கம்மி விலையில் கப்பல் மாதிரி சொகுசு கேராவேன் பயணம்! செம ஜாலி டிரிப் போனது இவங்களா?
இந்தியாவில் வாகன ரைடு சேவைகளை வழங்கும் உபேர் நிறுவனம் சொகுசு வாகன ரைடு சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்டர் சிட்டி பயணிங்களாக இந்த சேவையை பயன்படுத்த முடியும். இந்தியாவில் இ்நத சேவை மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது. தற்போது இது பல்வேறு நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சேவையை பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர் சிறப்பான சேவையை பயன்படுத்தி வருகிறார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உபேர் நிறுவனம் இந்தியாவில் கேப் சேவைகளை வழங்கி வருகிறது.இந்நிறுவனம் தற்போது சொகுசு சேவை ரைடு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வழக்கமான கேப்பை பயன்படுத்தாமல் சொகுசு கேராவேன் ஒன்றை பயன்படுத்தி இந்த சேவையை வழங்குகி வருகிறது. கஸ்டம் பில்டு வாகனங்களை இதில் சேவைக்காக பயன்படுத்துகிறது.

இதன்படி இந்த சேவையை இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸரான Shenaz Treasury என்பவர் இந்த சேவையை பயன்படுத்தி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். இவர் மும்பையிலிருந்து புனே செல்வதற்காக இந்த சேவையை பயன்படுத்தியுள்ளார்.
இந்த சேவைக்காக அவருக்கு கஸ்டம் பில்டு செய்யப்பட்ட ஃபோர்ஸ் நிறுவனத்தின் அர்பேனியா என்ற வாகனம் வழ்ங்கப்பட்டுள்ளது. அவர் வீட்டிற்கே வந்த வாகனம் அவரை பிக்கப் செய்துள்ளது. இந்த ரைடில் அவர் தனது பெற்றோர்களையும் அழைத்து சென்றார். இவர் இந்த காருக்கும் ஏறிதும் கேபினை காட்டினார். அப்பொழுது அவரது தாய் இந்த கார் ஒரு முதல் கிளாஸ் விமானம் போல இருப்பதாக ஆச்சரியப்பட்டார். பின்னர் அவரது பெற்றோருக்கு டாடா சொல்லிவட்டு அவரது பயத்தை துடவங்கினர்.

மேலும் இந்த வேன் உள்ளே பிரிட்ஜ், பிரைவேட் டாய்லெட், ஒரு சிறிய கிச்சன் ஆகிய வசதிகள் உள்ளது. கிச்சனில் எலெக்ட்ரிக் இன்டெக்ஷன் மற்றும் மைக்ரோ வேவ் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் இந்த காரின் உள்ளே ஆம்பியன்ஸ் லைட்டும் உள்ளது. இதை கண்ட்ரோல் செய்ய டச் ஸ்கிரீன் பேனலில் கண்ட்ரோல் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த லைட்டின் வெளிச்ச அளவுகளை குறைக்கும் வசதிகளும் உள்ளன.

இந்த காரை வாடகைக்கு எடுக்கம்போது ஒரு டிரைவரும் ஒரு ஹெல்பரும் உடன் இருப்பார்கள். இந்த பயணத்தில் அவருக்கு நல்ல அனுபவம் கிடைத்ததாகவும் சேவை சிறப்பாக இருந்ததாகவும் அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். கப்பல் போன்ற காரில் சொகுசு வசதிகளுடன் பயணிக்க கோடி கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டிய தேவையில்லை. மாறாக குறைந்த பணத்தில் இதில் பயணம் செய்ய முடியும்.
உபேர் நிறுவனம் இதற்கு இன்டர்சிட்டி சேவை என பெயர் வைத்துள்ளது. இது முதலில் டில்லியில் தான் துவங்கப்பட்டது. தற்போது பெங்களூரு, மும்பை,புனே உள்ளிட்ட நகரங்ளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. டில்லியில் இந்த சேவை துவங்கப்பட்டது முதல் இன்று வரை 100 சதவீதம் புக்கிங் நடந்துள்ளது. ஒரு நாள் கூட இந்த கார் ஃப்ரீயாக இல்லாமல் இருகு்கிறது.

இந்த பயணத்தின் போது லைவ் ரைடு டிராக்கிங், 24X7 சப்போர்ட், அட்வாஸ்டு புக்கிங், பயணங்களுக்கு நடுவே ஸ்டாப்களை ஆட் செய்வது, ஆகிய விஷயங்களை செய்ய முடியும். இ்நத சேவை தற்போது மும்பை -புனே, டில்லி ஆக்ரா, பெங்களூரு-மைசூரு, லக்னோ- கான்பூர், ஆமதாபாத் -வதோதரா ஆகிய ரூட்களில் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்த மும்பை முதல் புனே வரை செல்ல வெறும் ரூ7500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த சேவையை இந்தியா முழுவதும் உள்ள 3000 ரூட்களுக்கு நீட்டிக்கப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வாரயிறுதி நாட்களில் புக்கிங் அதிகமாக இருப்பதால் இதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவை ரவுண்ட் டிரிப் மற்றும் ஒன் வே டிரிப் ஆகிய இரண்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரிய பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள், கோடீஸ்வரர் தான் கேராவேனில் போகமுடியும் என பலர் கருதுகிறார்கள். ஆனால் குறைந்த விலையில் சொகுசான சேவையை பெற முடியும் சூழ்நிலையை தற்போது உபேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது நிச்சயம் வரவேற்க்க தக்கது தான். இது மற்ற நகரங்களுக்கும் விரிவடைந்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெறும்.


Click it and Unblock the Notifications









