10 நிமிட ஆட்டோ பயணத்திற்கு ரூ1 கோடி பில் போட்ட உபேர்! பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி!

சமீபத்தில் நொய்டாவில் உபேர் ஆப் மூலம் பயணம் செய்தவருக்கு ரூபாய் 7 கோடி பில் வந்த நிலையில், இதே போன்ற மற்றொரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. 10 நிமிடம் உபேர் ஆட்டோவில் பயணித்தவருக்கு ரூபாய் ஒரு கோடி பில் வந்துள்ளது. இது பயணியையும் ஆட்டோ டிரைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நொய்டாவில் உபேர் ஆப் மூலம் பயணம் செய்தவருக்கு ரூபாய் 7 கோடி பில் வந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த செய்திக்கான தாக்கமே இன்னும் ஓயாத நிலையில் தற்போது மற்றொரு புதிய செய்தி ஒன்று வந்துள்ளது. அதன்படி பெங்களூருவிலும் இதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.

uber one crore bill

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சிராஜ் நிலேஷ் இவர் தனது வேலை சம்பந்தமாக பெங்களூருக்கு வந்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள கேஆர் புறத்திலிருந்து கோரமங்கலா வரை ஆட்டோவில் பயணிப்பதற்காக ஆட்டோவை உபேர் ஆப் மூலம் புக் செய்துள்ளார். இவர் புக் செய்யும் போது இந்த பயணத்திற்கான கட்டணமாக வெறும் ரூபாய் 207 மட்டுமே கட்டணமாக செலுத்தினால் போதும் என காட்டியுள்ளது.

நியாயமான கட்டணமாக இருந்ததால் இவர் அந்த ரைடை புக் செய்தார். அதன்படி ஆட்டோ இவருக்கு வந்தது. பயணம் முடிந்த பிறகு ரைடே ஆட்டோ டிரைவர் குளோஸ் செய்தவுடன் அவருக்கு ரூ 1,03,11,055 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும், அதற்கான யூபிஐ வழிமுறையையும் ஆப் காட்டியுள்ளது. இதை கண்டு சிராஜூம் ஆட்டோ டிரைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

uber one crore bill

இதையடுத்து அவரது செல்போனில் ரூபாய் ஒரு கோடி பணம் செலுத்த வேண்டும் என காட்டியதை வீடியோவாக எடுத்து நடந்த சம்பவத்தை முழுமையாக கூறி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படியாக காட்டி இருக்கலாம், ஆனால் உபேர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் இதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என புகார் தெரிவித்து இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதை பகிர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா என பேசி வருகிறார்கள். இதே போன்ற சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நொய்டாவில் உள்ள வாடிக்கையாளர் ஒருவருக்கு நடந்தது.

uber one crore bill

நொய்டா சம்பவத்தில் ரூபாய் 7.66 கோடியை பணமாக செலுத்த வேண்டும் என பில் தொகை வந்திருந்தது. ஆனால் அவருக்கு உண்மையிலேயே வெறும் ரூபாய் 62 தான் பில் தொகை வந்திருக்க வேண்டும். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியான பின்பு உபேர் நிறுவனம் அந்த வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த சம்பவம் நடந்து ஒரு சில நாட்களிலேயே மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. உபேர் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உபேர் நிறுவனம் உடனடியாக இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இன்று உபேர் பயன்படுத்தும் பலர் இந்த பிரச்சினைகளை பார்த்த பின்பு அதை பயன்படுத்தலாமா வேண்டாமா என யோசனை செய்து வருகிறார்கள்.

இன்று மக்கள் மத்தியில் அதிகமாக இது போன்ற அக்ரிகேட்டர் ஆப் சேவை பயன்பாடு இருக்கிறது. முக்கியமாக பெருநகரங்களில் பலர் இதை பயன்படுத்தி வரும் நிலையில், இந்த சேவைகளில் இது போன்ற தொழில்நுட்ப தவறுகள் ஏற்படுவது வாடிக்கையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும். இதை உடனடியாக அந்த சேவை வழங்கும் நிறுவனங்கள் சரி செய்ய வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கேப் அக்ரிகேட்டர் சேவை என்பது மிகப் பிரபலமாகி வருகிறது. இந்த நேரத்தில் இது போன்ற தவறுகள் நடப்பது அந்த சேவை மீதான அவநம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. உடனடியாக இதுபோன்ற தவறுகள் நடப்பதை அந்த சேவை வழங்கும் நிர்வாகம் தடுக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் இந்த சேவையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது

More from DriveSpark

Article Published On: Saturday, April 6, 2024, 12:08 [IST]
English summary
Uber one crore bill for hyderabad vlogger bengaluru auto ride
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X