ஊபர், ராபிடோ டாக்ஸி நிறுவனங்கள் இணைப்பு பேச்சுவார்த்தை தோல்வி!
இந்தியாவின் டாக்ஸி போக்குவரத்தில் முக்கிய நிறுவனங்களாக இருக்கும் ஊபர் மற்றும் ராபிடோ நிறுவனங்களை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இரதரப்புக்கும் இடையிலான சில முரண்பாடுகள் காரணமாக எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது.
இதுகுறித்து எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், உபர் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தையும், ராபிடோ நிறுவனத்தின் ஒருங்கிணைப்பதற்கான பேச்சுவார்த்தை கடந்த மே மாதம் நடந்தது. இதில், ஊபர் நிறுவனம் முன்வைத்த திட்டத்தின்படி, இருநிறுவனங்களின் செயல்பாடுகளும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, ராபிடோ குழு நிர்வகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராபிடோ வேறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளது.

மேலும், ஊபர் இந்தியா-ராபிடோ இணைக்கப்பட்டால், அதில் ஊபர் நிறுவனத்திற்கு குறைந்த பங்குககளை வழங்கவும் ராபிடோ விரும்பியதாக சொல்லப்படுகிறது. ஒருங்கிணைந்த நிறுவனத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் இரு நிறுவனங்கள் இடையே பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால், இந்த ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்களிலும் இணைந்து பணியாற்றும் பெரும்பான்மையான வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் ஒன்றாகவே இருப்பதால், இரு நிறுவனங்களும் சந்தைப் போட்டியை சமாளிக்கவும், ஓட்டுனர்களை தக்க வைப்பதற்காக அதிகப்படியான தொகையை செலவு செய்ய வேணடியிருப்பதை கருத்தில்கொண்டு, இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தற்போதைய சந்தை நிலவரப்படி, இந்தியாவின் பைக் டாக்ஸி மார்க்கெட்டில் ராபிடோ 50 சதவீதம் அளவுக்கு ராபிடோ நிறுவனம் கைவசம் உள்ளது. ஊபர் நிறுவனம் 35 முதல் 40 சதவீதத்தை வைத்துள்ளது. நான்கு சக்கர வாகன மார்க்கெட்டில் உபர் 40 முதல் 45 சதவீதம் அளவுக்கான பங்களிப்பை பெற்றிருக்கிறது. இதில், ராபிடோ வேகமாக தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ம் ஆண்டு உபர் நிறுவனம் தனது உணவு சங்கிலி வர்த்தகமான ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தை ஸொமட்டோ நிறுவனத்திடம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவில் டாக்ஸி வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்ய ஊபர் விரும்பவில்லை. இந்தியாவை தனது வர்த்தகத்தில் முக்கிய சந்தையாக கருதுவதால், ராபிடோவுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
Source: Economic Times


Click it and Unblock the Notifications
