டிரைவர்களுக்கு புதுசா கார் வாங்கப் பணம் கொடுத்து உதவும் உபேர்... இப்படி ஒரு உதவிய யாருமே எதிர்பார்க்கல...

உபேர் நிறுவனம் மூவ் என்ற நிறுவனம் மூலம் தங்கள் டிரைவர்கள் புதிய காரை வாங்குவதற்காகக் கடன் உதவியை வழங்கத் திட்டமிட்டுள்ளது.இதன்படி டிரைவர்கள் எலெக்ட்ரிக் அல்லது சிஎன்ஜி வாகனங்களை புதிதாக வாங்கி உபேரில் இணைத்து பயன்படுத்தலாம். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

டிரைவர்களுக்கு புதுசா கார் வாங்கப் பணம் கொடுத்து உதவும் உபேர் . . . இப்படி ஒரு உதவிய யாருமே எதிர்பார்க்கல . . .

உலகின் பல்வேறு நாடுகளில் ஆப் மூலம் டாக்ஸி சேவையை வழங்கி வரும் நிறுவனம் உபேர். ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தங்கள் சேவையை வழங்கி வருகிறது. அதன்படி இந்தியாவிலும் பல முக்கிய நகரங்களில் தன் சேவையை வழங்கி வருகிறது. இதில் கார் ஓட்டுநர்கள் தங்கள் காரை இந்நிறுவனத்துடன் இணைத்துக்கொண்டு அதன் மூலம் பெறப்படும் ரைடுகளை எடுத்து வருகின்றனர்.

டிரைவர்களுக்கு புதுசா கார் வாங்கப் பணம் கொடுத்து உதவும் உபேர் . . . இப்படி ஒரு உதவிய யாருமே எதிர்பார்க்கல . . .

மக்களும் ஏராளமாக இவ்வாறான ஆப் மூலம் நடத்தப்படும் டாக்ஸி சேவைகளை அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிட்டன. இந்நிலையில் உபேர் நிறுவனம் சர்வதேச அளவில் தங்களிடம் கார்களை இணைத்து இயக்கிவரும் டிரைவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் "மூவ்" என்ற மொபிலிட்டி ஃபின் டெக் நிறுவனத்தை நடத்தி வருகிறது.

டிரைவர்களுக்கு புதுசா கார் வாங்கப் பணம் கொடுத்து உதவும் உபேர் . . . இப்படி ஒரு உதவிய யாருமே எதிர்பார்க்கல . . .

அதில் தங்களிடம் உள்ள கார் டிரைவர்களில் ரெகுலாக பணியாற்றுபவர்கள். தொடர்ந்து நல்ல வருமானத்தைப் பெற்றுவரும் டிரைவர்களுக்கு அடுத்ததாகப் புதிதாக சிஎன்ஜி அல்லது எலெக்டரிக் வாகனங்களை வாங்க இந்நிறுவனம் கடன்களை வழங்குகிறது. இந்த கடனிற்கான தவணையை அந்த காரை ஓட்டி வாரா வாரம் நடக்கும் செட்டில் மெண்டில் குறிப்பிடத்தொகை இந்நிறுவனம் பிடித்துக்கொள்ளும் வசதியை வழங்குகிறது.

டிரைவர்களுக்கு புதுசா கார் வாங்கப் பணம் கொடுத்து உதவும் உபேர் . . . இப்படி ஒரு உதவிய யாருமே எதிர்பார்க்கல . . .

இந்த "மூவ்" ஏற்கனவே வெளிநாடுகளில் பெரும் வெற்றிபெற்றுப் பல டிரைவர்கள் இதனால் பலனடைந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்போது உபேரில் வாகனம் ஓட்டி வாரம் வாரம் குறிப்பிட்ட அளவு பணம் பெறுபவர்கள் இந்த கடனை பெற தகுதியுடையவராக மாறப்போகிறார்கள்.

டிரைவர்களுக்கு புதுசா கார் வாங்கப் பணம் கொடுத்து உதவும் உபேர் . . . இப்படி ஒரு உதவிய யாருமே எதிர்பார்க்கல . . .

முதற்கட்டமாக இந்த "மூவ்" நிறுவனம் மும்பை, பெங்களூரு, ஐதராபாத், ஆகிய நகரங்களில் பதிவு செய்தி இயங்கி வரும் டிரைவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்நிறுவனம் துவங்கப்பட்ட முதல் ஆண்டில் 5000 ஆயிரம் சிஎன்ஜி அல்லது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கடனை வழங்கவும் அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 30 ஆயிரம் கார்களுக்கான லோனை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

டிரைவர்களுக்கு புதுசா கார் வாங்கப் பணம் கொடுத்து உதவும் உபேர் . . . இப்படி ஒரு உதவிய யாருமே எதிர்பார்க்கல . . .

இதன் மூலம் கார் டிரைவர்களாக இருப்பவர்கள் இனி கார் ஓனர்களாக மாறவும், வங்கி மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களால் இவர்களிடம் வருமானத்தை உறுதி செய்யமுடியாமல் கடன் வழங்கத் தயங்கி வருவதால் இந்த முயற்சியை உபேர் நிறுவனமே செய்வதாக அறிவித்துள்ளது. இந்த மூவ் நிறுவனத்திற்காக ஏசியா மற்றும் ஐரோப்பிற்காக 105 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாகக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது.

டிரைவர்களுக்கு புதுசா கார் வாங்கப் பணம் கொடுத்து உதவும் உபேர் . . . இப்படி ஒரு உதவிய யாருமே எதிர்பார்க்கல . . .

தற்போது உபேர் நிறுவனத்திடம் இந்தியாவில் 6 லட்சம் டிரைவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த மூவ் இந்தியாவிற்குள் அறிமுகமானதும் இதில் சில ஆயிரம் டிரைவர்கள் மட்டுமே இந்த கடனை பெறத் தகுதியுடையவராக அறிவிக்கப்படுவார்கள். இந்த திட்டம் சுற்றுச்சூழல் மாசுவை குறைக்கும் நோக்கில் எலெக்டரிக், ஹைபிரிட், சிஎன்ஜி வாகனங்களுக்கு மட்டுமே இந்த லோன் வழங்கப்படுகிறது.

டிரைவர்களுக்கு புதுசா கார் வாங்கப் பணம் கொடுத்து உதவும் உபேர் . . . இப்படி ஒரு உதவிய யாருமே எதிர்பார்க்கல . . .

ெமூவ் நிறுவனத்தின் நோக்கமே உலகம் முழுவதும் உபேர் நிறுவனத்துடன் இயங்கி வரும் டிரைவர்கள் 60 சதவீதம் மூவ் மூலம் பலனடைந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், அப்படி நடந்தால் குறைந்தது 60 சதவீதமாவது சுற்றுச்சூழல் மாசுவை குறைக்கும் விதமாகமாறும் என்பதால் இதைச் செய்து வருகிறது. உபேர் நிறுவனம் இந்த வாய்ப்பை வழங்குவதால் பலர் இதன் காரணமாக உபேரில் இணைக்கின்றனர். இதனால் போட்டி நிறுவனங்கள் தங்கள் டிரைவர்களை தக்க வைக்க என்ன செய்வது என தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, July 29, 2022, 11:06 [IST]
English summary
Uber mobility fintech moove plans to help driver partner to buy a new car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+