ரூ.5.8 கோடியில் ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கிய உடுப்பி எம்எல்ஏ!!
எம்ஏல்ஏ., என்றாலே டாடா சுமோ, ஸ்கார்ப்பியோவிலிருந்து அதிகபட்சமாக ஃபார்ச்சூனர் வரை பார்க்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றி எழுதியுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர்.
ஆம், உடுப்பி தொகுதி எம்எல்ஏ., பெரும் விலை கொடுத்து ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக்கியுள்ளார். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டெலிவிரி
உடுப்பி தொகுதி எம்எல்ஏ.,வான பிரமோத் மத்வராஜிற்கு நேற்று அவர் புக் செய்திருந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் வீட்டிற்கே வந்து டெலிவிரி கொடுக்கப்பட்டது.

உடுப்பிக்கு பெருமை
உடுப்பி நகரத்தின் முதல் ரோல்ஸ்ராய்ஸ் என்ற பெருமையையும் மத்வராஜ் எம்எல்ஏ.,வின் ரோல்ஸ்ராய்ஸ் பெற்றிருக்கிறது.

விலை
ரூ.5.8 கோடி விலையில் இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை அவர் வாங்கியிருக்கிறார். இதில் வரியாக மட்டும் ரூ.2.89 கோடியை அவர் செலுத்தியுள்ளார்.

புது வீடு, புது காரு... கலக்கும் பிரமோத்...!!
உடுப்பியின் புறநகர் பகுதியான கோலலகிரியில், பிரம்மாண்டமாக புதிய பங்களா ஒன்றை மத்வராஜ் எம்எல்ஏ., கட்டியிருக்கிறார். இந்த புதிய வீட்டிற்காக ஒரு புது கார் ஒன்றை வாங்க தீர்மானித்து, அதன்படியே இந்த ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை புக் செய்து வாங்கியுள்ளார்.

உழைப்புக்கான பரிசு
நான் புதிதாக கட்டியிருக்கும் வீட்டிற்காக ஒரு புதிய காரை வாங்க எண்ணினேன். அதற்காக, எனது சொந்த உழைப்பில் கிடைத்த பணத்தில் எனது கனவு காரை வாங்கியிருக்கிறேன். மேலும், சமூக வலைதளங்களில் இந்த காரை பற்றி இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

மும்பை டூ உடுப்பி
மும்பையிலுள்ள ரோல்ஸ்ராய்ஸ் டீலரில் இந்த காரை முன்பதிவு செய்திருந்தேன். எனது காரை ஒரு டிரக் மூலமாக எடுத்து வந்து வீட்டிலேயே டெலிவிரி கொடுத்தனர் என்று மத்வராஜ் கூறினார். பிரமோத் மத்வராஜின் ரோல்ஸ்ராய்ஸ்தான் இப்போது உடுப்பி நகரின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.


Click it and Unblock the Notifications