70 ஆண்டுகளை தாண்டியும் புதுசு போல் ஜொலிக்கும் விண்டேஜ் கார்கள்
நம் நாட்டின் விண்டேஜ் சிட்டி என்று கூறவேண்டுமானால் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரை கூறலாம். அந்நகரை மையமாக கொண்டு ஆண்டு வந்த மஹாராஜாக்கள் பலரும் ஆடம்பரத்துக்கும், அதிகாரத்துக்கும் பெயர் போனவர்கள். குறிப்பாக, அவர்கள் தங்களது ஆடம்பரத்தை வெளியுலகுக்கு பரைசாற்றுவதற்கு கார்களை முக்கியமானதாக கருதினர்.
இன்றும், அவர்கள் பயன்படுத்திய கார்கள் புதுமை குலையாமல், புனரமைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த கார்களை தாஜ் ஓட்டல் குழுமம் நேற்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து பார்வைக்கு வைத்திருந்தது. சில கார்கள் 70 ஆண்டுகளையும் தாண்டி புதுசு போல் ஜொலித்ததும், அந்த கார்களின் பராமரிப்பு பற்றியும் அனைவரும் சிலாகித்து பேசினர். மொத்தம் 20 கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

கண்களுக்கு விருந்து
மொத்தம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த 20 கார்களில் 8 கார்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

1924 ரோல்ஸ்ராய்ஸ் 20 எச்.பி
2008ம் ஆண்டு இந்த கார் சிறந்த விண்டேஜ் ரக காராக விருது பெற்றது.

1924 ரோல்ஸ்ராய்ஸ்
கடந்த 1908 முதல் 1940 வரையிலான காலக்கட்டத்தில் டெர்பி ஆலையில் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் தயாரிக்கப்பட்டன.

1934 ரோல்ஸ்ராய்ஸ் 20- 25 எச்.பி
லிமோசின் ரகத்தை சேர்ந்த இந்த காரை மஹாராஜா பகவத் சிங் தனது கிரிக்கெட் அணியினரை மைதானத்திற்கு அழைத்துச் செல்வதற்கு பயன்படுத்தினார்.

1930 ரோல்ஸ்ராய்ஸ் 20- 25 எச்.பி
இது டூரர் ரகத்தை சேர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் காரை மஹாராஜா பகவத் சிங்கின் விருப்பப்படி பின்னர் டிசைன் மாற்றப்பட்டது.

1934 ரோல்ஸ்ராய்ஸ் பாண்டம் 2
இந்த கார் சிர்ஜி அர்விந்த் சிங் மேவருக்கு சொந்தமானது.

1934 ரோல்ஸ்ராய்ஸ் பான்டம் 2
பொது தகவல்: 1904ம் ஆண்டு கார் பிரியரான சார்லஸ் ரோல்ஸும், பிரபல பொறியாளரான ஹென்றி ராய்ஸும் இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் இருக்கும் மிட்லேண்ட் ஓட்டலில் முதன்முறையாக சந்தித்தனர். இந்த சந்திப்பே ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் உருவாவதற்கு பிள்ளையார் சுழி போட்டது.

1946 எம்ஜி டிசி
இது ஸ்போர்ட்டி ரக கார். உதய்பூர் மஹாராஜாவால் பெரிதும் விரும்பிய வாங்கிய காரும் கூட.

1946 எம்ஜி டிசி
பொது தகவல்: இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் 1945ல் மோரிஸ் நிறுவனம் கார் தயாரிப்பை துவங்கியது. புதிய எம்ஜி டிசி என்ற அந்த கார் 2 பேர் செல்லும் வசதி கொண்டதாக இருந்தது. 4 சிலிண்டர் கொண்ட 1250சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.

1938 கேடில்லாக்
1938 மற்றும் 39 ஆண்டு கேடில்லாக் மாடல்கள் இன்றும் மஹாராஜா வம்சத்தினரின் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்தப்படுகிறது. இரண்டு கார்களும் சேர்ந்த வரும் என்பது கூடுதல் தகவல்.

1938 கேடில்லாக் கார்கள்
1914ல் முதல் வாட்டர் கூல்டு வி8 எஞ்சினை கேடில்லாக்கின் ஹென்றி லீலேண்ட் உருவாக்கினார். இது வெற்றிகரமான எஞ்சினாக உருவெடுத்தது.

இதர கார்கள்
தாஜ் ஓட்டல் நடத்தி விண்டேஜ் கார் கலெக்ஷன் சிறப்பு நிகழ்ச்சியில் பிற கார் மாடல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 1946 புயிக்: டேவிட் டன்பர் புயிக் உருவாக்கிய முதல் கார் மாடல் இது.

1930 ஃபோர்டு
ஃபோர்டு டி.. 1925ம் ஆண்டுகளில் ஃபோர்டு கார்களுக்கான மவுசு குறையத் துவங்கியது. பழைய தொழில்நுட்பம், டிசைன் போன்றவை வாடிக்கையாளர்களை கவரவில்லை.

1959 மோரிஸ் -மைனர் 1000 டிராவலர்
மினி காரை உருவாக்கிய பிரபல டிசைனர் சர் அலெக்ஸ் இசிகோனிஸ்தான் இந்த மோரிஸ் மைனர் காரை வடிவமைத்தவர். 1948ம் ஆண்டு முதல் 1971 வரை மொத்தம் 1.2 மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

வாக்ஸ்ஹால் 12
வாக்ஸ்ஹால்12 டீலக்ஸ் காரின் முதல் உரிமையாளரே உதய்பூர், மேவர் மஹாராஜாதான். டெல்கோ எலக்ட்ரிக் சிஸ்டத்தின் 4 சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications








