டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்த சில கசப்பான உண்மைகளை இந்த செய்தியில் காணலாம்.

உலக கப்பல் போக்குவரத்து வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத சோக வடுவை ஏற்படுத்திய சம்பவமாக டைட்டானிக் கப்பல் விபத்து கருதப்படுகிறது. கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 12ந் தேதி இரவு 11.40 மணிக்கு பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளானது.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

பனிப்பாறையில் மோதிய பிறகு இரண்டரை மணி நேரத்தில் டைட்டானிக் கப்பல் கடலில் முழுமையாக மூழ்கியதது. இந்த கோர சம்பவத்தில் 705 பயணிகள் உயிரிழந்தனர். டைட்டானிக் விபத்துக்கு காரணமாக பல பாதகமான விஷயங்கள் அமைந்துவிட்டன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

அந்த காலத்தின் உலகின் மிகப்பெரிய உல்லாச கப்பல் என்ற பெருமையை டைட்டானிக் பெற்றிருந்தது. இக்கப்பல் 882.5 அடி நீளமும், 92.5 அடி அகலமும், 175 அடி உயரமும் கொண்டது. இந்த பிரம்மாண்ட கப்பலில் பயணிக்க ஆவலோடு வந்த பயணிகள், பணியாளர்கள் என 2,200 பேரை நடுக்கடலில் தத்தளிக்க விட்டுவிட்டது. பல உயிர்களையும் காவு வாங்கியது.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

டைட்டானிக் கப்பல் செல்லும் வழித்தடத்தில் பனிப்பாறை மிக அருகில் இருப்பது தெரிய வந்தததும், கப்பலை இயக்கிய கமாண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கப்பலுக்கும் பனிப்பாறைக்கும் இடையே 37 வினாடி அளவுக்கே நேரம் இருந்தது.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

இதையடுத்து, டைட்டானிக் கப்பலின் தலைமை அதிகாரி மூர்டோச், கப்பல் எஞ்சினை ரிவர்ஸ் முறையில் இயக்க உத்தரவு போட்டார். கப்பல் செல்லும் திசையையும் மாற்ற கூறினார். அதுவும் பலனளிக்காமல், கப்பல் பனிப்பாறை மீது மோதி விபத்தில் சிக்கிவிட்டது.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினத்தன்று, உயிர்காக்கும் படகுகளில் தப்பிப்பது குறித்த செயல்முறை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆபத்து சமயத்தில் எந்த இடத்தில் பயணிகள் கூட வேண்டும்; அங்கிருந்து உயிர்காக்கும் படகுகளில் எவ்வாறு ஏறி தப்பிப்பது குறித்த செயல்விளக்க நிகழ்வாக இருந்தது.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

ஆனால், கடைசி நேரத்தில் அந்த செயல்விளக்க நிகழ்ச்சியை கப்பல் கேப்டன் ஸ்மித் ரத்து செய்துவிட்டார். ஒருவேளை, அந்த உயிர்காக்கும் படகுகளில் தப்புவதற்கான செயல்விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தால், அதிக பயணிகள் விழிப்புணர்வோடு செயல்பட்டு தப்பி இருக்க முடியும்.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

துரதிருஷ்டவசமாக அந்த செயல்விளக்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், பலர் உயிர் காக்கும் படகுகளில் எவ்வாறு தப்புவது என்பது குறித்த புரிந்துணர்வு இல்லாமல் உயிரைவிட்டனர். டைட்டானிக் கப்பல் கேப்டன் ஸ்மித் செய்த தவறுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

டைட்டானிக் கப்பலில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 2,200 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தப்புவதற்கு தோதுவான எண்ணிக்கையில் உயிர் காக்கும் படகுகள் அந்த கப்பலில் இல்லை. கப்பல் விபத்துக்குள்ளான பிறகுதான் இந்த அதிர்ச்சி தரும் விஷயம் அம்பலமானது.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

பெண்கள், சிறுவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உயிர்காக்கும் படகுகள் இயக்கப்படும். அதேநேரத்தில், பலருக்கும் உயிர்காக்கும் படகுகளில் தப்புவதற்கான வாய்ப்பை இல்லாமல் போனது. டைட்டானிக் கப்பலில் இருந்து சென்ற உயிர்காக்கும் படகுகள் குறைவான பயணிகளுடன் கரையை நோக்கி சென்றன.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

டைட்டானிக் கப்பலில் இருந்த 7ம் எண் உயிர்காக்கும் படகில் 65 பேர் செல்ல முடியும். ஆனால், 24 பேர் மட்டுமே அதில் ஏறி தப்பி இருக்கின்றனர். அதேபோன்று, ஒன்றாம் எண் படகில் 40 பேர் செல்ல முடியும். ஆனால், 7 பணியாளர்களும், 5 பயணிகளும் மட்டுமே சென்றுள்ளனர். கப்பலில் தத்தளித்த பலருக்கும் உயிர் காக்கும் படகில் ஏறுவதர்கான வாய்ப்பு இல்லாமல் போனது.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

டைட்டானிக் கப்பல் பேராபத்தில் இருப்பதை காட்டும் விதத்தில் வானில் விளக்கு ஒளியை செலுத்தி அருகில் இருந்த பிற கப்பல்களுக்கு உதவி கோரும் சமிக்ஞை அளிக்கப்பட்டது. அருகில் இருந்த கர்பாதியா என்ற கப்பல் சிக்னலை பார்த்து உதவிக்கு வந்துவிட்டது.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

சிறிது தொலைவில் கலிஃபோர்னியன் என்ற கப்பலும் சென்றுள்ளது. ஆனால், அந்த கப்பலின் கேப்டன் படுக்கைக்கு சென்று தூங்கி இருக்கிறார். அன்றைய இரவு 12.45 மணிக்கு கலிஃபோர்னியன் கப்பல் பணியாளர்கள் கேப்டனை எழுப்பி ஆபத்து ஒளி சமிக்ஞை குறித்து சொல்லி இருக்கின்றனர்.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

ஆனால், கலிஃபோர்னியன் கப்பலின் கேப்டன் அதனை பெரிதாக எடுத்துக் கொண்டு உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. மேலும், கப்பலில் இருந்த வயர்லெஸ் ஆபரேட்டரும் தூங்க சென்றுவிட்டதால், டைட்டானிக் கப்பலில் விடுக்கப்பட்ட வயர்லெஸ் அழைப்புகளுக்கும் பலன் இல்லாமல் போனது.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

அதேநேரத்தில், கர்பாதியா கப்பல் கடலில் தத்தளித்த பல பயணிகளை காப்பாற்றி, கப்பலில் ஏற்றிக் கொண்டது. கலிஃபோர்னியன் கப்பலும் உரிய நேரத்தில் உதவிக்கு வந்திருந்தால், நிச்சயம் ஏராளமானோரை காப்பாற்றி இருக்க முடியும்.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

டைட்டானிக் கப்பல் விபத்தில் சிக்கியதற்கு பின் 5 நாட்கள் கழித்து அமெரிக்காவின் ஹலிஃபேக்ஸ் என்ற இடத்தில் இருந்து விபத்து பகுதிக்கு மெக்கே- பென்னெட் என்ற கப்பல் அனுப்பப்பட்டது. அங்கு கடலில் மிதந்த உடல்களை மீட்கும் நோக்கில் அனுப்பப்பட்டது.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

அந்த கப்பலில் உடலை பதப்படுத்துவதற்கான எம்பாம்பிங் செய்வதற்கான வசதிகளும், 40 எம்பாம்பிங் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பணியாளர்களுடன் சென்றது. பல டன் ஐஸ் கட்டிகள் மற்றும் 100 சவப்பெட்டிகளும் எடுத்துச் செல்லப்பட்டன.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

மெக்கே- பென்னெட் கப்பல் மூலமாக 306 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அதில், 116 பேரில் உடல்கள் மிக மோசமாக சிதைந்துவிட்டன. அவர்களை அடையாளம் காண்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. உடல்களை மீட்பதற்கு கூடுதல் கப்பல்களும் அனுப்பப்பட்டன.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

மொத்தமாக கடலில் மிதந்த 328 பேரின் உடல்கள் விபத்து பகுதியிலிருந்து மீட்கப்பட்டன. அதில், 119 உடல்கள் மோசமாக சிதைந்ததால், கடலிலேயே புதைக்கப்பட்டன. அவற்றை எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டதாக மருத்துவக் குழு தெரிவித்துவிட்டது.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

டைட்டானிக் கப்பல் விபத்து பெரிய சோகமாக அமைந்தது. ஆனால், கப்பலில் இருந்த சில விஷயங்களும் முகம் சுழிக்க வைப்பதாகவே இருந்தது. இந்த கப்பலில் மூன்றாம் வகுப்பில் பயணித்த 700 பயணிகளுக்கு இரண்டு பாத் டப் மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தது. முதல் வகுப்பில் பயணம் செய்தவர்களுக்கு மட்டுமே தனி குளியலறை வசதி இருந்தது.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

டைட்டானிக் கப்பலில் இங்கிலாந்து தபால் துறையின் அதிகாரப்பூர்வமான அஞ்சல் போக்குவரத்து கப்பலாகவும் இருந்தது. இந்த கப்பலில் தபால் நிலையம் ஒன்றும் செயல்பட்டது. அந்த தபால் நிலையத்தில் 2 இங்கிலாந்து பணியாளர்களும், 3 அமெரிக்க பணியாளர்களும் இருந்தனர்.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

இந்த பணியாளர்கள் 3,423 கோணிப்பைகளில் எடுத்துச் செல்லப்பட்ட 7 மில்லியன் கடிதங்களை கையாண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதுவரை நடந்த டைட்டானிக் கப்பல் தேடுதல் பணிகளில் ஒரு கடிதம் கூட கைப்பற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கடிதங்கள் அமெரிக்காவில் டெலிவிரி செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டன.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

டைட்டானிக் கப்பல் மூழ்கி 73 ஆண்டுகளுக்கு பின்னர் 1985ம் ஆண்டு செப்டம்பர் 1ந் தேதி டாக்டர் ராபர்ட் பல்லார்ட் என்ற அமெரிக்க கடல் ஆராய்ச்சியாளர் மூழ்கிய கிடந்த டைட்டானிக் கப்பலை முதல்முறையாக கண்டறிந்தார்.

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

தற்போது டைட்டானிக் கடல் மட்டத்திலிருந்து 2 கிமீ ஆழத்தில் அந்த கப்பல் மூழ்கி கிடக்கிறது. அந்த கடல் பகுதி யுனெஸ்கோ அமைப்பின் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

டைட்டானிக் சினிமாவில் விலை மதிக்கமுடியாத நீல வைரக்கல் ஒன்று கப்பலில் மூழ்கிவிட்டதாக காட்டப்பட்டது. அது கற்பனையாக சேர்க்கப்பட்ட காட்சிதான். அதேநேரத்தில், டைட்டானிக் கப்பலில் இருந்து ஏராளமான ஆபரணங்கள் மற்றும் அரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டு, பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Ugly Truths About Titani Ship Accident. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X