திருடு போன ரூ23லட்சம் காரை கூகுள் எர்த் மூலம் கண்டு பிடித்த இளைஞர்! போலீஸ் செய்தது மன்னிக்கவே முடியாத தப்பு!

கூகுள் எர்த் உதவியால் இளைஞர் ஒருவர் தன் தொலைந்து போன காரை அவரே தேடி கண்டுபிடித்த சுவாரஸ்யமான சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இங்கிலாந்து நாட்டின் பிரிங்மின்ஹம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜாய் ராபின்சன். 23 வயதான இவர் தன் வீட்டில் சியட் என்ற ஸ்போர்ட்டி காரையும் போக்ஸ்வாகன் கோல்ஃப் என்ற காரையும் சொந்தமாக வைத்துள்ளார். இவர் வீட்டிற்கு கீழே உள்ள கார் பார்க்கிங்ல் இவரது காரை பார்க் செய்துள்ளார். வழக்கமாக இவர் தனது காரில் தான் வேலைக்கு சென்று வருகிறார்.

stolen car recovered from google earth

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக தன் கார் பார்க்கிங்குக்கு செல்லும்போது அங்கு அவர் கண்ட காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பார்க்கிங்கில் அவர் நிறுத்தி இருந்த இரண்டு காரையும் காணவில்லை. கார் இல்லாமல் வெறும் பார்க்கிங் மட்டுமே இருந்தது. மேலும் பார்க்கிங்கின் கதவுகள் எல்லாம் உடைக்கப்பட்டிருந்தது.

இதை பார்த்ததும் அவர் தன் காரை யாரோ திருடி விட்டார்கள் என புரிந்து கொண்டார். அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்தார். இவரது ஸ்னாப்சேட் ஆப்பிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது. அதில் அவரது காரை தான் திருடி வைத்திருப்பதாகவும் அதை மீட்க வேண்டும் என்றால் 2000 பவுண்டு இந்திய மதிப்பில் ரூபாய் சுமார் 2 லட்சம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த அவரது தன்னிடம் தான் கார் இருப்பது என்பதை உறுதி செய்வதற்காக காரின் பிளர்ரான ஒரு புகைப்படத்தை அனுப்பி இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் ராபின்சன் உடனடியாக தனது நண்பரை தொடர்பு கொண்டு இது குறித்து விவரம் கூறி உதவி கேட்டுள்ளார். அவரது நண்பரும் அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்து அந்த புகைப்படத்திற்கு பின்னால் உள்ள பில்டிங் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவினார்.

அதன்படி கூகுள் எர்த் மூலம் குறிப்பிட்ட இந்த பில்டிங் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை இருவரும் அறிந்து கொண்டனர். உடனடியாக இது குறித்து அவர்கள் போலீசுக்கு புகார் செய்தனர். ஆனால் அப்பகுதியில் உள்ள போலீசார் இரண்டு நாட்களாக இது குறித்து தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து ராபின்சன் அவரை களத்தில் இறங்க முடிவு செய்தார். அவரது வீட்டில் இருந்து சுமார் ஆறு மைmf தொலைவில் உள்ள குறிப்பிட்ட அந்த பில்டிங் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு இவரது கார் கேட்பாரற்று சாவியுடன் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அவரை தனது காரை மீட்டு பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார்.

ஆனால் இவர் வீட்டில் இருந்து திருடு போன சியட் ஸ்போர்ட்டி கார் எனப்படும் 23,000 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 23.31 லட்சம் மதிப்பிலான காரும் அதே நேரம் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் எனப்படும் 16 ஆயிரம் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 16.23 லட்சம் மதிப்பிலான காரும் ஆகும்.

இதில் சியட் ஸ்போர்ட் கார் மட்டுமே இவருக்கு கிடைத்துள்ளது. இவரது ஃபோக்ஸ்வேகன் கார் இன்னும் இவருக்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருந்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இது குறித்து கருத்திட்டு வருகின்றனர். இவரின் கார் கண்டுபிடிப்பதற்கான முயற்சியே பலர் பாராட்டி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் கார் திருட்டு என்பது தொடர்ந்து அதிகமாக நடந்து கொண்டே தான் இருக்கிறது. பொது இடங்களில் நிறுத்தப்படும் கார்களை அதிகம் திருடுகின்றனர். இதனால் உங்கள் கார்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்துவது என்றுமே கார் திருட்டை தடுக்க ஒரு நல்ல வழிமுறையாக இருக்கும். உங்கள் கார் திருடப்பட்டாலும் அது இருக்கும் இடத்தை உடனடியாக கண்டறிந்த காரை மீட்க உதவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 31, 2023, 21:11 [IST]
English summary
Uk man retrieves stolen car using google earth when police didnt act
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+