பறக்கும் கால்டாக்ஸி கட்டுமானத்திற்காக உபர் நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் நாசா..!!

Written By:

துபாயில் பறக்கும் கால்டாக்ஸிக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் வேளையில், இதே கட்டுமானத்தில் புதியவரவாக கால்பதிக்கிறது நாசா.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
உபர் நாசா கூட்டணி: 2020ல் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகம்..!!

இதற்காக உபர் கால்டாக்ஸி நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ள நாசா, அதற்குரிய மென்பொருளை உருவாக்கும் பணியில் மும்முரமாக உள்ளது.

உபர் நாசா கூட்டணி: 2020ல் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகம்..!!

2020ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் அறிமுகமாகும் இத்திடத்துக்கான ஒப்பந்தத்தில் நாசா மற்றும் உபர் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.

Recommended Video
[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
உபர் நாசா கூட்டணி: 2020ல் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகம்..!!

இதே அடிப்படையில் தான் மென்பொருள் உருவாக்கப்பட்டு பறக்கும் டாக்ஸி சேவையை நாசா மற்றும் உபர் இணைந்து தயாரிக்கவுள்ளன.

உபர் நாசா கூட்டணி: 2020ல் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகம்..!!

இவர்களது கூட்டணியில் உருவாகும் பறக்கும் டாக்ஸி நான்கு பேர் பயணிக்கும் வகையில் இருக்கும். மணிக்கு 322கி.மீ வேகம் செல்லும் இந்த டாக்ஸி சேவை 2020 லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அறிமுகமாகும்.

உபர் நாசா கூட்டணி: 2020ல் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகம்..!!

பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு 2023-ம் ஆண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகமாகவுள்ளது.

உபர் நாசா கூட்டணி: 2020ல் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகம்..!!

முதலில் விமானிகளுடன் செயல்படும் இந்த பறக்கும் டாக்ஸிகள், அதன் மூலம் கிடைக்கும் முடிவுகளை வைத்து தானியங்கி சேவைக்கு மாற்றப்படும்.

உபர் நாசா கூட்டணி: 2020ல் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகம்..!!

2028ம் ஆண்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெருமளவில் பறக்கும் டாக்ஸி சேவை பயன்படுத்தப்படவுள்ளது.

உபர் நாசா கூட்டணி: 2020ல் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகம்..!!

இதை அதிகாரப்பூர்வமாக உபர் கால்டாக்ஸி சேவை நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளாராக உள்ள மேத்யூ விங் தெரிவித்துள்ளார்.

உபர் நாசா கூட்டணி: 2020ல் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகம்..!!

நான்கு கட்ட திட்ட வடிவில் செயல்படுத்தப்படவுள்ள பறக்கும் டாக்ஸி சேவைக்கு அமெரிக்க அரசின் விமான போக்குவரத்து துறையிடம் 2015ல் அனுமதி பெறப்பட்டு விட்டது.

உபர் நாசா கூட்டணி: 2020ல் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகம்..!!

இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் திட்டவறையரையும் தயாரிக்கப்பட்டது.

மூன்று மற்றும் நான்காம் கட்ட பகுதிகளில் பறக்கும் டாக்ஸிக்கான சோதனை 2018, 2019ல் நடக்கிறது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: NASA to build Flying Taxi Air control Software, Joins hand with Uber. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos