பைக் டாக்ஸியில் திருட்டுத்தனமா போன கிரிக்கெட் வீரரால் உருவான பிரச்சனை! ஹைகோர்ட் வரை வழக்கு போய்கிட்டு இருக்கு!

ஐபிஎல் (IPL), உலகின் மிக பெரிய கிரிக்கெட் (Cricket) தொடர்களுள் ஒன்று. கிரிக்கெட் என்பதை தாண்டி, ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளும் வணிகமாக ஐபிஎல் விளங்குகிறது. ஐபிஎல் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு கார்ப்பிரேட் நிறுவனங்களும் விரும்புகின்றன.

ஆனால், அதிக பணம் புரளும் இடத்தில் தனியாக தெரிய வேண்டுமென்றால் அந்த அளவிற்கு மிக பெரும் நிறுவனமாக அவை இருக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தான், உபெர் (Uber) ஆகும். இந்தியாவில் போக்குவரத்து துறையில் மிகுந்த ஆதிக்கம் செலுத்திவரும் ஓர் அமெரிக்க நிறுவனம். குறிப்பாக, கார் டாக்ஸியில் ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கிலான மக்கள் இந்தியாவில் உபெரை பயன்படுத்துகின்றனர்.

uber moto bike taxi advertisement

தற்போது பைக் டாக்ஸி வணிகத்திலும் உபெர் ஈடுப்பட்டு வருகிறது. பெங்களூருவில் பைக் டாக்ஸிகளுக்கு அதிக தேவை உள்ளது. இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்களுள் உபெரும் ஒன்றாகும். ஹைதராபாத்திலும் உபெரின் நெட்வொர்க் பெரியதாக வளர்ச்சி கண்டுவருவதால், ஐபிஎல் தொடரில் பெங்களூரு- ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெறவுள்ள போட்டியை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)- சன்ரைசஸ் ஹைதரபாத் (SRH) இடையேயான போட்டி நடைபெற இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. மே 13ஆம் தேதி இந்த இரு அணிகளும் பெங்களுருவின் சின்னசாமி மைதானத்தில் சந்திக்க உள்ளன. ஆனால் இப்போதே இரு அணிகளின் ரசிகர்கள் மத்தியில் போட்டி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வேலையில் உபெர் ஈடுப்பட்டுள்ளது. இதன் மூலமாக, தனது பிஸ்னஸையும் பிரபலப்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் உபெரின் திட்டம் ஆகும்.

uber moto bike taxi advertisement

உபெர் சார்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பர வீடியோவில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் (Travis Head) கேமரா மேன் ஒருவருடன் ரகசியமாக சின்னசாமி மைதானத்திற்குள் நுழைந்து, அங்கு பெங்களூரு அணியின் பெயர் பலகையில் கிறுக்கிவிட்டு வருவதுபோல் காட்டப்பட்டுள்ளது. இது மொத்தமும் நாடகம் தான். உபெர் நிறுவனம் தனது 'உபெர் மோட்டோ' (Uber Moto) சேவையை விளம்பரப்படுத்திக் கொள்ள டிராவிஸ் ஹெட் உடன் இவ்வாறான ஒரு நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது.

உபெர் மோட்டோ எவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்றால், திருட்டுத்தனமாக மைதானத்திற்குள் நுழைந்து, பின் அங்கிருந்த தப்பிக்க உபெர் மோட்டோவின் பைக் டாக்ஸியை கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட் பயன்படுத்துவது போல காட்டப்பட்டுள்ளது. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், மைதானத்திற்குள் நுழைவதற்கு முன்னரே ஹெட் தனக்கான பைக் டாக்ஸியை புக் செய்துவிடுவது போல காட்டியுள்ளனர்.

பைக் டாக்ஸி வருவதற்குள், அந்த சில நிமிடங்களில் பெங்களூரு அணியின் பெயரை கிறுக்கிவிட்டு, காவலர்கள் துரத்த மைதானத்திற்கு வெளியே வந்து சரியாக உபெர் மோட்டோ பைக் டாக்ஸியில் ஹெட் தப்பித்து செல்வது போல இந்த விளம்பர வீடியோவில் காட்டியுள்ளனர். இது முழுக்க முழுக்க உபெர் மோட்டோ பைக் டாக்ஸியை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே. ஆனால், அந்த ஒரு செயலை தவிர்த்து. டிராவிஸ் ஹெட் மைதானத்திற்குள் சென்று பெங்களூரு அணியின் பெயரை கிறுக்கியது போல் காட்டியது பிரச்சனையாக வெடித்துள்ளது.

உபெர் தங்களது ஐபிஎல் அணியின் பெயரை களங்கப்படுத்துவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த ஒரு விஷயத்தை தவிர்த்து பார்த்தால், உபெரின் இந்த விளம்பர வீடியோ முழுக்க முழுக்க பைக் டாக்ஸியை பிரபலப்படுத்துவது ஆகும். உபெர் மோட்டோ பைக் டாக்ஸியில் ரைடர் மற்றும் பேசஞ்சர் என இருவருக்கும் ஒரே மாதிரியாக சிவப்பு நிறத்தில் ஹெல்மெட் வழங்கப்படுகிறது.

பைக் பயணத்துக்கு ஹெல்மெட் அவசியமான ஒன்றாகும். நகரத்திற்குள் மெதுவான வேகத்தில் செல்ல ஹெல்மெட் அணிந்திருந்தாலே போதுமானது. ஆனால், நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்ல போகிறீர்கள் என்றால், கையுறை, ஷூ, கை & கால் முட்டி பாதுகாப்பான், ரைடிங் ஜாக்கெட் (Riding Jacket) உள்ளிட்டவற்றை பாதுகாப்புக்காக அணிய வேண்டும். குறைந்தது பைக் ரைடர் ஆவது நெடுஞ்சாலை சவாரிகளுக்கு இவற்றை அணிய வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கூறப்பட்ட பாதுகாப்பு கவசங்களை எத்தனை பைக் டாக்ஸி கேப்டன்கள் முறையாக அணிகிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறி. இவ்வாறு சில விஷயங்கள் அன்றாட செயல்முறைக்கு ஒத்துவராத காரணத்தினால்தான், பைக் டாக்ஸிக்கு இன்னமும் நிறைய மாநில அரசாங்கங்கள் தயக்கம் காட்டுகின்றன. நம் சென்னையிலும் உபெர் மோட்டோவின் பைக் டாக்ஸி சேவை உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 18, 2025, 11:52 [IST]
English summary
Uber moto bike taxi advertisement campaign video becoming controversial
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+