்லியன் கிமீ, அதாவது 680 கோடி கிமீ தொலைவிற்கு பயணம் செய்துள்ளதாக ஓர் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த மேலும் சுவாரஸ்யமான விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

உபர், இந்தியாவின் முன்னணி டாக்ஸி சேவைகளை வழங்கும் நிறுவனம். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உபர், இந்தியாவில் டாக்ஸி சேவையை வாடகை மற்றும் பகிர்வு என இரு விதமாக வழங்குகிறது. அதாவது, வாடிக்கையாளர்கள் உபர் காரை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொண்டு பயணிக்கலாம்.

uber india annual data report

இந்த நிலையில் உபர் இந்தியா நிறுவனம் அதன் வருடாந்திர டேடா ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி பார்க்கும்போது, இந்தியாவில் இந்த 2023ஆம் வருடத்தில் ஏறக்குறைய சுமார் 680 கோடி கிமீ தொலைவிற்கு உபர் டாக்ஸிகள் இயக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 63.31 லட்ச கிமீ தொலைவிற்கு சாலை வசதிகள் உள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவிக்கிறது.

இதன்படி பார்த்தால், உபர் டாக்ஸிகள் இந்த 63.31 லட்ச கிமீ தொலைவை இந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ஆயிரம் முறை சுற்றி வந்ததற்கு சமம் 680 கோடி கிமீ ஆகும். உபர் டாக்ஸி சேவை அதிகளவில் பயன்படுத்தப்படும் நகரமாக முதலிடத்தில் வழக்கம்போல் தேசிய தலைநகர் டெல்லி உள்ளது. டெல்லி என்றால் டெல்லி மட்டுமில்லை, டெல்லிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள மற்ற மாநில பகுதிகளும் ஆகும்.

uber india annual data report

டெல்லிக்கு அடுத்து உபர் டாக்ஸிகள் இந்த வருடத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட நகரமாக 2வது இடத்தில் பெங்களூர் உள்ளது. ஷேர் ஆட்டோ போன்று ஷேர் டாக்ஸி சேவையை உபர் ஆட்டோ மற்றும் உபர் கோ என இரு விதமான பிரிவுகளின் கீழ் உபர் நிறுவனம் வழங்குகிறது. இவை இரண்டிற்கும் இந்த 2023ஆம் வருடத்தில் சிறப்பான வரவேற்பை மக்கள் அளித்துள்ளதாகவும், குறிப்பாக உபர் ஆட்டோ சேவையை ஏழை, எளிய மக்களும் பயன்படுத்துவதாக உபர் தெரிவிக்கிறது.

டெல்லி, பெங்களூர் மட்டுமின்றி, மும்பை, ஹைதராபாத், புனே மற்றும் கொல்கத்தாவிலும் உபர் டாக்ஸிகள் இந்த 2023இல் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் குறிப்பாக, மும்பையில் இந்தியாவிலேயே அதிகளவில் லேட்-நைட் ட்ரிப்கள் புக் செய்யப்பட்டதாக உபர் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் வார இறுதி பண்டிகை நாட்களின் போது உபர் டாக்ஸிகள் அதிகம் புக் செய்யப்படுகின்றன.

uber india annual data report

டெல்லியில் அலுவலகங்களுக்கு பெரும்பாலானோர் உபர் டாக்ஸிகளில் தான் செல்வதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் மாலை 6 - 7 மணியளவில், அலுவலக வேலைகள் முடியும் நேரத்தில் அதிகம் உபர் டாக்ஸிகள் புக் செய்யப்படுகின்றனவாம். அதேபோல், உபர் டாக்ஸிகள் பரபரப்பாக இயங்கும் நாள் சனிக்கிழமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரம், வாரம் சனிக்கிழமையை தவிர்த்து, பண்டிகை நாட்களிலும் உபர் டாக்ஸிகள் அதிகம் புக் செய்யப்படுவதாக இந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. துர்கா பூஜை சமயத்தில் அதிகம் உபர் டாக்ஸிகள் புக் செய்யப்பட்டு இருந்த நிலையில், சமீபத்தில் சென்ற கிறித்துமஸ் பண்டிகை சமயத்திலும் அதிக பேர் உபர் டாக்ஸி சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

uber india annual data report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சமயத்தில் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் இந்தியாவில் ஒரு பெரும் புரட்சியை செய்தன. தற்போது, உபர், ஓலா போன்ற ஆன்லைன் டாக்ஸி சேவைகள் மக்களின் போக்குவரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒரு வருடத்தில் 680 கோடி கிமீ தொலைவிற்கு பயணம் என்பதை உண்மையில் நம்பவே முடியவில்லை. நம் சென்னையில்தான் உபர் டாக்ஸிகள் சற்று குறைவாக பயன்படுத்தப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, December 29, 2023, 13:10 [IST]
English summary
Uber india annual data report 2023 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X