உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.20 கோடி மதிப்புக்கு மேல் கார்கள்: ஃபேஸ்புக்கை கலக்கும் படம்!

Written By:

வருகின்ற சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதில் தலைவர்களைவிட அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் ஆதரவாளர்கள் பதினாறு அடி பாய்ந்து வருகின்றனர். குறிப்பாக, சக்திவாய்ந்த சமூக வலைதளங்களில் நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுகளை பெற்றுவிடும் நோக்கில், எதிரி கட்சியின் பலவீனங்களை நடுநிலை வாக்காளர்களுக்கு உணர்த்தி, தம் பக்கம் இழுக்கும் வகையில், சகட்டு மேனிக்கு மீம்ஸ்களையும், படங்களையும் தினசரி வெளியிட்டு வருகின்றனர்.

எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துவிட வேண்டும் என்று ஆளும் கட்சியின் ஆதரவாளர்களும், ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் பிற கட்சிகளும் கங்கணம் கட்டி வேலை பார்த்து வருகின்றன. அந்த வகையில், தலைவர்களை மட்டுமின்றி, அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தேர்தல் நேரத்தில் இலக்காகி உள்ளனர். அந்த வகையில், சமூக வலைதளங்களில் திமுக பொருளாளர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வைத்திருக்கும் கார்கள் குறித்த படம் ஒன்று வைரலாகியிருக்கிறது.

 ஜாகுவார் எக்ஸ்எல்

ஜாகுவார் எக்ஸ்எல்

உதயநிதி ஸ்டாலினிடம் இரு்கும் ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் கார் மாடல் ரூ.1.5 கோடி மதிப்புடையதாக சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த படத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2012ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் தற்போது விற்பனையிலிருந்து விலக்கப்பட்டுவிட்டது.

சக்திவாய்ந்த சொகுசு கார்

சக்திவாய்ந்த சொகுசு கார்

ஜாகுவார் நிறுவனத்தின் அதி சிறந்த சொகுசு கார் மாடல்தான் இந்த ஜாகுவார் எக்ஸ்ஜேஎல். அதாவது, சாதாரண ஜாகுவார் எக்ஸ்ஜே காரைவிட சற்று கூடுதல் நீளம் கொண்டது. இதனால், உட்புறத்தில் அதிக இடவசதி கொண்டது. உயர் வகை லெதர் இருக்கைகள், 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், 1200W பவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் சர்ரவுண்ட் சவுன்ட் சிஸ்டம் போன்றவை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இந்த காரில் உள்ளன. இந்த காரில் 271 பிஎச்பி பவரை வழங்க வல்ல 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சினும், 335 பிஎச்பி பவரை வழங்க வல்ல 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சினும் இருந்தன. 385 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 5.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் டாப் வேரியண்ட்டாக இருந்தது. மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

ஆடி ஆர்8

ஆடி ஆர்8

உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.2 கோடி மதிப்புடைய கார் ஒன்றும் இருப்பதாக அந்த படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த காரின் எக்ஸ்ஷோரூம் விலையே ரூ.2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி ஆர்8 சிறப்புகள்

ஆடி ஆர்8 சிறப்புகள்

இந்த ஸ்போர்ட்ஸ் காரில் இருக்கும் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 533 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 6.71 கிமீ மைலேஜ் தருமாம்.

ரேஞ்ச்ரோவர்

ரேஞ்ச்ரோவர்

இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட்ரோவர் நிறுவனத்தின் பிரபலமான எஸ்யூவி வகை மாடல் ரேஞ்ச்ரோவர். உலகிலேயே மிக சொகுசான எஸ்யூவி கார் மாடல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.2 கோடி என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரேஞ்ச்ரோவர் சிறப்புகள்

ரேஞ்ச்ரோவர் சிறப்புகள்

இந்த காரில் இருக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 244 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த எஸ்யூவியில் 8 ஏர்பேக்குகள், உயர்வகை லெதர் இருக்கைககள், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற பல வசதிகள் உள்ளன. ஆஃப் ரோடு செல்வதற்கும் சிறந்தது.

ஆடி ஏ8எல்

ஆடி ஏ8எல்

இந்த காரும் உதயநிதி ஸ்டாலினிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக நீளமான வீல் பேஸ் கொண்ட சொகுசு செடான் கார்களில் ஒன்று. இதனால், உட்புறத்தில் மிக விசாலமான இடவசதியை கொண்டது. இதன் மதிப்பு ரூ.2.10 கோடி என அந்த ஃபேஸ்புக் பதிவு படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அஸ்டன் மார்ட்டின் கார்

அஸ்டன் மார்ட்டின் கார்

உதயநிதி ஸ்டாலினிடம் அஸ்டன் மார்ட்டின் டிபி9 காரும் உள்ளதாகவும், இதன் மதிப்பு ரூ.2.5 கோடி என அந்த ஃபேஸ்புக் பதிவு கூறுகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

2003ம் ஆண்டு பிராங்க்ஃபர்ட் ஆ்டோ ஷோவில் முதல்முறையாக பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் கேடவுன் ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் கார் மாடலும் இதுவே. இந்த காரி்ல இருக்கும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 503 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வழங்கும். மணிக்கு 295 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

லம்போ அவென்டேடார்

லம்போ அவென்டேடார்

உதயநிதி ஸ்டாலினிடம் லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் காரும் இருப்பதாக அந்த படத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மதிப்பு ரூ.5 கோடியாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

உலகில் அதிகம் விரும்பப்படும் சூப்பர் கார் மாடல். 2011ல் லம்போ மூர்சிலாகோ காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் இருக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 690 பிஎச்பி பவரையும், 689 என்எம் டார்க்கையும் வழங்கும். மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும்.

ஹம்மர் எச்3

ஹம்மர் எச்3

உதயநிதி ஸ்டாலினிடம் ஹம்மர் எச்3 எஸ்யூவி இருப்பது தெரிந்த விஷயம்தான். இந்த எஸ்யூவியின் மதிப்பு ரூ.8 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

முதலில் ராணுவ வாகனமாக பயன்படுத்தப்பட்டு பின்னர் பொது விற்பனைக்கு வந்த எஸ்யூவி. உதயநிதி வைத்திருக்கும் கார் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த எஸ்யூவியில் இருக்கும் 3.7 லிட்டர் டீசல் எஞ்சின் 239 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மதிப்பு

மதிப்பு

திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் கார்களே இல்லை என கூறி வரும் நிலையில், ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.20 கோடிக்கும் அதிகமான மதிப்பில் கார்கள் இருப்பதாக கூறுகிறது. ஆனால், எந்தளவு உண்மை என்பதை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தால் மட்டுமே ஒப்புக்கொள்ள முடியும்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் கார்கள்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் கார்கள்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
udayanithi car collection image viral on Facebook.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark