தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் போட்றுவீங்க!

இந்தியர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்து வருகிறார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் வருது!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் ரூபன் சிங் (Reuben Singh) மிகவும் முக்கியமானவர். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அதிதீவிர ரசிகர் என இவரை கூறலாம். இந்தியரான இவர், இங்கிலாந்தை சேர்ந்த AllDayPA என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் வருது!

சமீபத்தில் 2 புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார்களை ரூபன் சிங் வாங்கியுள்ளார். இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ரூபன் சிங்கிடம் ஏற்கனவே 3 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் இருக்கின்றன. 'ஜூவல்ஸ் கலெக்ஸன்' (Jewels Collection) என்ற பெயரில் ரூபன் சிங் சேகரித்து வரும் கார்களின் ஒரு அங்கமாக அவை இருக்கின்றன.

தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் வருது!

இந்த 3 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களுடன் தற்போது 2 புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களும் இணைந்துள்ளன. இதன் மூலம் ரூபன் சிங்கிடம் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த 5 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களின் கலெக்ஸனுக்கு ஃபெஸ்டிவல் ஆஃப் லைட்ஸ் (Festival of Lights Collection) கலெக்ஸன் என ரூபன் சிங் பெயரிட்டுள்ளார்.

தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் வருது!

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக ரூபன் சிங் இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் சேகரிப்பை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 5 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களும் 5 வித்தியாசமான வண்ணங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. குங்குமப்பூ, சிகப்பு, நீல மாணிக்கம், மாணிக்கம் மற்றும் மரகதம் ஆகிய 5 வண்ணங்களில் இந்த கார்கள் காட்சியளிக்கின்றன.

தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் வருது!

கல்லினன் தவிர இன்னும் நிறைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை ரூபன் சிங் வைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ரூபன் சிங் சில புகைப்படங்களை வெளியிட்டார். இதில் அவரது 7 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை நம்மால் காண முடிந்தது. இந்த கலெக்ஸனில் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் மற்றும் கோஸ்ட் உள்ளிட்ட விலை உயர்ந்த கார்கள் இடம்பெற்றிருந்தன.

தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் வருது!

ரூபன் சிங்கின் டர்பன் கலருக்கு 'மேட்ச்' ஆகும் வகையில் அந்த கார்கள் வெவ்வேறு வண்ணங்களில் இருந்தன. இதற்கு அடுத்தபடியாக மேலும் 6 புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை அவர் தனது கலெக்ஸனில் சேர்த்தார். இதில், ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII மற்றும் கல்லினன் ஆகிய கார்கள் அடங்கும். இந்த சூழலில் தற்போது மேலும் 2 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களை ரூபன் சிங் வாங்கியுள்ளார்.

தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் வருது!

ஒட்டுமொத்தத்தில் 15 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை ரூபன் சிங் வைத்துள்ளார். இதுதவிர புகாட்டி வேரோன் (Bugatti Veyron), போர்ஷே 918 ஸ்பைடர் (Porsche 918 Spyder) மற்றும் லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) உள்ளிட்ட கார்களையும் ரூபான் சிங் வைத்துள்ளார். உண்மையிலேயே அவரது கார் கலெக்ஸன் நமக்கு பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.

தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் வருது!

ரூபன் சிங் நமக்கு புதியவர் கிடையாது. ஆங்கிலேயர் ஒருவர் இனவெறியை தூண்டும் வகையில் கிண்டல் செய்த காரணத்தால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தன்னுடைய டர்பன் நிறத்திற்கு 'மேட்ச்' ஆகும் வகையில் விதவிதமான வண்ணங்களில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்தவர்தான் இவர். இந்த செய்தி வெளியானதில் இருந்து ரூபன் சிங் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்.

தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் வருது!

அவர் தற்போது வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை 6.95 கோடி ரூபாய் ஆகும் (இந்திய சந்தையில்). இதுவும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். அதுவும் 'கஸ்டமைசேஷன்' எதுவும் இல்லாமல்தான் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை இந்த விலைக்கு வாங்க முடியும். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 'கஸ்டமைசேஷன்' ஆப்ஷனை வழங்கி வருகிறது.

தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் வருது!

அதாவது வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காரை 'மாடிஃபிகேஷன்' செய்து கொள்ளலாம். இப்படி 'மாடிஃபிகேஷன்' செய்யும்பட்சத்தில் விலை இன்னும் கூடுதலாக வரும். ஆனால் ரூபன் சிங் புதிதாக வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் என்னென்ன மாடிஃபிகேஷன்களை செய்துள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை.

தீபாவளிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்த இந்தியர்... ஒரு காரின் விலையை கேட்டாலே மயக்கம் வருது!

வாழ்க்கையில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரையாவது வாங்கி விட வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கிறது. அவர்களுக்கு ரூபன் சிங்கின் கதை உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எதிர்காலத்தில் ரூபன் சிங் இன்னும் நிறைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்குவதற்கு நாம் நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Uk based indian reuben singh s ultra luxury car collection
Story first published: Friday, November 12, 2021, 15:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X