ஒரே ஆண்டில் 4.5 பில்லியன் கி.மீ பயணம்! உபேரை அதிகம் பயணிக்கும் நகரம் எது தெரியுமா?

இந்தியாவில் ஒரே ஆண்டில் 4.5 பில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை உபேரில் பயணித்த மக்கள் எந்த ஊர் நம்பர் 1 தெரியுமா? இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சமீப காலமாக கேப் மூலம் கார்களை புக்கிங் செய்து பயணிக்கும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. குறிப்பாகப் பெரு நகரங்களில் மக்கள் கேப்களை ஆப் மூலம் அதிகமாக புக்கிங் செய்து வருகின்றனர். இதனால் மக்கள் எளிமையாக ஒரு இடத்திலிருந்து அவர்கள் வேண்டிய இடத்திற்குச் செல்ல முடிகிறது. அதுவும் சௌகரியமாகச் செல்ல முடிகிறது. இதனால் மக்கள் இப்படியான ஆன்லைன் சேவைகளை விரும்புகின்றனர்.

ஒரே ஆண்டில் 4.5 பில்லியன் கி.மீ பயணம்! உபேரை அதிகம் பயணிக்கும் நகரம் எது தெரியுமா?

இந்த ஆன்லைன் சேவையில் முன்னோடியாக இருப்பது உபேர் நிறுவனம் தான் தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் 123 சிட்டி மற்றும் டவுண்களில் தங்கள் சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் இந்த 2022ம் ஆண்டிற்கான தனது ஆய்வறிக்கையை வழங்கியுள்ளது. இந்தியா 2022ம் ஆண்டு எப்படி உபேரை பயன்படுத்தியது என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்களைப் பற்றி விரிவாகக் காணலாம்

2022ம் ஆண்டு மொத்தம் உபேர் நிறுவனம் மூலம் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 4.5 பில்லியன் கி.மீ பயணத்தை மக்கள் மேற்கொண்டுள்ளது. இதில் அதிகமாக மக்கள் உபேர் நிறுவனத்தின் குறைந்த விலை கேப் வசதியான உபேர் கோ சேவையைத் தான் அதிகம் பயன்படுத்தியுள்ளனர். அடுத்ததாக உபேர் ஆட்டோ சேவையின் பயன்பாடு உபேர் கோவின் பயன்பாட்டை விடக் குறைவாக இருக்கிறது.

இதற்கு முக்கியமான காரணம் கர்நாடக மாநில அரசு அக்ரீகேட்டர் மூலம் நடக்கும் கேப் சேவைக்கான நோட்டீஸ் விடுத்தது. அதன் பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் அக்ரீகேட்டர்கள் அரசு நிர்ணயம் செய்த விலையைவிட 5 சதவீதம் மட்டுமே அதிகமாக வைத்துக்கொள்ளலாம். என உத்தரவிட்ட பின்பு தற்போது அக்ரீகேட்டர் மூலம் சேவை நடந்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் ஆட்டோ சேவையைக் குறைவாகப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தியாவிலேயே டில்லி-என்சிஆர் பகுதியில் தான் அதிகமாக உபேர் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாகப் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது. உபேர் நிறுவனங்களில் பெரும்பாலான கேப்கள் மாலை 5 மணி முதல் 6 மணிக்கு இடையேயான நேரத்தில் மட்டுமே அதிகம் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

உபேர் கேப் மூலம் புக்கிங் செய்து மொத்தம் 11 பில்லியன் நிமிடங்கள் அதாவது 7.6 மில்லியன் நாட்கள் மனித நேரம் உபேர் கேப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மிகக் குறைவாகத் தூரத்தை அதிக நேரத்தில் கடந்த மக்களாக ஐதராபாத், சென்னை, பெங்களூரு, கவுகாத்தி, மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் இருக்கிறது. இங்குப் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

உபேர் நிறுவனம் 2022ம் நிதியாண்டு வருவாயில் 7.1 சதவீதம் ஆண்டு வருவாயை அதிகரித்துள்ளது. அதாவது இந்நிறுவனம் ரூ396.95 கோடியை வருமானமாகப் பெற்றுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ216.42 கோடியை வருமானமாகப் பெற்றிருந்தது. அந்த நிதியாண்டில் கொரோனா பாதிப்பு லாக்டவுண் போன்ற விஷயங்கள் அமலிலிருந்ததால் குறைவாக வருமானம் ஈட்டியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொத்த வருமானத்தின் உபேர் நிறுவனத்திற்கான லாபம் என்பது 30 சதவீதம் தான் மொத்த வருமானமான ரூ 396.95 கோடி பணத்தில் ரூ 119.08 கோடி லாபமாக அந்நிறுவனம் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் இந்த அறிக்கை குறித்த உங்கள் கருத்துக்களைக் காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 27, 2022, 17:07 [IST]
English summary
Uber released how India ubered in 2022 report know details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+