கால் டேக்ஸி சேவையை அடுத்து போட் சேவையை தொடங்கும் ஊபர்!

ஊபர் நிறுவனம் இந்தியாவில் கால் டேக்ஸி சேவையை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய சேவையை இந்தியாவில் தொடங்க ஊபர் நிறுவனம் முடுவு செய்துள்ளது.

தரையை அடுத்து தண்ணீரில் குதித்த ஊபர் நிறுவனம்!

கடந்த காலங்களில் வெளியே செல்ல வேண்டும் என்றால் ஆட்டோவை வாடைக்கு எடுத்துச் செல்வோம். அதன்பின்னர், வாடகை கார் அறிமுகமானது. இதை வாடகைக்கு புக் செய்ய போன் அல்லது டிராவல்ஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்று, பயண நாட்களுக்கு சில தினங்களுக்கு முன்னதாகவே புக் செய்யும் நிலை இருந்தது.

தரையை அடுத்து தண்ணீரில் குதித்த ஊபர் நிறுவனம்!

இவ்வாறு, ஒரு காரை புக் செய்வதில் நீண்ட இடையூறுகள் இருந்தன. இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கும் விதமாக பன்னாட்டு நிறுவனமான ஓலா, ஊபர் ஆகிய வாடகை கார் நிறுவனங்கள் இந்தியாவுக்குள் கால் பதித்தன.

தரையை அடுத்து தண்ணீரில் குதித்த ஊபர் நிறுவனம்!

அதன்பின்னர் நடந்தவையோ மிகப்பெரிய விஞ்ஞான சரித்திரம். சாதாரணமாக சாலைக்கு சென்று ஆட்டோவை சவாரிக்கு அழைக்கும் காலம் மாறி, ஆன்லைன் மூலம் காரை புக் செய்யும் சூழல் ஏற்பட்டது. மேலும், இதன் அடுத்தகட்டமாக ஸ்மார்ட் போன் புரட்சியில் மென்பொருள் என்னும் எளிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

தரையை அடுத்து தண்ணீரில் குதித்த ஊபர் நிறுவனம்!

இதன்மூலம் இருக்கும் இடத்திலிருந்தே ஒரே ஒரு கிளிக்கினை செய்து, தேவைப்படும் இடத்துக்கு காரை புக் செய்யும் சுலபமான முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

தரையை அடுத்து தண்ணீரில் குதித்த ஊபர் நிறுவனம்!

இதனால், வாடிக்கையாளர்களின் நேரம் விரையாமவது தடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஆட்டோவில் செல்வதுக்கு, ஆட்டோவை விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர்களின் வாடகை இருந்தது. அதனை தவிடு பொடியாக்குவது போல் மிகக் குறைந்த விலையில், கார்களை வாடகைக்கு அறிமுகம் செய்தது.

தரையை அடுத்து தண்ணீரில் குதித்த ஊபர் நிறுவனம்!

இதன்காரணமாக, பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் சவாரி கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளானார்கள். பின்னர் சுழலுக்கு ஏற்ப தங்களின் வாடகைத் தொகையையும் மாற்றியமைத்துக் கொண்டனர்.

தரையை அடுத்து தண்ணீரில் குதித்த ஊபர் நிறுவனம்!

ஆனால், ஆட்டோவின் வாடகைத் தொகையில் கார் கிடைக்கின்றது என்றால், நம்ம மக்கள் சும்மாவா விடுவாங்களா? மலிவு விலையில கார் அதுவும் சொகுசா ஏசியில, அலுங்காமா குலுங்காமா பயணம் செய்ய காரையே பயன்படுத்தினார்கள். மேலும், இதற்காக ஊபர், ஓலா ஆகிய நிறுவனங்களையே பயன்படுத்த ஆரம்பிச்சாங்க.

தரையை அடுத்து தண்ணீரில் குதித்த ஊபர் நிறுவனம்!

இந்த நிலையில்தான் ஊபர், ஓலா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் கொடிக்கட்ட பறக்க ஆரம்பிச்சாங்க. இதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த நிறுவனங்களுடன் டையப் செய்து தற்போது ஆட்டோக்களை இயக்கி வர்றாங்க.

தரையை அடுத்து தண்ணீரில் குதித்த ஊபர் நிறுவனம்!

இந்நிலையில், ஊபர் நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்தும் விதமாக படகு சவாரியிலும் ஈடுபட உள்ளது. அதன்படி, நீரால் சூழ்ந்துள்ள நகரங்களை தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளது. அவ்வாறு, இந்தியாவில் முதல்முறையாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் ஊபர்போட் சேவையை தொடங்க உள்ளது. இந்த சேவையானது வருகின்ற பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

தரையை அடுத்து தண்ணீரில் குதித்த ஊபர் நிறுவனம்!

அதன்படி மும்பையின், கேட் ஆஃப் இந்தியா, எலிபேண்டா தீவுகள், மண்டவா ஜெட்டி ஆகிய தடங்களில் போட் சேவையை செய்ய உள்ளது. இதற்காக ஊபர் போட் ஆப் மூலம் சவாரி புக் செய்யலாம். மேலும், 6 முதல் 8 பேர் பயணிக்கும் போட்டுக்கு ரூ. 5,700ம், ஊபர்போட் எக்ஸ்எல் 10 பேருக்கு மேல் அமர்ந்து செல்லும் போட்டுக்கு ரூ. 9,500 என்ற தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், போட்டில் பயணிக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பு கவசமாக லைப் ஜாக்கெட், பாதுகாப்பு வழிமுறை அடங்கிய பேம்ப்ளட் ஆகியவை வழங்கப்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Uber Starts Boat Service First Time In Mumbai. Read In Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X