சென்னை மெரினாவில் இரவு நேர ஸ்ட்ரீட் ரேஸ் சர்க்யூட்.. தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இந்தியாவிலேயே முதல் முதல் முறையாக சென்னையில் இரவு நேர ஸ்ட்ரீட் ரேஸ் சர்க்யூட் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த ரேஸிங் சர்க்யூட் பற்றிய மேலும் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இளைஞர்கள் சிலர் மெரினா பீச் அமைந்திருக்கும் சாலையில் ரேஸ் மற்றும் வாகன ஸ்டண்டில் திடீரென ஈடுபடுவதை நாம் பார்த்திருப்போம். இந்த நிகழ்வுகளை பெரும்பாலும் இரவு நேரங்களில் அந்த பக்கம் பயணிக்கையில் காணலாம். சில நேரங்களிலும் பகலிலும் இளைஞர்கள் சிலர் இந்த செயலில் ஈடுபடுவதுண்டு.

India first night street racing circuit chennai

கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டவர்கள் பலரை கவல்துறை கைது செய்திருக்கின்றது. இந்த நிகழ்வை மீண்டும் யாரும் செய்யக் கூடாது என்பதற்காக பைக்கை பறிமுதல் செய்தல் மற்றும் மிகப் பெரிய அபராதத்தை விதித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளே போலீஸார் அவர்கள் மீது எடுத்திருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழலில் அதே மெரினா பீச் அமைந்திருக்கும் பகுதியில் 'இரவு நேர ஸ்ட்ரீட் ரேசிங் சர்க்யூட்' தொடங்கப்பட்டு இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையை சர்வதேச விளையாட்டு அரங்கில் மீண்டும் சேர்க்கும் விதமாக இதனை தமிழக அரசு செய்திருக்கின்றது.

Night street racing circuit chennai

ஆமாங்க, தமிழக அரசே, பந்தயங்களை நிகழ்த்தும் அமைப்புகளுடன் இணைந்து இந்த செயலை அதிகாரப்பூர்வமாக செய்ய இருக்கின்றது. இதற்காக தமிழக அரசு, ஆர்ஆர்பிஎல் (Racing Promotions Private Limited) உடன் ஓர் ஒப்பந்தத்தைப் போட்டு இருக்கின்றது. இந்தியன் ரேசிங் லீக் மற்றும் எஃப்4 இந்தியன் சேம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளை புரமோட் செய்யும் ஓர் அமைப்பே இந்த ஆர்ஆர்பிஎல் ஆகும்.

இதுவே சென்னையில் விரைவில் இரவு நேர ஸ்ட்ரீட் ரேஸை நிகழ்த்த இருக்கின்றது. இதற்கான சர்க்யூட் தீவு திடலைச் சுற்றி 3.5 கிமீ இடைவெளியில் அமைய இருக்கின்றது. டிராக்கானது மெரினா கடற்கரை, போர் வெற்றி நினைவு சின்னம், நேப்பியார் பாலம் மற்றும் தீவு மைதானம் ஆகிய பகுதிகளிலேயே அமைய இருக்கின்றது.

ஆகையால், போட்டியாளர்கள் பீச்சை ஒட்டிய சாலைகளிலும் சீறி பாய்வாதை நம்மமால் விரைவில் காண முடியும். இந்த 3.5 கிமீ இடைவெளியில் பல சிக்கலான 19 திருப்பங்கள் மற்றும் வளைவுகள் கொண்டிருக்கும் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பகுதிகளே ரேசிங் டிராக்கின் முக்கியமான ஸ்பாட்டுகள் ஆகும்.

விரைவில் இந்த டிராக்கில் இரண்டு விதமான ரேஸ் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு தேதிகளிலேயே போட்டிகள் நடைபெற இருக்கின்றன. எஃப் இந்திய சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய போட்டிகளே புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் நைட் ஸ்ட்ரீட் ரேசிங் சர்க்யூட்டில் நடைபெற இருக்கின்றது.

இத்தகைய ரேசிங் டிராக் அமைவது இந்தியாவில் மட்டுமில்லைங்க தெற்கு ஆசியாவிலேயே இதுதான் முதல் முறை ஆகும். ஆகையால், சர்வதேச விளையாட்டு அரங்கில் சென்னை நிச்சயம் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய டிராக்கையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார்.

விரைவில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என பலர் பங்குக் கொள்ள இருக்கின்றனர். ஆண் மற்றும் பெண்கள் என தனி தனியாக குழு போட்டி நடைபெற இருக்கின்றது. இதற்காக எஸ்டிஏடி ரூ. 42 கோடி முதலீடு செய்ய உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விரைவில் நடைபெற இருக்கும் இந்த போட்டிகளை யாரும் வேண்டுமானாலும் சென்று காண முடியும். சென்னையில் இத்தகைய போட்டி நடைபெற இருப்பது வாகன ஆர்வலர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி இருக்கின்றது. உலக புகழ்பெற்ற மெரினா பீச்சில் வாகனங்கள் சீறி பாய இருக்கின்றன என்பதே பலரின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றது.

Article Published On: Thursday, August 17, 2023, 9:40 [IST]
English summary
Udhay nithi stalin launch chennai formula racing circuit
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+