Just In
- 22 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 4 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வைரஸ் பரவல் காலத்தில் உபேர் என்னென்ன உதவிகளை செய்தது தெரியுமா?.. வெளியாகியது ஆச்சரியமளிக்கும் தகவல்!
கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் உபேர் நிறுவனம் செய்த உதவிகள் பற்றிய தகவலை வெளியாகியுள்ளது.

கோவிட் 19 வைரஸ் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த வேலையில் அந்தந்த நாட்டின் மற்றும் மாநில அரசுகளுக்கு தனி நபர் முதல் தனியார் நிறுவனங்கள் வரை தங்களின் உதவிகளை வாரி வழங்கினர். இதுமாதிரியான உதவிகளினாலயே பெரும்பாலான நாடுகளால் இக்கட்டான சூழ்நிலையிலும்கூட மிக ஆரோக்யமாக செயல்பட முடிந்தது.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் சில நிறுவனங்களின் நேரடி உதவியினாலயே சில ஏழைகளின் வீட்டில் ஒரு வேலை பட்டினியாவது தீர்க்கப்பட்டது. அந்தவகையில், நாட்டிற்கு கணிசமான உதவியை வழங்கிய நிறுவனங்களில் உபேர் கால் டாக்சி நிறுவனமும் ஒன்றாகும்.

இந்த நிறுவனம், கோவிட்-19 வைரஸ் பரவல் காலத்தில் மேற்கொண்ட விலை மதிப்பற்ற உதவிகள் பற்றிய தகவல்களே தற்போது வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் காலத்தில் சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) அளவிலான இலவச ரைடுகளை இந்நிறுவனம் வழங்கியிருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிறுவனம், கோவிட்-19 வைரஸ் பரவல் காலத்தில் போக்குவரத்து தடையால் சிக்கலைச் சந்திக்கும் அரசு பொது ஊழியர்களுக்கு இலவச சேவையை வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது. இதன்படி, மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்கியது.

இத்துடன், கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் அத்தியாவசிய தேவையின்போது இலவச சேவையை வழங்க இருப்பதாக கூறியிருந்தது. இதனடிப்படையிலேயே உபேர் நிறுவனம் சுமார் ஒரு கோடி இலவச ரைடுகளை வழங்கியிருக்கின்றது. இதில், மாநிலம் மற்றும் உள்ளூர் அரசு பணியாளர்களுக்கு மட்டுமே 1,80,000 ரைடுகளை அது வழங்கியிருப்பதாக கூறியிருக்கின்றது.

இதேபோன்று, என்எச்ஏ (National Health Authority of India) உடன் இணைந்து சுகாதார ஊழியர்களுக்கு சூமார் ஒரு லட்சம் ரைடுகளை இலவசமாக அது வழங்கியிருக்கின்றது. இந்த சேவைக்காக எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்கவில்லை என தற்போது வெளியாகியிருக்கும் தகவலில் உபேர் தெரிவித்திருக்கின்றது.

இதுதவிர, தலா 2 லட்சம் முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினி மருந்துகளும் இலவசமாக தனது டிரைவர் பார்ட்னர்களுக்கு வழங்கியதாக உபேர் கூறுகின்றது. மேலும், ரைடர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பு கண்ணாடி ஷீல்டுகளை வாகனங்களைப் பொருத்தும் பணியிலும் அது ஈடுபட்டது.

இவையனைத்தையும் கட்டணமில்லா திட்டத்தின் அடிப்படையிலேயே உபேர் வழங்கியது. இதுபோன்ற ஒட்டுமொத்த உலக நாடுகளுக்குமே கொரோனா காலத்தில் உதவும் விதமாக இந்நிறுவனம் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிதி ஒதுக்கீட்டின்கீழே எண்ணற்ற சிறப்பு சேவைகளை இலவசமாக அது உலகின் பல்வேறு நாடுகளில் செய்தது. குறிப்பாக, ஆம்புலன்ஸ் சேவையில்லா பகுதிகளில் குறைந்த கட்டணம் அல்லது இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கியது. இதுபோன்ற எண்ணற்ற அத்தியாவசிய சேவைகளை உபேர் கொரோனா காலத்தில் வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.