உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
கேப்களில் செல்லும்போது பொருட்களைத் தொலைப்பதில் டெல்லி நகரம் தான் இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்துள்ளதாக தற்போது வெளியான சர்வே ரிப்போர்ட் ஒன்றில் வெளியாகியுள்ளது. இரண்டாவது இடத்தை மும்பையும், மூன்றாவது இடத்தை பெங்களூரூவும் பிடித்துள்ளது. இது குறித்த விரிவான அனைத்து விபரங்களையும் காணலாம் வாருங்கள்.
உபேர் நிறுவனம் வழங்கும் கேப் சேவையில் பயணிக்கும் பயணிகள் தங்கள் உடமைகளை தாங்கள் பயணித்த காரிலேயே தொலைத்துவிட்டால் அதை மீட்டுக் கொடுக்கும் புதிய ஆப்ஷன் ஒன்றை அந்நிறுவனம் தனது ஆப் மூலம் வழங்கிவருகிறது. அதன் மூலம் பயணம் செய்த பயணிகள் தங்கள் பயணம் முடிந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் பயணம் செய்யும்போது குறிப்பிட்ட பொருளை தாங்கள் பயணித்த காரில் தொலைத்து விட்டதாக புகார் அளிக்க வேண்டும்.

அப்படியாக புகார் அளித்தால் அந்த புகார் நேரடியாக காரின் ஓட்டுநருக்கு செல்லும் அவர் உடனடியாக அந்த பொருள் காருக்குள் இருக்கிறதா இல்லையா என்பதை பார்த்து, இருந்தால் அந்த பொருளை எடுத்து மீண்டும் பத்திரமாக உரிய நபரிடம் கொண்டு சேர்ப்பார். இப்படியான சேவையை உபேர் நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தரவுகளின் படி எந்த நகரில் அதிகமாக கேப்களில் பொருட்கள் தொலைக்கப்படுகிறது என்ற சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயில் டெல்லி தான் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமான நபர்கள் டெல்லி பகுதியில் தான் கேப் பயணத்தின் போது பொருட்களை தொலைக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மும்பை நகர் இருக்கிறது. டெல்லியை விட இங்கு தொலைத்தவர்களின் எண்ணிக்கை குறைவு தான் என்றாலும், ஒட்டுமொத்த எண்ணிக்கை பார்க்கும்போது அதிகமாக இருக்கிறது. மூன்றாவது இடத்தில் பெங்களூர் இருக்கிறது. இந்த மூன்றும் மெட்ரோ போலிடென் நகரமாக பார்க்கப்படுகிறது. இந்த நகரங்களில் கேப் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.
அடுத்ததாக எந்தெந்த பொருட்களை அதிகம் தொலைக்கிறார்கள் என பார்க்கும் போது செல்போன், பேக், வாலெட் மற்றும் துணிகள் ஆகியவற்றை பயணிகள் கேப் பயணத்தின் போது அதிகமாக தொலைக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. இதுபோக பாட்டில்கள் மற்றும் சாவிகளையும் கார் பயணத்தின் போது தொலைக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. சில நேரங்களில் கண்ணாடிகள் மற்றும் நகைகள் கூட தொலைக்கப்படுகின்றன.
இப்படியாக கேப் சேவையின் போது தொலைந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சில வித்தியாசமான பொருட்களும் இடம் பெற்றிருந்தன. அதன்படி இசை வாசிப்பு கருவியான கிட்டார் தொலைந்து போனதாக ஒரு வாடிக்கையாளர் புகார் அளித்திருந்தார் .அடுத்ததாக காயின் கலெக்ஷன் ஒன்றை தொலைத்ததாக மற்றொரு பயணி புகார் அளித்திருந்தார். மிக வித்தியாசமாக ஒருவர் கோவிலுக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வரும்போது பிரசாதத்தை மறந்து தொலைத்து விட்டதாக புகார் அளித்திருந்தார்.
ஒரு வாடிக்கையாளர் தனது ஹேர் டிரிம்மரை தொலைத்து விட்டதாக புகார் அளித்திருந்தார். சிலர் சில முக்கியமான ஆவணங்களையும் தொலைத்ததாக புகார் அளித்திருந்தார்கள். முக்கியமாக பாஸ்போர்ட், பத்திரங்கள், வங்கி மற்றும் தொழில் சம்பந்தமான முக்கியமான ஆவணங்களை கேப் பணத்தில் தொலைத்து விட்டதாக புகார் அளித்து இருந்தார்கள்.
இந்த சர்வேயை வைத்து பார்க்கும் போது பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மாலை 7 மணிக்கு மேல் பயணம் செய்யும் கேப்களில் தான் அதிகமான பொருட்கள் தொலைக்கப்படுவதாக தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக உபேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையில் தொலைக்கப்பட்ட பொருட்களை கணக்கிடும்போது ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் தான் அதிக எண்ணிக்கையில் தொலைக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று ஆப் மூலம் கேப் சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்ட நிலையில், இப்படியான பொருட்களை தொலைந்து விட்டால் அதை மீண்டும் பத்திரமாக உரிய நபர்களிடம் கொடுக்கும் சேவையை ஒரு சில நிறுவனங்களை வழங்கி வருகின்றன. அதில் உபேர் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின் இந்த சேவை நிச்சயம் மக்களுக்கு உதவியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








