தண்ணீரில் மூழ்கி கிடக்கும் விலை மதிப்பற்ற மாணிக்கங்கள்! கார் காதலர்களை ரத்த கண்ணீர் விட வைத்த புகைப்படங்கள்!

துபாய் நகரத்தை மீண்டும் கனமழை புரட்டிப் போட்டு எடுத்திருக்கின்றது. நேற்று முன்தினம் (மே 3) பெய்த மழையால் மீண்டும் துபாய் நகரம் வெள்ளக் காடாக மாறியிருக்கின்றது. சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்த நகரம் கடும் மழையின் காரணமாக வெள்ள நீரில் மூழ்கியது.

இந்த நிலையிலேயே தற்போது மீண்டும் கனமழையால் அந்த நகரம் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளது. 75 ஆண்டு காலம் வரலாறு காணாத மாழையே கடந்த ஏப்ரல் மாதத்தில் துபாய் நகரத்தில் பொழிந்நதது. ஓராண்டு முழுக்க பொழிய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

Luxury cars in flood

இத்தகைய மிக மோசமான மேக வெடிப்பின் காரணத்தினால் நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்தது. சென்னை, தூத்துக்குடியையே மிஞ்சும் அளவிற்கு மழை வெள்ள நீர் அந்நகரத்தை சூழ்ந்தது குறிப்பிடத்தகுந்தது. இதனால், துபாய் வாசிகளின் அன்றாட வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிப்படைந்தது.

குறிப்பாக, வாகனங்கள் பல தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்தன. இந்த நிலையிலேயே பல சொகுசு மற்றும் அரிய வகை ஆடம்பர வகை கார்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கும் அதிர்ச்சியான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த வீடியோ வாகன காதலர்களை சோகத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

துபாய், ஷார்ஜா உள்ளிட்ட நகரங்கள் கடும் மழை காரணமாக தற்போது வெள்ள நீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இங்குள்ள கார் ஷோரூம்களும் வெள்ள நீரில் மூழ்கி இருக்கின்றன. மிகவும் அபூர்வமான மற்றும் அல்ட்ரா லக்சூரி வகை கார்களும் இந்த வெள்ளத்தில் தப்பிக்கவில்லை என்பதை வேதனையளிக்கக் கூடிய ஒன்றாக மாறி இருக்கின்றது.

லம்போர்கினி அவென்டேடார் எஸ்வி ரோட்ஸ்டர், ஹூராகேன், சியான் கூபே (இது மிகவும் அரிய வகை கார் மாடல் ஆகும்). ஒரு சில முக்கியமான வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு வழங்கும் பொருட்டே இந்த காரை லம்போர்கினி தயார் செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி உலக அளவில் 63 சியான் கூபே வகை கார் மாடலே உலக அளவில் இருக்கின்றது.

இத்துடன், 19 சியான் ரோட்ஸ்டர்கள் உள்ளன. இந்த கார் மாடலின் ஒன்றின் விலையே ரூ. 32 கோடி ஆகும். இத்தகைய விலை உயர்ந்த உயரிய அரிய வகை கார்களே தற்போது தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. இந்த கார் மாடல்கள் மட்டுமல்ல மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவி, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் 2 போன்ற கார் மாடல்களும் தண்ணீரில் மூழ்கி இருக்கும் படங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஒவ்வொன்றும் 4 கோடி ரூபாய் முதல் 9 கோடி ரூபாய் வரை விலைக் கொண்டவை ஆகும். இதுபோன்று ஏகப்பட்ட விலை உயர்ந்த கார் மாடல்கள் தற்போது தண்ணீரில் மூழ்கி இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக ரூ. 400 கோடி முதல் ரூ. 800 வரை மதிப்புள்ள கார்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என கணிக்கப்பட்டு இருக்கின்றது.

ஆனால் துள்ளியமான மதிப்பு விபரங்கள் வெளியாகி இருக்கின்றது. மேலே பார்த்த கார் மாடல்கள் மட்டுமின்றி பகானி ஹைப்பர் வகை கார்களும் தண்ணீரில் மூழ்கி இருக்கின்றன. இந்த கார் மாடலின் ஒன்றின் விலை மட்டுமே ரூ. 35 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. உலகின் அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட கார் மாடலே பகானி ஆகும். இது தண்ணீரில் மூழ்கி, சேறும், சகதியுமாக இருப்பது பார்ப்போரை வேதனை அடையச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது வாகன உற்பத்தி நிறுவனங்கள் தாமாக முன் வந்து சர்வீஸ் சேவையை அறிவித்தன. இதேபோல், துபாய் மற்றும் ஷார்ஜாவிலும் மழை நீரில் மூழ்கிய வாகனங்களுக்கு சிறப்பு சேவையை வாகன உற்பத்தி நிறுவனங்கள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 5, 2024, 6:00 [IST]
English summary
Ultra super luxury cars drowned in flood in dubai
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+